இந்தியன் வங்கியின் மண்டல ம முதுநிலை மேலாளர் சிவகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை

பந்தலூர் இந்தியன் வங்கியின் சேவை குறைபாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் இன்று பந்தலூர் இந்தியன் வங்கியின் மண்டல ம முதுநிலை மேலாளர் சிவகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் பந்தலூர் இந்தியன் வங்கியின் சேவை குறைபாடுகள் ஏடிஎம் சேவை பாதிப்பு உள்ளிட்டவற்றை சரிசெய்ய வலியுறுத்தி இந்தியன் வங்கி தலைவர், மண்டல மேலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பபட்டது.  இதன் அடிப்படையில் இந்தியன் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் சிவகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது, 
இதில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  ஆலோசகர் காளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ் பந்தலூர் வியாபாரிகள் சங்க தலைவர் அசரப் பொருளாளர் கிருஸ்ணகுமார் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நொளசாத், செயலாளர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
இதில் பந்தலூர் ஏடிஎம் இயந்திரம் அடிக்கடி பழுதாகி இருப்பதால் வாடிக்கையாளர்கள் மிகப்பெரும் பாதிப்படை கின்றனர்.  இந்த இயந்திரத்தை சரிசெய்ய வேண்டும் மேலும் கூடுதல் இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் தாகதமுறையில் நடந்து கொள்ள கூடாது, கடன் கேட்டு வருவோரை அலைகழிக்க கூடாது,  ஓய்வூதியம் பெற வருவோருக்கு விண்ணப்பங்கள் எழுதிகொடுக்க ஒருவரை நியமிக்க வேண்டும்.  ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற எளிய நடைமுறையை கையாள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோன்¢க்கைகள் முன் வைக்கப்பட்டன. 
இவற்றுக்கு பதிலளித்த முதுநிலை மேலாளர் சிவகுமார் கூறும்போது வங்கியின் வாடிக்கையாளர்களை மதிக்காமல் நடந்துகொள்வது வருத்தம் அளிக்க கூடியது பந்தலூர் இந்தியன் வங்கியின் சேவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படும்.  இவ்வங்கியின் ஏடிஎம் இயந்திரம் தொழிற்நுட்ப கோளாறு ஓரிரு நாட்களில் சரிசெய்யபடும் கூடுதல் ஏடிஎம் இயந்திரம் பணம் போடும் வசதியுடன் அமைக்க தலைமையகத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.  தற்போது 52000 ஓய்வூதியதாரர்கள் இங்கு கணக்கு வைத்து உள்ளனர். அவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் நலன் கருதி ஓய்வூதியம் வழங்க தனிநபர் நியமனம் செய்ய அவர் மூலம் தனியாக வழங்கப்படும். இதனால் வங்கிக்கு வரும் கூட்டம் குறையும்.  வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  வங்கியின் வராக்கடன் தற்போது 13 சதவீதமாக உள்ளது.  பெரும்பாலும் கல்வி கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில்லை.  இதனால் புதிதாக கடன் கேட்போருக்கு கடன் வழங்குவதில் சிரமம் நீடிக்கிறது.  கடன் வழங்க சில நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் கடன் உடனடியாக வழங்கப்பட இயலவில்லை.  தலைமையகத்தில் பேசி கூடுதல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க உரிய முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் என்றார். 

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...