CCHEP 2016 CONSUMER AWARENESS N.S.S PANDALUR






பந்தலூர் 2016 ஜன 29
நாட்டு நலப்பணி திட்ட முகாமில் நுகர்வோர் விழீப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைப்பெற்று வருகின்றது.

இந்த முகாமில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நிகழ்ச்சியினை துவக்கி வைத்த பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் தண்டபாணி பேசும்போது   நுகர்வோர் நலன்கருதி பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  ஆனால் அவற்றை  நுகர்வோர்கள் அறிந்து கொள்ளவில்லை.   சட்டங்களை படித்து தெரிந்து கொள்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.  நுகர்வோர் விழிப்புணர்வு இன்மையாலும், நுகர்வோர் குறைகளை சுட்டி காட்ட தயங்குவதாலும் நுகர்வோர்கள் அதிகபடியாக ஏமாற்றப்படுகின்றனர் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது

தேவையை மீறி அதிக அளவு பொருட்களை நாம் பயன்படுத்த தூண்டப்பட்டுள்ளோம்.  பாரம்பரியமாக பயன்படுத்திய பொருட்களினால் உடல் நலம் காக்கப்பட்டது.  தற்போது உடல் நலன் காப்பதாக  விளம்பரப்படுத்தப்படும் பொருட்களால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றது.
இதனால் அடிக்கடி மருத்துவமனைகளை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  ஆடம்பர தேவைக்கு செலவிடுவதால் சேமிப்பும் குறைந்து கடனில் வாழும் நிலை உள்ளது.  தரமான பொருட்களை தேவையை உணர்ந்து பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

CCHEP 2016 GANTHI ANNIVERSARY 31.01.2016


ஜனவரி   30   2016

பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் மகாத்மா காந்தியின்  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர்மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

அவரது கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.  தூய்மை இந்தியா, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட உறுதிமொழிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட சித்தா மருத்துவஅலுவலர் கணேசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், அபதாகீர், பிரபு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இந்திராஜித், தணிஸ்லாஸ், 

நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

CCHEP 2016 NATIONAL YOUTH DAY UPPATTY 12.01.2016



2016
ந்தலூா்ஜன., 12: 
பந்தலூா் அருகே உப்பட்டியில் தேசிய இளையோர் தினம் மற்றும் இரத்தகொடையாளா்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.  கூடலூா் நுகா்வோர் மனித வள சுற்றுச்சூழல்பாதுகாப்பு மையம்,   சாலோம் தையல் பயிற்சி மையம்,  எஸ்.ஒய்.எஸ் அமைப்பு உப்பட்டி கிளைஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு உப்பட்டி எஸ்ஒய்எஸ் அமைப்பு தலைவா் ஐமுட்டிதலைமை தாங்கினார்நுகா்வோர் பாதுகாப்பு மைய தலைவா் சிவசுப்பிரமணியம் வரவேற்றார்கூடலூா்நுகா்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய ஆலோசகா் காளிமுத்து,  உப்பட்டி வியாபாரிகள் சங்கதலைவா் பாலகிருஸ்ணன்,  சாலோம் மைய இயக்குனா் விஜயன் சாமுவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.  தேவாலா பழங்குடியினா் பள்ளி தலைமை ஆசிரியா் சமுத்திரபாண்டியன்தேவாலா கிராமநிர்வாக அலுவலா் ராஜ்கமல் ஆகியோர் பேசினார்கள்முன்னதாக உப்பட்டியில் நடைப்பெற்ற இரத்த தானமுகாமில் இரத்த கொடை தந்த தன்னார்வலா்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றுகள் வழங்கிகவுரவிக்கப் பட்டது.   நிகழ்ச்சியில்  சமூக ஆா்வலா்கள் தியாகராஜாஎஸ்ஒய்எஸ் நிர்வாகிகள் ஷெபிர்,உனேஷ்நேரு இளையோர் மன்ற நிர்வாகிகள் இசாக்ஷாஜகான்உப்பட்டி தையல் பயிற்சி மையமாணவிகள்இரத்த கொடையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்உப்பட்டி தையல் பயிற்சி மையஆசிரியை சுலோச்சனா நன்றி கூறினார்.
புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

CCHEP 2016 NETHJI BIRTHA DAY 23.01.2016


https://www.youtube.com/watch?v=_aJmyuh05mw&feature=youtu.be
பந்தலூர் 

நேதாஜியின் 120 வது பிறந்த நாள் விழா பந்தலூரில் கொண்டாடப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 120 பிறந்த நாளை முன்னிட்டு பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து அவரது உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நேதாஜியின் சுதந்திர போராட்டத்தின் பங்கு குறித்து நினைவு கூரப்பட்டது.  தொடர்ந்து இணிப்புகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆண்டனி, மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், பிரபு, அபுதாகீர், தணீஸ்லாஸ், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...