CCHEP 2016 GANTHI ANNIVERSARY 31.01.2016


ஜனவரி   30   2016

பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் மகாத்மா காந்தியின்  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர்மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

அவரது கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.  தூய்மை இந்தியா, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட உறுதிமொழிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட சித்தா மருத்துவஅலுவலர் கணேசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், அபதாகீர், பிரபு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இந்திராஜித், தணிஸ்லாஸ், 

நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...