https://www.youtube.com/watch?v=_aJmyuh05mw&feature=youtu.be
பந்தலூர்
நேதாஜியின் 120 வது பிறந்த நாள் விழா பந்தலூரில் கொண்டாடப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 120 பிறந்த நாளை முன்னிட்டு பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து அவரது உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நேதாஜியின் சுதந்திர போராட்டத்தின் பங்கு குறித்து நினைவு கூரப்பட்டது. தொடர்ந்து இணிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆண்டனி, மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், பிரபு, அபுதாகீர், தணீஸ்லாஸ், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment