புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள்


பெறுனர்
உயர்திரு. ஆணையாளர் அவர்கள்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
எழிலகம் சேப்பாக்கம் சென்னை.

பொருள்: புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள்  இ சேவை மையங்களில்
      வழங்குவதில் முறையாக அச்சாகதகாரணத்தால் சேவை பாதிப்பு
      நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்
           
            நீலகிரி மாவட்டத்தில் புதிதாக அரசால் வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டுகள்  பயன்பாட்டில் செயல்பட்டு வருகின்றது.  எனினும்,  அரசால் புதிதாக குடும்ப  அட்டைக்கு விண்ணப்பித்து பெறும் புதிய குடும்ப அட்டை பெறும் நபர்கள் மற்றும்  இ சேவை மையங்களில் புதிதாக ஸ்மார்ட் கார்டுகள் பிரிண்ட் எடுத்து கொடுக்கின்றனர்.
           
            மேலும் பழைய குடும்ப அட்டைகள் தொலைந்து போனது, மற்றும் முகவரி மாற்றம் பெயர் மாற்றம், புகைப்படம் மாற்றம் என ஏதேனும் திருத்தங்கள் மேற்க்கொண்டு இருப்பின் அவர்கள் புதிதாக இ சேவை மையங்களில் புதிதாக பணம் கொடுத்து ஸ்மார்ட் கார்டுகள் பிரிண்ட் எடுத்து பயன்படுத்துகின்றனர்.

            இ சேவை மையங்களில் பிரிண்ட் எடுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் பின்பக்கம் கொடுக்கப்பட்டு உள்ள ரகசிய குறியீடு பிரிண்ட் ஆகும் பகுதியில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பிரிண்ட் எடுக்க பட முடியாமல்  உள்ளது. 

முன்பின் பக்கவாட்டுகளில் தள்ளி பிரிண்ட் எடுக்கப்படுவதால் இந்த கார்டுகள் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரங்களில் ஸ்கேன் செய்ய இயலாமல் அந்த கார்டுகள் சேவை பெற இயலாமல் பாதிக்கப் படுகின்றனர்.  

இ-சேவை மையங்களில் வழங்கப்படும் கார்டுகள் முறையாக பிரிண்ட் எடுத்து கொடுக்க உரிய ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
                                                                                                            இப்படிக்கு



                                                                                                  சு. சிவசுப்பிரமணியம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...