கூடலூர் வட்டார அளவிலான இளையோர் பாராளுமன்ற கூட்டம்

ூடலூர்  கூடலூரில்  இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் கூடலூர் வட்டார அளவிலான இளையோர் பாராளுமன்ற கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு கூடலூர் தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி தலைமை தாங்கினார்தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் பேசும்போது இளைஞர்கள்  வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காமல் அவதிபடுவதை விட கிடைத்த வாய்ப்பை கொண்டு முன்னேற வேண்டும்இளைஞர்கள் இரத்த தானம் செய்வதால் பல உயிர்களை காக்க முடியும் தன்னார்வ சேவையில் அதிகம் நாட்டம் கொள்ள வேண்டும் என்றார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சத்தியநேசன் பேசும்போது  சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததுஇளைஞர்களால் தான் எதிர்கால மாற்றத்தை உருவாக்க முடியும்அதுபோல சிறப்பான நாடு மற்றும் வீட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இளைஞர்கள் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்பலருக்கும் அவர்களுக்கான அரசு தேவையை பெற வழிமுறையை தேர்வு செய்ய பெற்றுக்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர் அவற்றை தடுக்க இளைஞர்கள் கிராமங்களில் வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து  இளையோர் பாராளுமன்றம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக சமூக ஆர்வலர் சத்தியசீலன் வரவேற்றார்.
முடிவில் செல்வகுமார் நன்றி கூறினார்,


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...