உப்பட்டியில் நுகர்வோர் விழிப்புணர்வு


பந்தலூர் அருகே உப்பட்டியில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

நடைப்பெற்றது.  உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி குடிமக்கள்

நுகர்வோர் மன்றம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன
சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜேந்திரன்

வரவேற்றார்.

இந்த கூட்டத்திற்கு பள்ளி
உதவி தலைமை ஆசிரியர்  பிஜோ தலைமை தாங்கி பேசும்போது
இன்று கலப்படம் அதிகமாக உள்ளது,  உணவுப்பொருட்களில் கலப்படம் உள்ளதால்
பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே மாணவர்கள்
விழிப்பபோடு இருப்பது அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி காளிமுத்து பேசும்போது

மாணவர்கள்  கல்வியோடு பொது அறிவையும் பெறவேண்டும்,  

சந்தையில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும் நல்லது எது, கெட்டது எது என்பதை பிரித்தறியும் தன்மை
அறிவு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.  தரமான பொருட்களை அறிந்து கொண்டு
கலப்படங்கள் மற்றும் போலி பொருட்களை கண்டறிந்து அது குறித்து பொது
மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்லவே மாணவர்கள் மத்தியில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றங்கள் செயல்படுத்த படுகின்றன என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது

நாம் பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றவையாகவோ, உடலுக்கு
தீங்கு விளைவிக்க கூடியவையாகவோ உள்ளது.  

தரமான பொருட்கள் குறித்து
அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்,  ஒவ்வொரு பொருளின் பொட்டலத்தின்
மேற்பகுதியில் பொருளின் சேர்மங்கள் குறித்து பார்க்க வேண்டும்,  பொருளின்
உபயோகம், பொருளினை பயன்படுத்தும் விதம், பொருளின் காலவதி தேதி, தயாரிப்பு
நிறுவனம் போன்றவை பார்த்து வாங்க வேண்டும்,  

காலையில் பயன்படுத்தும்
பற்பசை முதல் இரவு தூங்கும் வரை பயன்படுத்தும் பொருட்களின் தன்மைகள்
பயன்கள் குறித்து பகுத்தறிந்து பயன்படுத்துவது நுகர்வோரின் கடமையாகும்
என்றார்.

தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் மனோஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...