அபராத ஆயுதம்;

அபராத ஆயுதம்; சுகாதாரம் காக்க ஆயத்தம்:சுற்றுலா நகரில் தூய்மைப் பணிகள் 'ஜரூர்' நன்றி தினமலர்


Home
ஊட்டி: சுற்றுலா நகரில் சுத்தம், சுகாதாரம் காக்க, அபராதம் என்ற ஆயுதத்தை, மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது; 
விளைவு, இதுவரையில்லாத விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நீலகிரியில், 
சுத்தம், சுகாதாரத்தை பேணி காக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வீதி, தெருக்கள் என, பொது இடங்களில் குப்பை குவியல் இல்லாத நிலையை உருவாக்கி, சுகாதார சீர்கேடுக்கு விடை கொடுக்கும் பணி, மாவட்டம் முழுக்க முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஆங்காங்கே காணப்படும் குப்பை குவியல், திறந்த வெளிக் கழிவுநீர் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுப்பதன் மூலம், சுகாதாரத்தை காக்க முடியும் என்ற அடிப்படையில், 
கொசு உற்பத்தியாகும் சூழலை உருவாக்கும் வகையில், சுற்றுப்புறத்தை வைத்திருப்போருக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.
அதன் விளைவு, பல இடங்களில் உள்ள மக்கள், தங்கள், வீடுகளின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வதிலும், வளர்ந்துள்ள செடி, கொடி, முட்புதர்களை அகற்றுவதையும் பார்க்க முடிகிறது.

அபராதம் நிர்ணயம்
தொடர்ச்சியாக, அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று முறை செய்யும் அதே தவறுகளுக்கு, மாறுபட்ட அபராதத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொசு உற்பத்திக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருக்கும் தனி நபர் வீடுகளுக்கு, முதன் முறை, விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்படும். 
ரண்டாம் முறையும் அதே தவறை செய்தால், 150 ரூபாய், மூன்றாம் முறையும் தவறு கண்டறியப்பட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பிளாட்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, முதன் முறை, 500, இரண்டாம் முறை, 5,000, மூன்றாம் முறை, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வணிக பயன்பாட்டு கட்டடங்கள் மற்றும் பிளாட்களுக்கு முதன் முறை, 10 ஆயிரம், இரண்டாம் முறை, 20 ஆயிரம், மூன்றாம் முறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தொழிற்சாலைகளுக்கு, முதல் மூன்று முறை செய்யும் தவறுகளுக்கு தண்டனையாக, 25 ஆயிரம், 50 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐம்பது படுக்கைகளுக்கு அதிகமாக உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு, ஒரு லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாயும், 
50 படுக்கைகளுக்கு குறைவாக உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு, 25 ஆயிரம், ஒரு லட்சம், 2 லட்சம் ரூபாயும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1,000 மாணவர்களுக்கு அதிகமாக செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு, முதன் முறை அபராதமாக, 25 ஆயிரம், இரண்டாம் முறை ஒரு லட்சம், மூன்றாம் முறை, 2 லட்சம் ரூபாயும், 
1,000 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு, 5,000, 25,000 மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறிய கடைகள், சிறிய வர்த்தகர்களுக்கு, 500, 2,000, 5,000 ரூபாய், 

சாலையோர ரெஸ்டாரண்டுகள், சிறிய தொழிற்சாலைகளுக்கு, 10,000, 25,000 மற்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நட்சத்திர மற்றும் அதற்கு மேலான அந்தஸ்து பெற்ற ஓட்டல், லாட்ஜ்களுக்கு, ஒரு லட்சம், 5 லட்சம் மற்றும், 10 லட்சம் ரூபாயும், 
பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...