ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,192 டன் ஜவ்வரிசி பறிமுதல்

ராசிபுரம், சுற்றுவட்டார பகுதியில், உணவு பாதுகாப்பு துறையினர் செய்த அதிரடி சோதனையில், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,192 டன் ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதியான, அத்தனூர், மசக்காளிப்பட்டி, ஆண்டகளூகேட், அப்புநாயக்கன்பட்டி, மெட்டாலா, அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதி குடோன்களில், 
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கவிக்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள், நான்கு குழுக்களாக பிரிந்து சோதனையிட்டனர். 

இதில், ஐந்து குடோன்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள், மூன்று மில்களில் இருப்பு வைத்திருந்த, 1,192 டன் ஜவ்வரிசியை பறிமுதல் செய்து, அவற்றின் மாதிரியை சோதனைக்கு அனுப்பினர். 

இவற்றின் மொத்த மதிப்பு, ஆறு கோடி ரூபாய். உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள, 22 குடோன்களில், இதுவரை, 14 குடோன்களில் சோதனையிட்டுள்ளனர். 

மீதியுள்ள, எட்டு குடோன்களில், தொடர்ந்து சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இதுகுறித்து, கவிக்குமார் கூறியதாவது: புகாரின் பேரில், தொடர் சோதனையை நடத்தி வருகிறோம். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில், உற்பத்தி தேதி குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது குறிப்பிட்ட தேதிக்கு பிறகு குடோனில் இருப்பு வைத்திருந்தாலும், அது காலாவதியானதாக கருதப்படும். அதன்படி, 1,192 டன் ஜவ்வரிசியை பறிமுதல் செய்துள்ளோம். 

இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...