சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் கூடலூர் காவல்துறை,
கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மையம், தொழிற் பயிற்சி மையம் ஆகியன
இணைந்து 
சாலை  பாதுகாப்பு மற்றும் நீலதிமிங்கலம் விளையாட்டு
குறித்து விழிப்புணர்வு முகாம்  நடத்தப்பட்டது.

பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் வரவேற்றார்.

முகாமிற்கு தலைமை தாங்கிய கூடலூர் காவல்துறை ஆய்வாளர் சக்திவேல்
பேசும்போது 

காவல்துறை மக்களிடம் நண்பர்களாக பழகுகின்றோம்.  தவறு
செய்பவர்களை தண்டிப்பது  காவல்துறை  நோக்கமல்ல. 

ஆனால் தவறு செய்பவர்களை
திருத்த வேண்டியது அவசியம்.   இரண்டு மூன்று முறை எச்சரித்து விடுவோம்.
அதற்கு பின் உரிய தண்டனை வழங்க  சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.  சட்டம்


நம்மை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டுள்ளது.  சாலைவிதிகளை அறிந்து
செயல்படுவது அவசியம். 

கூடலூர்  பகுதியில் இருவர் புளுவேல் எனப்படும்
நீலதிமிங்கலம் விளையாட்டில்  ஈடுபட்டவர்களை மீட்டுள்ளோம்.  இதற்கு
அடிமையாகி இருப்பவர்கள் அனுகினால் அவரகளை  மீட்டு பாதுகாப்பு
நடவடிக்கைகள் மேற்க்கெள்ளப்படும்.  

மாணவர்களுக்கு காவல்துறை  பணிகள்
குறித்து நேரடி செயல்விளக்கம் தரவும் பணிகள் குறித்து நேரடி விளக்கம்
அளிக்க  தயாராக உள்ளோம் என்றார்.

போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் சத்தியன் பேசும்போது 

சாலைவிதிகளை
மீறும் பழக்கம் இளம்பருவத்தினரிடையே அதிகரித்து வருகின்றது.  அதுபோல இளம்
பருவத்தினரிடம் விபத்துக்களும்  அதிகரித்து பாதிப்புகளும்
அதிகரித்துள்ளது. 

லைசென்ஸ் இல்லாமல்  வாகனங்களை இயக்குவது தவறு.  18
வயதிற்க்கு உட்பட்டவர்கள் வாகணங்களை இயக்குவதை  தவிர்க்கவேண்டும்.
காவல்துறை முயற்சியின் மூலம் சிலருக்கு லைசென்ஸ் பெற்று
கொடுக்கப்பட்டுள்ளது.  

லைசென்ஸ் தேவைப்படும் மாணவர்கள் காவல்துறையினர்
மூலம் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலளர் சிவசுப்பிரமணியம்,


ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சத்தியநேசன், சாலை விதிகள் குறித்து விளக்கம்
அளித்தனர்.

காவல்துறை உதவி ஆய்வாளர்கள்  சிவராஜ், பிரகாஷ், காவல் துறை காவலர்கள்
ஹிகாபுதின்,  பயிற்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.

முடிவில் பயிற்சி மைய ஆசிரியர் மாதையன் நன்றி கூறினார்.

--
*S. Sivasubramaniam*  General Secretary 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)
THE NILGIRIS  643 233.*

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...