சேலம் மாவட்டத்தில் உணவு வணிகம் புரிபவர்கள் அனைவரும் பதிவு மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் உணவு வணிகம் புரிபவர்களுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாமை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் வணிகர்களுக்கு பதிவு மற்றும் உரிமம் சான்றிதழ்களை வழங்கி பேசியது:
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன்படி உணவு வணிகம் புரிபவர்களுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் 2016, ஆகஸ்ட் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
மேலும் கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இச்சட்டத்தின்படி உணவு வணிகம் புரிபவர்கள் பதிவு மற்றும் உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்பதற்காக உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள 20,353 தனியார் உணவு வணிகர்களில் 30 சதவீதம் அதாவது 6,189 உணவு வணிகர்கள் மட்டுமே உணவு பாதுகாப்புத் துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளனர்.
உணவு பாதுகாப்புத் துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாமல் தொடர்ந்து உணவு வணிகம் புரிவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் 2017, செப்டம்பர் முடிய 859 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு 334 உணவு மாதிரிகள் தரமற்றவையாகக் கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 106 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.49,36,500 அபராதமாக விதிக்கப்பட்டது.
எனவே, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ல் உள்ள நெறிமுறைகளின்படி உணவு வணிகம் புரிய வேண்டும்.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவி வரும் இக்காலகட்டத்தில் தங்களது உணவு வணிக வளாகத்தில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்களின் புழுக்களோ அல்லது கொசுப்புழு உருவாக ஏதுவாக ஏதேனும் கொள்கலன் இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்படும்.
தேவைப்படுமாயின் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தை ரத்து செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன், உணவு வணிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment