நேர்மைக்கான குடிமக்களின் உறுதிமொழி
நம் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடைகளில் ஒன்றாக ஊழல் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.
அரசு, குடிமக்கள், தனியார் துறை போன்ற இதில் தொடர்புடைய அனைவருமே ஊழலை முற்றிலுமாக அகற்றுவதற்கு ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எல்லா நேரங்களிலும் நாணயம், நேர்மை ஆகியவற்றின் உயர்ந்த தரத்தைக் கடைப்பிடிப்பது என உறுதியேற்பதுடன், அது குறித்த விழிப்புணர்வுடனும் இருப்பதோடு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கவும் வேண்டும் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.
எனவே, கீழ்கண்ட விஷயங்கள் குறித்து நான் உறுதி ஏற்கிறேன்:
- வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் நேர்மையையும், சட்டத்தின் ஆட்சியையும் பின்பற்றுவேன்;
- எந்தச் சூழ்நிலையிலும் எவருக்கும் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன்;
- எனது கடமைகள் அனைத்தையும் நேர்மையாகவும், வெளிப்படையான வகையிலும் நிறைவேற்றுவேன்;
- பொது நலனுக்கு உகந்த வகையில் செயல்படுவேன்;
- தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணமாக விளங்குவேன்;
- எந்தவொரு ஊழல் நிகழ்வையும் அது தொடர்பான தகுந்த அமைப்பிற்குத் தெரிவிப்பேன்
Super
ReplyDelete