உதகை சிஎம்எம் மேல்நிலைப்பள்ளியில்

உதகை சிஎம்எம் மேல்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு கருத்தரங்கு நடைப்பெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், உணவு பாதுகாப்பு துறை, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்
ஆகியன இணைந்து நடத்திய உணவுப்பாதுகாப்பு கருத்தரங்கிற்கு  பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் தலைமை தாங்கினார்.

 கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர் மரு. கருணாநிதி பேசும்போது

உணவு பாதுகாப்பில் நுகர்வோர்கள் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்,

அரசு துறைகள், நுகர்வோர் அமைப்புகள் , மாணவர்கள், மக்கள்  என அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படுவதால் மட்டுமே உணவு கலப்படம் மற்றும் தரமான உணவுகளை அறிந்துகொள்ள முடியும்.

உணவு கலப்படம் மற்றும் உணவு சார்ந்த புகார்களை வாட்சப் எண்  94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

உணவுப்பொருட்களில்  அளவிற்கு அதிகமான நிறங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உதகை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பேசும்போது

உணவுப்பொருள்கள் வாங்கும்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், மற்றும் தகவல்கள் பார்த்து வாங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கலப்பட பால் மிகவும் குறைவாகவே உள்ளது.  பாலில் தண்ணீர் தான் அதிகஅளவில் கலப்படம் செய்யப்படுகின்றது.

இரசாயன பால் விற்பனை செய்யப்படின் புகார் தெரிவிக்கலாம்.  அதுபோல் பிளாஸ்டிக் அரிசி விற்பனையும் தமிழகத்தில் இல்லை.

நூடுல்ஸ் மைதா மற்றும் இதர ரெடிமேட் உணவுகள் கெட்டுபோகாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் மற்றும் சுவையூட்டிகள் மெல்ல கொல்லும் விசமாக மாறி புற்றுநோய் போன்ற கொடிய நோய்க்கு ஆளாக நேரிடும்.

அதுபோல தரமற்ற உணவுகளை தவிர்த்து தரமான உணவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார்.

தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது
இயற்கை உணவுகளை பாரம்பரிய உணவுகளை பயன்படுத்துவது உடலுக்கும் கொடுக்கும் பணத்திற்கும் நலன் பயக்ககூடியது என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களில் ஒருங்கிணைப்பின் இணைச்செயலாளர் கோவை தமிழ்ச்செல்வன் பேசும்போது

பணம் கொடுத்து பொருள் வாங்கும்போது சட்டப்படி நுகர்வோர் ஆகின்றோம்,  தரமற்ற பொருட்கள் வாங்கினாலோ இதர நுகர்வோர் குறைகள் இருப்பின் நுகர்வோர்  குறைதீர்மன்றங்களில் வழக்கு பதிவு செய்து நிவாரணம் பெறலாம்,  விழிப்போடு இருப்பது நுகர்வோர் களுக்கு  கட்டாயம் என்றார்.

நிகழ்ச்சியில் கோவை நுகர்வோர் அமைப்பு நிர்வாக கண்ணன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுவீட்டி, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


S. Sivasubramaniam
General Secretary
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)

Web:
www.cchepnlg.blogspot.in
www.cchepeye.blogspot.in
http://facebook.com/cchepnilgiris

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...