மகாத்மா காந்தி ம களிர் பொது சேவை மையம்

பந்தலூர்

மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில்

மகாத்மா காந்தி மகளீர் பொது
சேவை மையம் தொடங்கப்பட்டது.

அதன் துவக்கவிழா பந்தலூரில் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்திற்கு மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் தலைவர் நௌசாத்
தலைமை தாங்கினார்.

தேவாலா பழங்குடியினர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்
பேசும்போது

மகாத்மா காந்தியின் பணிகள் கீழ்தட்டு மக்களுடன் இணைந்து
செயலாற்றி மக்களோடு மக்களாக போராட்டத்தை கொண்டு சென்றார்.

 அதன்படி
மகளீர் சேவை மையமும் அடித்தட்டு மக்களோடு இணைந்து மக்கள் நலப்பணிகளை
மேற்க்கொள்ள வேண்டும்.

கல்வி மற்றும் நலதிட்டங்களை எளிய முறையில் செய்ய
முடியும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம்
பேசும்போது

பெண்கள் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

பெண்களுக்கான சட்டங்கள் பல இருந்த போதும் அவை சரியாக பயன்படுத்த
வேண்டியதும் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவம் அவசியம்.

டிவி
சீரியல்கள் மூலம் சமூகத்திற்கான நல்ல விசயங்கள் செயல்படுத்த வேண்டும்.

அமைப்பின் நோக்கங்களாக நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்.

ஏழை எளிய மாணவர்கள் பெண்கள் கல்விக்கு உதவிகள் வழங்குதல்,  ஏழை
முதியோர்களுக்கு உதவுதல்,

ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு உதவுதல், மகளீர் சட்டங்கள் மற்றும் சமூக
பங்களிப்பு மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
ஏற்படுத்துதல்.

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை பாதிப்பிற்க்கு உரிய
நிவாரணம் கிடைக்க வழிவகை செய்தல்.

பெண்களை பாதிப்பிற்குள்ளாக்குபவர்களின் சொத்துகளை முடக்கி அதன் மூலம்
பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசிற்கு பரிந்துறை செய்வது.

ஏழை எளிய கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து அமைப்பின் நிர்வாகிகள்  தலைவராக ஜெயலட்சுமி, செயலாளராக தீபா,
பொருளாளராக கீர்த்தி, துணை தலைவராக  கே மினி, துணை செயலாளராக வனிதா
மற்றும் 7 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்,

முன்னதாக அகமது கபீர் வரவேற்றார்.

முடிவில் மையத்தின் தலைவர்  ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...