பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைப்பெற்றது.
பள்ளியில் நடைப்பெற்ற கூட்டத்தில்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு போசும்போது
கொடுக்கும் பணத்திற்க்கு உரிய பலனை பெற உறுதிசெய்யவும் தவறும்பட்சத்தில் இழப்பீடு பெறவும்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ல் இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
இச்சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. லிழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவர்களிடையே குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நுகர்வோர் சார்ந்த தகவல்கள் சேகரித்து அதன்மூலம் மக்களிடையே விழிப்புணர்வு கொண்டு சேர்க்கவும்
தரமற்ற பொருட்களை கண்டறிந்து புகார் கொடுக்கவும் முன்வரவேண்டும்.
தீபாவளி பண்டிகை காலம் வந்துள்ளது. இனிப்பு வகைகளில் சாயங்கள் கலப்பது, தரமற்ற மூலப்பொருட்கள், கலப்பட எண்ணை வகைகள் ஆகியவற்றை கண்டறிந்து தவிர்க்க வேண்டும்.
நுகர்வோர் நலன் காக்க உணவு கலப்படம் குறித்து வாட்சப் மூலம் புகார் அளிக்கவும்
எடையளவுகள் தரகட்டுபாடு குறித்து மொபைல் ஆப் மூலம் புகார் அளிக்கவும் மக்கள் பிரச்சனை கள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு வாட்சப் பேஸ்புக் போன்றவற்றில் புகார் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனினும் நுகர்வோர் பாதிப்புகளை தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம் என்றார்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி பொதுசேவை மைய தலைவர் நவுசாத் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரிய ஒருங்கினைப்பாளர் மார்ட்டின் மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment