நுகர்வோர் திருவிழா நுகர்வோர் விழிப்புணர்வு பட்டிமன்றம்

உதகை ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் திருவிழா நடைப்பெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா பாப்பையா தலைமை தாங்கினார்.  

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மேரி கிளாடிஸ் வரவேற்றார்.

குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு CAT அமைப்பின் மாநில பொருளாளர் சிந்து சுப்பிரமணியம். மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் மூலம் வணிக சந்தையில் நுகர்வோர் அரசராக உள்ளார்.  நுகர்வோர் அரசாராக இல்லை என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது.

இதில் பங்கேற்ற மாணவிகள் 

நுகர்வோர் அரசரே  என்ற தரப்பில் மாணவிகள் சுவேதா தீக்‌ஷா, ஷகிரா ஆகியோர் பேசும்போது

உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும் நுகர்வோரை நம்பியே உற்பத்தி செய்யப்படுகின்றது.  நுகர்வோர்கள் பயன்படுத்தாத பொருட்கள் சந்தையில் நிற்பதில்லை. 

 நுகர்வோர்கள் விரும்பினால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்ற நிலையில் நுகர்வோர் அரசராகின்றார்.

தற்போது பொருட்களை நுகர்வோருக்கு விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து கொடுக்கின்றனர்.  

பல வடிவங்களில் புது புது ரகங்களில் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.  சந்தை போட்டியில் தேவையை விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொருட்களை தேர்வு செய்யும் வாய்ப்பு சந்தை கொடுத்துள்ளது.

தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களை வீட்டில் இருந்தபடியே பொருட்ககளை பெற வசதிகள் வந்துள்ளது.  

நுகர்வோரை நம்பியே வணிக சந்தை இருப்பதால் தற்போது நுகர்வோர்களை முக்கியத்துவ படுத்தி விற்பனை செய்கின்றனர்.  நுகர்வோர் பாதிப்புகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடுத்து நிவாரணம் பெறலாம்.  

நுகர்வோர் அரசர் இல்லை என்ற தரப்பில் மாணவிகள் A. வர்சினி, மோனிகா, ஷபினா நிஷார் ஆகியோர் பேசும்போது

நாம உபயோகபடுத்துற பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பது இல்லை.  வியாபாரிகள் சொல்லும் விலையை கேட்டு பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.  

புகார்களுக்கு அலைகழிப்பு மற்றும் காலதாமதம், செலவினங்கள் போன்றவை மூலம் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.  விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுகின்றனர்.  

உடலுக்கு தீங்கு என எழுதியே பொருட்களை விற்கின்றனர்.  உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவிப்பவை தடுக்கப்படவில்லை.  

நுகர்வோர் பல நிலைகளில் ஏமாற்றப்படுவதால் நுகா்வோர் அரசர் இல்லை. போலி விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் அதிகளவும் சந்தையில் விற்கப்படுகின்றது. 

நுகர்வோர் வழக்குகளிலும் நுகர்வோர் அலைகழிப்பது நடைமுறையில் உள்ளது.  தரமற்ற பொருட்கள் சந்தையில் அதிகம் காணப்படுகின்றது.   அழகிய வடிவமைப்பில் உள்ளவை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை. நுகர்வோரிடையே ஏற்ற தாழ்வை அதிகரிக்கின்றது.

நடுவராக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கி பேசியபோது
நுகர்வோர் சட்டங்கள் பல உள்ளன.    ஆனால் அவை நுகர்வோரை சென்றடையவில்லை.  நுகர்வோர் நலன் கருதி இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், முதல் தற்போது உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் வரை அனைத்திலும் நுகர்வோர் நலன் கருதி உருவாக்கப்பட்டள்ளது.  

நுகர்வோர் இழப்பீடு பெறவும் வாய்ப்புகள் வழங்கியுள்ளது.  ஒவ்வொரு துறையிலும் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை சுட்டிகாட்டி நிவாரணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

குறிப்பாக மின்சார வாரியத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள், காப்பீட்டு துறையில் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், வங்கிகளில் வங்கி வாடிக்கையாளர் குறைதீர்ப்பாயம், ஆகியன கட்டணமில்லாமல் நுகர்வோர் குறைகளை களைந்து நிவாரணம் பெற வழிவகை செய்துள்ளது.  

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு செயல்படுகின்றது.  இதற்கு புகார்களை எழுத்து மூலம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரமுடியும்.

ஆனால் நுகர்வோர் ஏமாற்றுவது தற்போது அதிகரித்து வருகின்றது.  

தற்போது மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரியில் கூட வணிகர்கள் தங்கள் விருப்பம்போல் விலையை உயர்த்தியுள்ளனர். பழைய வரியை கழிக்காமல் புதிய ஜிஎஸ்டி வரியை சேர்த்து வசூலிக்கின்றனர்.  

பல சட்டங்கள் ஏட்டளவிலலேயே உள்ளது.  இதனால் நுகர்வோர் பாதிப்புகளில் இருந்து மீள முடியவில்லை.  

அரசு துறைகளில் பல மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை.  அலைகழிக்கப்படுகின்றனர்.  

போலியான விளம்பரங்களை கட்டுபடுத்தபடவில்லை.  கள்ள சந்தை மூலம் தரமற்ற பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகின்றது.  

அரசு துறைகளும் முறையான நடவடிக்கை எடுக்க இயலாத நிலைபாடு அதிகரித்து, தரமற்ற உணவு மற்றும் கலப்பட உணவுகளும் அதிகரித்து வரும் நிலையே உள்ளது.  

தள்ளுபடி மற்றும்  இலவச விற்பனை மற்றும் விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகளை மற்ற பொருட்களில் ஏற்றி விற்பனை செய்வது என பல வகைகளில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க இயலாத நிலையே உள்ளது.   

கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாறும் மக்கள்,  விளம்பரங்களை பார்த்து தமது தேவைகளை பயன்படுத்தும் பொருட்களை தேர்வு செய்யும் நிலை  ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. 

ஏமாற்றப்படுபவர்கள் அரசர்களாக இருக்க முடியுமா , என்ற கேள்வியும் எழுகின்றது.

நுகர்வோர்கள் அரசாராக இருக்க விழிப்போடு இருத்தல் அவசியம், 

 பொருட்களை தேர்வு செய்யும் முன் அதனால் என்ன பயன், அதன் அவசியம் குறித்து ஆய்வு செய்து பொருட்களை தேர்வு செய்தல், போலியான விளம்பரங்களை நம்பாமல் இருத்தல்,  

நுகர்வோர் சார்ந்த சட்டங்களை அறித்துகொள்ளுதல்,  புகார் பதிவு மற்றும் ஆவணங்களை சரியாக வைத்து நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் வழக்கு பதிவு செய்து இழப்பீடு பெறுதல் போன்றவை மூலம் நுகர்வோர் அரசராக முடியும்.  

தினசரி அரசு சார் அறிவிப்புகள் மற்றும் நுகர்வோர் சார்ந்த தகவல்களை பத்திரிக்கைகள் மூலம் அறிந்து கொண்டு அவற்றை சேகரித்து விழிப்போடு இருக்க வேண்டும்.  

இதற்காக தான் அரசே பள்ளிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்துகின்றது.  விழிப்போடு இருப்பவர் எப்போதும் சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி நுகர்வோர் அரசராகவே இருப்பார்கள் என கூறினார்.

மாணவிகளின் நுகர்வோர் விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள், கவிதை, பேச்சு என பல்வகை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 

குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைபடை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், பேசும்போது

இயற்கை நமக்கு நல்ல உணவு, நல்ல குடிநீர், நல்ல வாழ்வுக்கு தேவையானவற்றை கொடுத்துள்ளது.  ஆனால் இயற்க்கைக்கு விரோதமாக இரசாயன உரங்கள் மற்றும் அதிக அளவு மருந்துகள் பயன்படுத்தியதால் இயற்கை உணவுகள் என தனியாக உணவுகளை தேடி செல்லும் நிலையும் உணவில் விசத்தை கலந்து உண்னும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  இன்று புற்றுநோய் அதிகரிக்க இரசாயனம் மூலம் விளையும் உணவுகளே காரணமாக அமைகின்றது.  எனவே இரசாயனம் கலந்த உணவை தவிர்க்க வேண்டும் பராம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு CAT அமைப்பின் மாநில பொருளாளர் சிந்து சுப்பிரமணியம். பேசும்போது நுகர்வோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியமாகின்றது.  பல்வகைகளில் ஏமாற்றப்படும் நுகர்வோர்கள் தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்ற சிந்தனையே இல்லாமல் ஏமாறுகின்றனர்.  பொட்டல பொருட்கள் மற்றும் எடையளவுகளில் குறையிருந்தால் தொழிலாளர் நலத்துறை மூலம் ஏற்படுத்தபட்டுள்ள tnlmts என்ற செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.  இதன் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு CAT அமைப்பின் மாநில இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது  பொருட்களை வாங்கும்போது அதன் தரம் எடை, தயாரிப்பாளர் பெயர் முகவரி, தயாரிப்பு தேதி, காலவதி தேதி என 15க்கும் மேற்பட்ட தகவல்களை பார்த்து வாங்க வேண்டும்.  நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மாவட்டந்தோறும்  செயல்படுகின்றது. குறைந்தபட்ச கட்டணமாக  100 ரூபாய் மட்டும் செலுத்தி புகாரினை பதிவு செய்த நிவாரணம் பெறலாம்..  ஆடம்பர பொருட்களை தவிர்த்து தரமான பொருட்களை தேவைக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெட்கான் பொது செயலாளர் க. வீரபாண்டியன், கோவை கண்ணன், மற்றும்  பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள்  பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை லீலா ஜெபஸ்சீலி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...