உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு

உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  சகோதரி புஷ்பா  தலைமை தாங்கினார்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து,  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மரியமதலேன், பிரிசில்லா, உததகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பின் இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது
நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு பள்ளிகளில் அதிகரித்து வருவது பாராட்டுதலுக்குரியது.  இன்னும் பல இடங்களில் பில் தரும் வழக்கம் இல்லை.  பில் தரும் இடங்களில் பொருட்களை வாங்க நுகர்வோர்கள் முன்வர வேண்டும்.  பில்லுடன் பொருட்கள் வாங்கினால்தான் நுகர்வோர் குறை தீர் மன்றங்களில் வழக்கு பதிவு செய்ய முடியும்.  விளம்பரங்களால் ஆட்பட்டிருக்கும் நாம் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் தவறான விளம்பரங்களை புரிந்து அவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.

உதகை உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பேசும்போது
உணவுப்பொருட்களில் எளிதில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் தரமற்ற பொருட்களை கலக்கின்றனர். உணவுப்பொருட்களில் நமக்கு தேவையான சத்துக்களான மினரல்கள், விட்டமீன்கள், தாது சத்துகள் ஆகியன மட்டுமே நமக்கு தேவைப்படுகின்றது.  ஆனால் உணவுப்பண்டங்கள் அழகாக காட்சி அளிக்கவும், சுவைக்காகவும் பல்வேறு நிறங்கள், சுவையூட்டிகள் கலக்கின்றனர்.  எண்னை போன்றவற்றில் தரமற்ற கழிவு எண்ணைகளை கலக்கின்றனர்.  உணவு பண்டங்கள் வாங்கும்போது  பொட்டலங்களில் மேல் உள்ள தகவல்களை பார்த்து வாங்க வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் பற்றாக்குறையினால் மாணவர்களிடையே நினைவாற்றல் குறைவதோடு,  படிப்பிலும் மந்த தன்மை ஏற்படுகின்றது. அயோடின் பற்றாக்குறையால் பெண்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படுகின்றது.  ஊனதன்மையுடன் உரிய வளர்ச்சியின்றி குழந்தைகள் பிறப்பது போன்ற பாதிப்புகள் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படுகின்றது.  எனவே எப்போது உப்பு வாங்கும்போது 30 பிபிஎம் அளவு அயோடின் அளவு சேரக்கப்பட்ட உப்பினை வாங்க வேண்டும்.  கடைகளில் முறையான பராமரிப்பு இல்லாத உப்புகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

நிகழ்சசியில் கலப்பட உணவால் ஏற்படும் பாதிப்பு, காலாவதி மருந்துகளால் ஏற்படும் விளைவுகள், தரமற்ற உணவுகள் மற்றும் பொருட்காளல் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகள் சார்பில் குறுநாடகம் கவிதை பாட்டு பேன்ற கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில்  கோவை நுகர்வோர் அமைப்பு நிர்வாகி கண்ணன், உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க நிர்வாகி நாகராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...