*சாதிசான்றிதழ்*

*சாதிசான்றிதழ்*

தமிழக அரசு தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ்.

சாதிச் சான்றிதழ் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது.

இச்சான்றிதழ் ஒரு தற்காலிகச் சான்றிதழே. ஏனெனில் எவரும் சாதியை மாற்றமுடியாது. ஆனால் வகுப்பு மாறலாம். அதாவது ஒருவர் ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவர், தனது மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, வேறு வகுப்பிற்கு சென்றுவிடுவார். அதாவது, ஆங்கிலத்தில் community certificate என்று அழைக்கப்படும் இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றே அழைக்கப்பட வேண்டும்.

ஆனால், சாதிச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படுகிறது. எனவே, சாதியை மாற்ற முடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானதல்ல.

எனவே, சாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல.

இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

*எங்கே விண்ணப்பிப்பது?*

வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது அரசு இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

*தேவையான ஆவணங்கள்*

குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்

வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக அளிக்கலாம்;
ஆனால் கட்டாயமில்லை.

பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/ சான்றுகளை இணைப்பது வட்டாட்சியரின் பணிகளில் ஒரு எளிமையை கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவதற்காகவே.

ஒருவருக்குக் குடும்ப அட்டையே இல்லை; எனவே அவருக்குச் சாதிச் சான்றிதழே வாங்க முடியாது என்று கூற முடியாது.

வேறு ஆவணங்கள் ஏதும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது.

இப்படி மனு அளிக்கும் பொழுது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும்.

எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற கால தாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது.

ஏனென்றால், வட்டாட்சியர் அலுவலகம் தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு அலுவலகம்.

அவர்களே பொது மக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால்தான் பொது மக்கள் கேட்க்கும் சான்றினை வழங்க முடியும் என்று கேட்பது முறையல்ல.

எந்த ஆவணமும் இணைக்கப்பட முடியாத பொழுது, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் தேவை.

அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல.

ஒரு வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஆவணங்கள் இருந்தால் அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.

பட்டியல் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?

வருவாய் கோட்ட அலுவலர்

மாவட்ட உதவி ஆட்சியர்

மாவட்ட சார் ஆட்சியர்

சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்

 பட்டியல் வகுப்பினர்/ பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்) வகுப்பைச் சார்ந்தவர் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?

வட்டாட்சியர்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர்/ இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) வகுப்பைச் சார்ந்தவர் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?

வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத வருவாய்த் துறை அலுவலர்

தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்

சாதிச் சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புத் துணை வட்டாட்சியர்

கூடுதல் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்

மண்டல துணை வட்டாட்சியர்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் MBC/
 சீர் மரபினர் பட்டியலில் DNC
குறிப்பிடப்பட்டுள்ள தொட்டிய நாயக்கர் (ராஜ கம்பளம்), கொல்லவர், சில்லவர், தொக்களவர், தொழுவ நாயக்கர் மற்றும் எர்ரகொல்லார் உட்பட)
வகுப்பைச் சார்ந்தவர் யாரிடம் இருந்து சாதிச் சான்றிதழைப் பெற வேண்டும்?

தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் வசம்.......

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...