தீபாவளி இனிப்பு, காரங்களில் தரம் இல்லையா? டூ புகார் செய்ய வாட்ஸ் அப், போன் எண் வெளியீடு!

by SENTHIL
திருப்பூர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு
மற்றும் காரவகைகள் தயாரிக்கும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதில், குறைபாடு இருந்தால், வாட்ஸ் அப் வாயிலாக புகார் அளிக்கலாம் என்ற, மாவட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி நெருங்கி வருவதால், இனிப்பு, காரம் பலகாரங்கள் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. பலகாரங்கள் தயாரிப்பின் போது, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, தரமான பொருட்களை தயாரித்து விற்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
உணவு தயாரித்தல், கையாளுதல், பரிமாறும் பணிகளை செய்பவர், கையுறை அணிந்திருக்க வேண்டும். உணவு பண்டம் தயாரிக்கும் இடம், சுத்தமாகவும், ஈ மொய்க்காமலும் இருக்க வேண்டும். இனிப்பு, காரம் தயாரிக்கும் தொழிலாளர்கள், கைகளை சோப்பால் கழுவிய பிறகு, பணிகளை துவக்க வேண்டும். பணியின் போது, குட்கா, பாக்கு, வெற்றிலை, புகையிலை, புகைபிடித்தல், எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.
பலகாரம் தயாரிக்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சைவம் மற்றும் அசைவ உணவு பொருட்களை தனித்தனியாக வைக்க வேண்டும். சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி, இனிப்பு, கேக் தயாரிக்க, 100 பி.பி.எம்., அளவுள்ள செயற்கை வண்ணங்களை மட்டும்சேர்க்கலாம்;அதிகப்படியான செயற்கை வண்ணத்தை தவிர்க்க வேண்டும். பலகாரம், உணவு பொருள் தயாரித்ததும், பயன்படுத்திய உபகரணங்கள், பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து, பூஞ்சை பிடிக்காமல் வைக்க வேண்டும்.
நெய் மற்றும் இதர இடுபொருள் வாங்கியதற்கான "பில்'களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து, பேக்கிங் செய்யும் போது, உபயோகிக்கும் காலம், பேட்ச் எண், தயாரிப்பாளர் முகவரி போன்ற விவரங்கள் "லேபிளில்' இருக்குமாறு ஒட்ட வேண்டும்.
அருகில் உள்ள கட்டடத்தை காட்டிலும், சமையலறையின் புகைபோக்கி, ஆறு அடி உயரமாக இருக்க வேண்டும். சமையல் எண்ணெய், நெய் விவரங்களை, தகவல் பலகையில் வைத்திருக்க வேண்டும். பேக்கிங் செய்ய, உணவு சேமிப்புக்கான தரத்துடன் கூடிய பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு தரத்தில் குறை இருந்தால், 94440 42322 என்ற "வாட்ஸ் ஆப்' எண்ணிலும், 0421- 2971190 என்ற அலுவலக எண்ணிலும் புகார் செய்யலாம். பண்டிகை காலத்தில் இனிப்பு, காரவகைகள் தயாரிக்க, உணவு பாதுகாப்புத்துறையின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்று, கலெக்டர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...