பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
மகாத்மா காந்தி பொது சேவை மையம்
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் 108 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
மகாத்மா காந்தி பொது சேவை மையம்
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் 108 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், காந்தி பெண்கள் பொது சேவை மைய செயலாளர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது
டெங்கு காய்ச்சல் ஏடீஸ் கொசு டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவரை கடித்த பின் மற்றவர்களை கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் வரும். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.
சுத்தமான தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டையில் இருந்து லார்வா பூச்சிகளாக வெளிவந்து ஏடீஸ் கொசுவாக உருவாகின்றது. முக்கியமாக பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.
மூன்று வாரங்கள் மட்டுமே வாழும் இந்த கொசு 2,3 முறை முட்டையிடும். 200 முட்டைகள் வரை ஒரு நேரத்தில் புழுக்களாக உருவாகி பரவுகின்றது.
கொசுக்கள் குறைந்தபட்சம் 500 மீட்டர் தூரம் வரையே பறந்து செல்லும்.
இந்த கொசுக்கள் பகல் நேரங்களிலே கடிக்கும். முழு கை சட்டை மற்றும் கால்களை மறைக்கும் வகையில் துணிகள் அனிந்து கொள்ளலாம். கைகளில் கொசு கடிக்காமல் இருக்க எண்னை மற்றும் திரவங்களை தடவி கொள்ளலாம்.
கொசுக்களை உருவாகாமல் தடுப்பதே டெங்கு நோய் தாக்காமல் இருக்க முக்கிய வழியாகும்.
சுத்தமான தண்ணீர் தேங்காமல் வீட்டை சுற்றி பராமரிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் குறித்து பயப்பட தேவையில்லை. தொடர் காய்ச்சல் இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தேவையற்ற மருந்துகள் ஊசிகள் போடுவதால் நோயின் தாக்கம் அதிகமாகும்.
என்றார்.
என்றார்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் அதில் உள்ள வசதிகள், அளிக்கப்படும் முதலுதவிகள், பயன்படுத்திக்கொள்ளும் முறைகள் குறித்து 108 சேவை திட்ட ஒருங்கினைப்பாளர் கற்பகவினாயகம் குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.
தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், பள்ளி ஆசிரியர் தண்டபாணி, கொளப்பள்ளி சுகாதார ஆய்வாளர் சேகர் ஆகியோர் பேசினார்கள்.
மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment