பத்திரிக்கை செய்தி
மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும்
உப்பில் 50 சதவீதம் வரை
அயோடின் அளவு இல்லை ஆய்வில் தகவல்
உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள்
தடுப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் அயோடின் உப்பு விற்பனை ஆய்வு அறிக்கை தகவல்
ஓவ்வொரு ஆண்டும் அக்டோபா; 21-ம் நாள்
உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து
பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் திருவாரூர் மற்றும் கூடலூர்
நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும்
உப்பின் தரத்தினை உறுதி செய்திடும் வகையில்
மாவட்டத்தில் விற்பனைக்கு உள்ள அனைத்து உப்பு வகையான அனைத்து நிறுவனங்களின்
உப்பு பாக்கெட்டுகளையும் மாதிரி எடுத்து ஆய்வு செய்து ஆய்வு முடிவின் அடிப்படையில்
நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
ஏற்கனவே 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்
செப்டம்பர் மாதம் வரையில் மாவட்டத்தில் உதகை கூடலூர் பந்தலூர் குன்னூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள கடைகளில் 126 மாதிரிகள்
எடுக்கப்பட்டது, அதில் 55 மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவான
15 பிபிம் அளவிற்கு குறைவாக உள்ளது. 38 மாதிரிகளில்
அயோடின் துளி கூட இல்லை என்பதும் குறிப்பிடதக்கது. அயோடின் குறைவாக உள்ள உப்புகள் உணவுக்காக
பயன்படுத்த தகுதியற்றது.
இதுகுறித்து உற்பத்தி நிறுவனங்களுக்கும்
நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அவர்கள் பெரும்பாலும்
தவறு அவர்களுடையது இல்லை என்றும் கடைகளில் உப்பினை வெயில் மழை படும்படும் வைத்திருப்பதாகவும், அதனால் உப்பில் சேர்க்கப்பட்டுள்ள அயோடின் ஆவியாகி
கரைந்து இருக்கும் என்கின்றனர்.
விற்பனை செய்பவர்களும் உப்பினை உரிய பாதுகாப்பான
முறையில் வெயில் மழை படாமல் வைக்க வேண்டியது அவசியம். தரகுறைவான உப்பினை விற்பனை செய்தால் விற்பனையாளர்கள்
மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளது.
அயோடின் மனித வாழ்வுக்கு இன்றியமையாது
தேவைப்படும் நுண்ணூட்டச்சத்து ஆகும். அயோடின்
சத்து பற்றாக்குறையால் கரு கலைதல், மூளை வளர்ச்சி இல்லாமை, ஊனமுற்ற குழந்தை பிறத்தல்,
மன நலம் பாதிப்பு மற்றும் முன் கழுத்து கழலை போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றது. அயோடின் சத்து பற்றாக்குறை குறைபாடுகளை தடுத்திட
மத்திய மற்றும் மாநில அரசு உப்பின் வாயிலாக அயோடின் சத்தை அளித்திட முடிவு செய்து உணவிற்காக
விற்பனை செய்யப்படும் உப்பில் கட்டாயம் அயோடின் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி
உள்ளது.
உணவிற்காக தயாhpக்கப்படும் உப்பில்
30 பி.பி.எம். அளவு தயாரிப்பு நிலையில் அயோடின் இருக்க வேண்டும் என்றும், நுகர்வோருக்கு
விற்பனைக்கு வரும் நிலையில் அயோடின் அளவு
15 பி.பி.எம். அளவிற்கு குறையக் கூடாது என்றும் உணவுப் பாதுகாப்பு தரச் சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான அயோடின் உப்பு நுகர்வோருக்கு கிடைக்கின்றா
என அறிய கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் சுற்றுச்சூழல்
ஆராய்ச்சி மையம் ஆகியன சார்பில் கடைகளில் விற்பனைக்கு உள்ள உப்பு மாதிரிகளை ஆய்வு செய்ததில்
பெரும்பாலான உப்பு பாக்கெட்டுகளில் போதுமான அளவு அயோடின் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மேலும் போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட்டுகளிலும்,
பதப்படுத்தும் உப்பு எனக் குறிப்பிட்டு உணவிற்காக விற்பனை செய்வதையும் காண முடிகின்றது
மக்களுக்கு தரமான அயோடின் உப்பு கிடைப்பதை
உறுதிப்படுத்திடவும் அக்டோபா; 21 உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின
விழிப்புணர்வு நிகழ்வாக நீலகிரி மாவட்டத்தில் விற்பனைக்கு உள்ள அனைத்து விதமான உப்பு
கம்பேனிகளின் உப்பு பாக்கெட்டுகளையும் நுகர்வோர் ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி
மாணவ நுகர்வோர் மன்ற மாணவர்களைக் கொண்டு அடையாளம் கண்டு அந்த உப்பு மாதிரிகளை வாங்கி
எமது திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்க உள்ளோம்
ஆய்வு முடிவின் அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு
மற்றும் தர நிர்ணய சட்டங்களின் வாயிலாகவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்
நன்றி இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம் பொதுச்செயலாளர் சி. காளிமுத்து தலைவர்.
No comments:
Post a Comment