*ஒருவரை கைது செய்வதற்கான விதிமுறைகள் என்ன?*

*ஒருவரை கைது செய்வதற்கான விதிமுறைகள் என்ன?* 


 *காவல் கைதியின் உரிமைகள் யாவை?* 


 *காவல்நிலைய சித்ரவதைகளையும் மரணங்களையும் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து முடிவெடுக்க இந்திய சட்ட ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.* 


விளைவாக கைதின் போது பின்பற்றப்பட வேண்டிய *11 விதிமுறைகளை நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம்.* 


 *மீறும் எந்தவொரு காவல் நடவடிக்கையும் சட்டத்துக்கு எதிரானது.* 


1. கைதின்போது தொடர்புடைய விசாரணை அதிகாரி தனது பெயர் பொறிக்கப்பட்ட சீருடை அணிந்திருக்க வேண்டும். யார் விசாரணை அதிகாரி என்பது காவல்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.


2. கைதிற்கான மெமோவை தயார் செய்ய வேண்டும். அதில் கைது நடந்த நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனை கைது செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினரோ, அல்லது அந்தப் பகுதியின் தெரிந்த மனிதர் ஒருவரோ ஏற்று ஒப்புதல் சாட்சியமளித்து கையெழுத்திட வேண்டும். கைது செய்யப்பட்டவரும் அதில் கையெழுத்திட வேண்டும்.


3. கைதி அல்லது விசாரிக்கப்படும் நபரின் உறவினர், நண்பர், நலம் விரும்பி ஆகிய யாராவது ஒருவருக்கு முடிந்த அளவு விரைவாகத் தகவல் சொல்ல வேண்டும். எந்த இடத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.


4. கைது செய்யப்பட்டவரின் உறவினரோ நண்பரோ மாவட்டத்திற்கு வெளியில் வசித்தால் கைது செய்யப்பட்ட இடம், நேரம் குறித்த தகவல்களை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாவட்ட சட்ட உதவி ஆணையமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையமும் தந்தி மூலம் இதனைச் செய்ய வேண்டும்.


5. கைது செய்யப்பட்டவுடன், அதனை யாருக்காவது தெரிவிக்கும் உரிமை கைது செய்யப்பட்ட நபருக்கு இருக்கிறது என்பதை அவருக்குச் சொல்ல வேண்டும்.


6. காவல் நிலைய நாட் குறிப்பில் கைது குறித்தும் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த காவல் அதிகாரியின் பிடியில் அந்த நபர் இருக்கிறார் என்பது குறித்தும் பதிவு செய்ய வேண்டும்.


7. கைதி தன்னை பரிசோதிக்க வேண்டுமென கோரலாம். காயங்கள் இருந்தால் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சோதனை ஆவணம் கைது செய்யப்பட்ட நபராலும் கைதுசெய்யும் காவல்துறை அதிகாரியாலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதன் பிரதி கைதிக்கும் வழங்க வேண்டும்.


8. 48 மணி நேரத்திற்குள் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தந்த மாநிலத்தின் மருத்துவ சேவை இயக்குநரகத்தால் சான்றளிக்கப்பட்ட மருத்துவரே இந்த சோதனையைச் செய்ய வேண்டும்.


9. கைது ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களும் அந்தப் பகுதியின் மாஜிஸ்ட்ரேட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.


10. விசாரணையின்போது தனது வழக்கறிஞரைச் சந்திக்க கைது செய்யப்பட்டவருக்கு உரிமை உண்டு.


11. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில தலைமையகத்திலும் இதற்கென ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும். இந்த கைது, அந்த நபர் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல்களை அங்கே அனுப்ப வேண்டும். கைது நடந்து 12 மணி நேரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்...


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு  மையம் https://kutumbapp.page.link/HfdrHc9aE9NxJFV7A

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...