சேரம்பாடி- கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம்

 சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம் நடைபெற்றது.

ஏகம் பவுண்டேசன், ஆல் த சில்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கணியேந்திரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பத்மினி, ஊராட்சி கவுன்சிலர் பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நிகழ்ச்சிக்கு சுகாதார நிலையம் மருத்துவர் ஶ்ரீநிதி தலைமை தாங்கி பேசும்போது

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப கட்டம் முதல் பதிவு செய்து தொடர் சிகிச்சை வழங்கபடுகின்றது. கர்ப்ப காலத்தில் தொடர் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றது. முறையான சிகிச்சை எடுத்து கொண்டால் நலமான குழந்தை பெற முடியும் என்றார்.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் நிர்வாகியும், மன நல ஆலோசகருமான ரேணுகா பேசுகையில்

மனசு எதை நோக்கிய பார்வை கொண்டு இருக்கிறோமோ அதையே எண்ணங்கள் பிரதிபலிக்கும்.  கர்ப்பிணிகள் ஆன்மீக கதைகள், அறிவியல் சார்ந்த கட்டுரைகள், இலக்கியம், விளையாட்டு போன்றவற்றை படிக்கும் போது அதே பிரதிபலிப்பு குழந்தையிடம் இருக்கும். ஆரோக்கியமான மன நிலையில் குழந்தைகள் பெற கர்ப்ப காலத்தில் எண்ணங்கள் நல்லவையாக சிந்திக்க வேண்டும். தீயவை தவிர்க்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் அது நடக்கும் எனவே நல்ல எண்ணங்களை என்னும் போது நல்லவையாகா இருக்கும். மனதால் நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்கிற நம்பிக்கையும் கொண்டு இருக்கும் பட்சத்தில் நல்ல ஆரோக்கிய குழந்தை பிறக்கும் என்றார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் பிறக்க கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உரிய ஊட்டசத்து உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் குறிப்பாக பால், புரத சத்து, கொழுப்பு சத்து, நீர் சத்து ஆகியன எடுத்து கொள்ள வேண்டும்.  பழங்கள் மென்று உண்பதால் நார் சத்து கிடைக்கும். அதுபோல அயோடின் கலந்த உப்பினை எடுத்து கொள்ளவதான் மூலம் முழுமையான வளர்ச்சியடைந்த குழந்தையை பெற்று கொள்ள முடியும். என்றார். 

ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர அஜித் ஆகியோர் மன நல்ல ஆலோசனைகள் வழங்கினார்கள். சமூக ஆர்வலர் சந்திரன், சுகாதார ஆய்வாளர் நாசர், செவிலியர்கள் கர்ப்பினிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்












No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...