புற்றீசல் போல் பெருகும் அங்கீகாரமற்ற கல்வி நிலையங்கள்


புற்றீசல் போல் பெருகும் அங்கீகாரமற்ற கல்வி நிலையங்கள்

ஊட்டி:"நீலகிரியில் அங்கீகாரமற்ற கல்வி நிலையங்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய நிர்வாகி சிவசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு

:நீலகிரியில் தனியார் மூலம் ஆசிரியப் பயிற்சி, கம்ப்யூட்டர், கேட்டரிங், நர்சிங், தொழிற் பயிற்சி வழங்கும் பல நிறுவனங்கள் அரசின் உரிய அங்கீகாரம் பெறாமல், அரசால் அங்கீகரிக்கப்படாத கல்வியை போதிக்கின்றன. டிப்ளமோ, பட்ட படிப்பு சான்றிதழ் வழங்க பல்கலை., மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரமுண்டு. பயிற்சி முடிவில் வழங்கப்படும் சான்றிதழில் அரசு முத்திரை இருந்தால் மட்டுமே, அது, அரசு வேலை வாய்ப்புக்கு தகுதி சான்றாக கருதப்படும். ஆனால், இங்குள்ள பல நிறுவனங்களின் சான்றிதழுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
அரசு அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் பல கல்வி நிலையங்கள், ஏழை, எளிய மக்களின் அறியாமையை சாதகமாக்கி, கல்வி கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றன. கல்வி நிலையங்களை நடத்தும் பலர், அவர்கள் கற்பிக்கும் பாடங்களில் அடிப்படை அறிவை கூட பெறாமல் உள்ளனர். மக்களை ஏமாற்றும் இத்தகைய கல்வி நிலையங்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம், கல்வி துறை, தொழில் நுட்ப கல்வித்துறை, காவல் துறை, நுகர்வோர் பாதுகாப்பு துறை உட்பட கல்வி சம்மந்தப்பட்ட துறையினர் இணைந்து, கண்காணிப்பு குழு அமைத்து மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிலையங்களின் அங்கீகார விபரத்தை சேகரிக்க வேண்டும்; தகுதியில்லாத கல்வி நிலையங்களை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு,
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...