ஊட்டி போதை பொருள் விழிப்புணர்வு பிரசாரம்


ஊட்டி போதை பொருள் விழிப்புணர்வு பிரசாரம்

ஊட்டி:ஊட்டியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில், தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். நிர்வாகி ராஜராஜன் வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி, பிரசாரத்தை துவக்கி வைத்தார்.போதை பழக்கம், அதனால் ஏற்படும் தீமைகள், போதையால் பரவும் நோய்கள், பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்கள், பிரசாரத்தின் போது வினியோகிக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் இடையே பரவி வரும் போதை பழக்கங்களை தடுக்க, பள்ளிகள் தோறும் கவுன்சிலிங் நடத்த வேண்டும்; புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்களை பள்ளிகளில் பயன்படுத்துவற்கு, ஆசிரியர்கள் தடை விதிக்க வேண்டும்; 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்தி, கண்காணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும், அரசு தலைமை மருத்துவமனைகளில், போதை மறுவாழ்வு மையங்கள் அமைத்து, போதைக்கு அடிமையானவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன், நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் பாண்டியன், மாரிமுத்து, மும்மூர்த்தி, விஜயன், ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மைய நிர்வாகி பூபதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...