விவசாயிக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

*விவசாயிக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு*

Published on : 11th February 2019 02:19 AM  |

விவசாயிக்கு வழங்க வேண்டிய பயிர்க் காப்பீட்டு இழப்பீடுத் தொகையை 4 வார காலத்துக்குள் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், ஆண்டியப்பன்காடு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

 வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பஞ்சநதிக்குளம் கிராமத்தில் எனக்கு விவசாய நிலம் உள்ளது.

கடந்த 2016-2017-ஆம் ஆண்டுகளில் போதுமான மழை பெய்யவில்லை. உரிய காலத்தில் காவிரி நீரும் வரவில்லை, இதனால் எங்கள் பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர் காப்பீட்டு மூலம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டது.

ஆனால், எனக்கு வெறும் 25 சதவீத இழப்பீடு தொகைதான் வழங்கப்பட்டது. 75 சதவீத இழப்பீடு வழங்கவில்லை.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தேன். இந்தப் புகார் நாகப்பட்டினம் விவசாயத்துறை இணை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இணை இயக்குநர், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டும், இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என கோரியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.முருகபாரதி ஆஜராகி வாதிட்டார்.

 இதனையடுத்து, மனுதாரருக்கு வழங்க வேண்டிய 75 சதவீத காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் 4 வார காலத்துக்குள் வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

https://www.dinamani.com/tamilnadu/2019/feb/11/விவசாயிக்கு-இழப்பீடு-வழங்க-காப்பீட்டு-நிறுவனத்துக்கு-உத்தரவு-3093322.html

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...