பெறுனர்
உயர்திரு.
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
உதகை
பொருள் : விழா
காலம் – விடுமுறை தினங்களில் அதிக பயணிகள் உள்ளூர் மக்கள் –
அதிகம்
வரும் வாய்ப்பு மற்றும் குளிர் காலம் கொரணா தொற்று
அதிகரிக்கும்
வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம.
மாவட்ட
ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம்
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளம் ஆக
இருப்பதால் எதிர்வரும் சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட விடுமுறைக்
காலங்களில் அதிக பயணிகள் சுற்றுலாக் காரணமாக வெளியே இருந்து இங்கு வருவதற்கான
வாய்ப்புகள் அதிகமாக உள்ளன நீலகிரியில் சார்ந்தவர்கள் கோவை திருப்பூர் உள்ளிட்ட
இதர மாவட்டங்களில் வேலை செய்பவர்கள் திரும்பி நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய
வாய்ப்பு அதிகமாக உள்ளது, இவர்கள் வருகை 100% கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது மேலும்
குளீர் காலம் தொடங்கியுள்ளதால் கொரனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம்.
இவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் ஆகின்றது.
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக
Ø கூடுதல்
மருத்துவ குழுக்கள் மூலம் பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.
Ø அதுபோல வெளி
மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கொரனா பரிசோதனைகள் முடிவு
வரும்வரை வீட்டில் தணிமையாக இருப்பதை கண்காணிப்பதும் அவசியம்.
Ø சுற்றுலா
வாகணங்கள் மட்டுமின்றி மேட்டுபாளையம்-குன்னூர் , மேட்டுபாளையம்- கோத்தகிரி,
கோவை - குந்தா வழித்தடங்கள் மற்றும் மாவட்ட எல்லை பகுதிகளான
கக்கநல்லா சோதனை சாவடி, கூடலூர் கீழ் நாடுகாணி,
சோலாடி, பாட்டவயல், தாளூர், நம்பியர்குன்னு, பூலகுன்னு உள்ளிட்ட எல்லை சோதனை சாவடிகள் அனைத்து
வழித்தடத்தில் நீலகிரிக்கு வரும் வாகணங்களில் கொரனா பரிசோதனை மேற்கொள்வதோடு கொரனா
மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Ø மேட்டுபாளையம்
குன்னூர் மற்றும் மேட்டுபாளையம் கோத்தகிரி வழித்தடத்தில் மேட்டுபாளையம்
ஒட்டிய சமவெளி பகுதியிலேயே கொரனா பரிசோதனை முகாம்கள் அமைக்க வேண்டும்
குறைந்த பட்சம் 5 குழுக்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொண்டால் விரைவான மாதிரி
சேகரிப்பு எளிதாக அமையும்.
Ø அதுபோல கோவையில் மாதிரி
பரிசோதனைக்கு கொண்டு செல்வது எளிதாகவும் விரைவான முடிவுகள்
பெறவும் உதவும்.
Ø ஊராட்சி
மற்றும் நகராட்சி வார்டு பகுதிகளில் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி
மன்ற பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் கண்காணிப்பு குழுக்கள்
ஏற்படுத்தி அவர்கள் மூலம் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள்
கண்காணிக்கபடுவதால் கொரனா பரவலை கட்டுக்குள் வைக்க உதவும்,
Ø நோய்
தாக்கம் குறைக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும்
ஆர்சனிக் ஆல்பம் மற்றும் அலோபதி மருந்துகள் ஆகியவை வழங்க வேண்டும்.
Ø மக்களிடம்
நோய் தெற்று குறித்த விழிப்புணர்வை அதிகபடுத்திடவும் சுய கட்டுபாட்டுடன்
இருக்கவும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்,
நோய்
தாக்கம் அதிகரிக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உதவுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
கூடலூர்
நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
பந்தலூர்
நீலகிரி மாவட்டம். 643233
No comments:
Post a Comment