பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைப்பெற்றது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கூடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் பெறுப்பாசிரியர்களுக்கு செயலூக்க மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்று பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

கூடலூர் அரசு கலை கல்லூரி ஆங்கில துறை தலைவர் சுரேஷ், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி (பொ) தலைமை ஆசிரியர் தண்டபாணி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செலின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூடலூர் அரசு கலை கல்லூரி முதல்வர் வே. நெடுஞ்செழியன் அவர்கள் பயிற்சியை துவக்கி வைத்து பேசும்போது  நுகர்வு என்பது  பசுவின் பாலை போல் இருக்கின்றது.  நுகர்வில் முதல் நாள் உணவு கெட்டுபோனால் அடுத்த நாள் அது வேறு தோற்றத்தில் நுகர்வு மேற்கொள்ள படுகின்றது.  அரசு தேவை எற்படுவோருக்கு எற்ப திட்டங்களை வழங்கி வருகின்றது.  இதனால் மக்கள் பரவலாக பயனடைய முடிகிறது.  தேவைக்கு வழ்பவர்கள் சேமிப்பை உருவாக்கி கொள்ள முடியும் தேவைக்கு அதிகமாக செலவிட்டு வாழும் போது சிரம்மங்கள் அடைகின்றனர்.  சிறந்த நுகர்வோர்களை பள்ளிகள் உருவாக்க வேண்டும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து பயிற்சி வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்ற உறுப்பினர் ரமேஷ் பேசும்போது நுகர்வோர் குறை தீர் மன்றங்கள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் வழக்குகள் பதிவு செய்து இழப்பீடும் பெற முடிகின்றது.  ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்க படுவதால் நுகர்வோர் வழக்குகளுக்கு பதிவு செய்யும் முன் ஆவணங்களை உறுதிபடுத்தி வழக்கு தொடர்நதால் எளிதில் வெற்றி பெற முடியும் என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து பேசிய தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்பு குழு வின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசும்போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ல் உருவாக்கப்பட்டு தற்போது பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறை படுத்தபட உள்ளது.  இச்சட்டம் மூலம் நுகர்வோர்களுக்கு அதிக பயன் கிடைக்கின்றது.  போலி விளம்பரங்களில் நடிக்கும் நபர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும். நுகர்வோர்கள் விழிப்புடன் இருந்து பாதிக்கப்படாமல் இருப்பது சிறப்பு.  போலி விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருட்களையும் தரமான பொருளாக சித்தரிக்கப்படுகின்றன.  நுகர்வோர் மன்றங்கள் சிறப்புடன் செயல்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு செல்ல வேண்டும். என்றார்

செறிவூட்டபட்ட உணவுகள் குறித்து பேசிய தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் நுகர்வோர் ஆர்வலர்களுக்கான பயிற்றுனர் சரவணன் பேசும்போது  உணவு பழக்களில் ஏற்பட்ட மாற்றங்களால் உணவுகளில் பேதிய சத்துக்கள் கிடைப்பதில்லை.  எனவே உணவுகளில் சத்துக்களை சேர்த்து வழங்கும் முறை அறிமுக படுத்த பட்டது.  1999 முதலே உப்பில் அயோடின் கலந்து வழங்கும் நடைமுறை உருவாகியது.  அதனை தொடர்ந்து 2011 முதல் கோதுமை, சமையல் எண்ணை உள்ளிட்டவற்றில் ஊட்டசத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.  மாணவர்களிடம் ஊட்ட சத்து கிடைக்க வேண்டும் எ்ன்கிற அடிப்படையில் தற்போது பள்ளி சத்துணவு திட்டத்தில் செறிவூட்டபட்ட அரிசி மூலம் சத்துணவு வழங்கப்படுகின்றது.  அதுபோல திருச்சி மாவட்டத்தில் ரேசன் அரிசியும் செறிவூட்டப்பட்ட அரிசியாக வழங்கப்படுகின்றது.  இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  செறிவூட்ட பட்ட உணவுகளுக்கு F லோகோ வழங்கப்பட்டுள்ளது.  நுகர்வோர் விழிப்புணர்வே மிக முக்கியம் என்பதால் மாணவர்களிடம் நுகர்வோர் விழிப்புணர்வை அதிகபடுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அ|லுவலர் மகேஸ்வரன், பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன். மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் மற்றும் பள்ளிகள் குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...