பந்தலூர் அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் மேம்படுத்த

 பெறுனர்

            மான்புமிகு  முதல்   அமைச்சர் அவர்கள்

          தமிழ்நாடு அரசு சென்னை.

            மான்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்கள்

            சுகாதார துறை  சென்னை.

 

மான்புமிகு உள்ளாட்சிகள் துறை அமைச்சர் அவர்கள்

சென்னை

 

பொருள் :       பந்தலூர் அரசு மருத்துவமனை  அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தர

கேட்டல் முறையான சிகிச்சை அளிக்க   கேட்டல் மற்றும் தர மேம்பாடு

செய்து தர கேட்டல் சார்பாக.

 

1.                  பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமனம் மற்றும்

செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமித்தல்.

2.                  24 மணி நேரமும் சிகிச்சை அளித்தல் அதற்கேற்ப மருத்துவர்கள் நியமித்தல்

3.                  மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கும் விடுதிகள் அமைத்து தர கேட்டல்

4.                  மருத்துவமனையில் இரத்த பரிசோதகர் இதர தொழில் நுட்ப பணியாளர்கள்

நியமிக்க வேண்டும் என கேட்டல்

5.                  நோயாளிகளுக்கு  3 வேளை சத்தான உணவு வழங்குதல்

6.                  டிஜிட்டல்  எக்ஸ்ரே இயந்திரம்  மற்றும் ஸ்கேன்  E G C  இயந்திரங்கள் வழங்க

இரத்த பரிசோதனை கருவிகள்  வழங்க கேட்டல்

7.                  மருத்துவமனையில் பழுதடைந்த கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடங்கள்

அமைத்|து கொடுக்க கேட்டல்

8.                  பிரசவங்கள் பார்க்க உரிய வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் மகபேறு மருத்துவ  நிபுனர் பணியில் நியமித்தல்  தொடர்ந்து பிரசவங்கள் பார்க்க  உரிய நடவடிக்கை     எடுக்க கேட்டல்

 

9.                  டயாலிசீஸ் பிரிவு ஆரம்பிக்க வேண்டும்

10.              புற்றுநோய் கண்டறிதல் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு ஏற்படுத்துதல்

11.              சிறப்பு  கிசிச்சை பிரிவு  (ஐ சி யு/ I C U ) வார்டு அமைத்து தர கேட்டல்

12.              மாதம் இரு முறை கண், காது, எலும்பு உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைகள் அளிக்க  மருத்துவர்கள் நியமித்து சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை  எடுக்க கேட்டல்

13.       

அய்யா அவர்களுக்கு

 

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் கடந்த 1998 முதல் தாலுக்கா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகின்றது.  கடந்த 2008 வரை ஒரு மருத்துவர் மருத்துவமனையாக இருந்த இந்த மருத்துவமனை தற்போது 5 ஆங்கில மருத்துவர்கள் பணிபுரிந்து சுழற்சி முறையில் 24 மணி நேர மருத்துவமனயைாக செயல்பட்டு வருகின்றது.  சில மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை தற்போது தரம் இன்றி செயல்பட்டு கொண்டு இருக்கின்றது.

பந்தலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தலைவலி தவிர வேறு எந்த நோய்க்கும் சரியான சிகிச்சை அளிப்பதில்லை.  பணி புரியும் மருத்துவர்கள் நோயாளிகளிடம் உரிய பரிசோதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றது.  சாதாரண நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்காத இவர்களால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

பல நோயாளிகள் விபத்தில் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற சென்றால் ஒன்றும் பாதிப்பில்லை என கூறி வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.  ஆனால் அதன்பின் தனியார் மருத்துவமனை மற்றும் கேரளா மாநிலத்திற்கு சென்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறு அடிதடி அல்லது விபத்து, மருந்து குடித்தவர்கள் என எந்த வித அவசர சிகிச்சையும் இங்கு வழங்கப்படுவதில்லை. இவர்கள் நோயாளியை கொண்டு போனவுடன் ஏதாவது காரணம் கூறி உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனை அல்லது ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துறைக்கின்றனர்.  கேட்டால் எந்தவித வசதியும் இல்லை என்கின்றனர்.

ஒரு மருத்துவர் பணிபுரிந்தபோது கூட தினசரி 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, சிறு அறுவை சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டது. மாதத்திற்கு இரு முறை குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதர சிகிச்சைகளும் நல்லமுறையில் மேற்க்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்பது வேதனை அளிக்கின்றது.  

இப்பகுதியில் தனியார் மருத்துவமனைகள் ஏதும் இல்லாத நிலையில் அருகில்       உள்ள    கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல 108 உள்ளிட்ட வேறு வசதிகளையும் ஏற்படுத்தி தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருகின்றது.

பிரசவம் உட்பட அனைத்து சிகிச்சைக்கும் உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தால் பந்தலூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்கள் எதற்கு என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் அளிக்காமல் அலைகழிப்பதால் பலரும் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.  அதுபோல அவசர சிகிச்சைக்கு வரும்போது உடனடியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்துவதல் நோயாளி உட்பட உறவினர்கள் அனைவரும் பதட்டப்படும் நிலையில் நோயாளிக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.

இதுபோல பல நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் அவதியடைவதும் பெரும் பாதிப்புக்குள்ளாவதும் தொடர்ந்த நிலையே உள்ளது. 

எனவே மீண்டும் இந்நிலை ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் பந்தலூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்திட முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் மருத்துவ மனை கட்டிடங்கள் பழமையானதாக உள்ளது சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்கள் தற்போது உடைந்து காணப்படுகின்றது.  பழைய கூரையாக இருப்பதால் மழை காலங்களில் மழை நீர் ஒழுகி காணப்படுகின்றது.  மக்கள் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற இயலாத நிலை உள்ளது. அவை எப்போது உடைந்து விழும் என்ற அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை உள்ளது.

மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கும் குடியிருப்புகள் அனைத்தும் அதே நிலையில் தான் உள்ளது. மருத்துவர்கள் செவிலியர்கள் கூரையின் மேலே பிளாஸ்டிக்போர்த்தி மழை நீர் ஒழுகுவதை தடுத்து அச்சமான நிலையில் வசித்து வருகின்றனர்.  இதனால் இவர்களுக்கு உரிய குடியிருப்புகளை அமைத்து தர வேண்டியதும் அவசியம் ஆகிறது.

குடியிருப்புகளுக்கு பணிபுரிவோரிடம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்வதால் வேறு இடத்தில் வாடகைக்கு தங்கினாலும் இரு வேற செலவுகள் இருப்பதாக கூறுகின்றனர்.  வெளியில் தங்கும் போது அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலை ஏற்படுகின்றது. எனவே புதிய குடியிருப்பு கட்டிதர வேண்டும்

எனவே மருத்துவ மனையை மேம்படுத்தி தர

Ø அடிப்படை வசதிகள் மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வழங்கி கட்டிடங்கள் இடவசதிகள் ஏற்படுத்தி மருத்துவ தரத்தை மேம்படுத்தி அனைத்து வகையான சிகிச்சைகளும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Ø பந்தலூர் அரசு மருத்துவமனையில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் வழங்கி அதனை செயல்படுத்த வேண்டும். ஸ்கேன் வசதி  ஏற்படுத்தி வாரம் ஒரு முறையேனும் முறையான பயிற்சி பெற்றவர்கள் மூலம் ஸ்கேன் எடுக்க செய்ய வேண்டும்.

 

Ø சிறப்பு மருத்துவர்கள் நியமணம் செய்து அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டும்.

 

Ø உள் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கு 3 வேளை  சத்துணவு வழங்கிட வேண்டும்.

 

Ø மருந்துகள் மாத்திரைகள் வழங்கும் போது உரிய சீட்டு வழங்குவதில்லை,  மேலும் மாத்திரைகள் அப்படியே வழங்கப்படுகின்றது.  எந்த மாத்திரை எப்போது சாப்பிடுவது என தெரியாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே தனி சிறிய கவர்கள் வழங்கி அவற்றில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Ø இரத்த பரிசோதனை, சிறுநீர் மற்றும் இதர பரிசோதனைகள் மருத்துவமனயைிலேயே மேற்க்கொள்ள வேண்டும்.

 

Ø விபத்து மற்றும் இதர அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முறையான முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும். 

 

Ø பொதுமக்கள் சிகிச்சை பெற 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டிய வகையில் கூடுதல் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்.

 

Ø நிரந்தரமாக மகளீர்கள் சிகிச்சை பெற உதவியாக பெண் மருத்துவர் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.

 

Ø ஏற்கனவே உள்ள உடைந்த பழுதான மருத்துவமனையை உடைத்து விட்டு இரு மாடி கட்டிடமாக சிறப்பு வசதிகளுடன் மருத்துவமனை கட்டிடம் கட்டி தர வேண்டும்

 

Ø ஏற்கனவே மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளை உடைத்து விட்டு மருத்துவமனை வளாகத்தின் ஒரே பகுதியில் இருமாடி கட்டிடமாக தற்போதைய வசதிகளுக்கு ஏற்ப புதிய குடியிருப்புகள்  கட்டி கொடுக்க வேண்டும்

 

Ø நோயாளிகள் அலைகழிக்க கூடாது.  மருத்துவமனை வளாகம் சுத்தமாக பராமரிக்கவேண்டும்

மேற்கண்ட வசதிகள் செய்து தரமான சிகிச்சை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு பொதுமக்கள் சார்பில்


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்

 


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...