ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மூலம்

 ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மூலம் பொருட்கள் விநியோக நடைமுறை படுத்தப்பட்டுள்ள நிலையில்

பல்வேறு பாதிப்புகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பதாக
1. நெறைய கடைகளில் நெட்ஒர்க் கிடைப்பதில்லை.  கடைகள் அமைந்துள்ள இடங்களில் நெட்ஒர்க் இணைப்பு இல்லாமல் ரேகை பதிவாகமல் அவதி படுகின்றனர். 

2. மழை காலம் என்பதால் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் நெட்ஒர்க் சேவையும் பாதிக்கிறது.  அதனால் பொருட்கள் வாங்க இயலாமல் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க இயலாமல் திரும்பி செல்லும் நிலை.

3. பயோமெட்ரிக் மிஷின் வேலை செய்ய 4G நெட் சேவை தேவை. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் bsnl நெட்ஒர்க் மட்டுமே பல இடங்களில் வேலை செய்கிறது.  Bsnl 4G சேவை இல்லை. மற்ற நெட்ஒர்க் சேவையிலும் 4G சேவையும் சரியாக கிடைப்பதில்லை.  இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

4. ரேஷன் கடைகளில் சனிடைசர் வழங்கப்பட வில்லை.  ஆனால் சனிடைசர் கொண்டு கைகள் சுத்த படுத்திய பின்தான் பொருட்கள் ரேகை பதிய படுகிறது என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.
இதனால் கொரனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

5. வயதானவர்கள் பலரின் கார்டுகள் உள்ளது. அவர்கள் பொருட்கள் வாங்க வந்து செல்வதில் மிக சிரமம் உள்ளது.  கொரனா தாக்கம் வயதானவர்களை அதிகம் தாக்கும் நிலை மற்றும் அவர்கள் வரும்போது சிக்னல் கிடைக்காமல் போனால் மீண்டும் வந்து முயற்சிக்கும் நிலை.

5. தேயிலை தோட்டங்களில் பனி புரிவோர் பலர் மழை நேரத்தில் கைகள் நனைந்து ஊறி  வருவதால் ரேகை பதியாமல் போகிறது.  பல முறை ரேஷன் கடைகளுக்கு வந்து செல்லும் நிலை.

6. பலர் நீலகிரியில் சொந்த ஊராக உள்ளது. ஆனால் திருப்பூர் கோவை உள்ளிட்ட இடங்களில் வேலைக்கு சென்றுள்ளனர்.  
தற்போது கொரனா காலம் என்பதால் அவர்கள் இங்கு வந்து செல்ல இயலாத நிலையும்  உள்ளது.

இவர்கள் அவர்கள் பனி புரியும் இடத்திற்கு கோவை அல்லது திருப்பூர் பகுதிக்கு ரேஷன் கார்டை மாற்றி கொள்ள வீட்டு முகவரி இல்லாத நிலை உள்ளது.

7. ரேஷன் கடைகளில் ஆயில் பருப்பு ஆகிய பொருட்கள் முழு ஒதுக்கீடு வரவில்லை என்பதால் சிலருக்கு ஆயில் பருப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...