பாலம் அமைத்து தர வேண்டும்

பந்தலூர் அருகே அம்மன்காவு கிராமம் சக்கரகுளம் மற்றும் சுற்று பகுதி கிராமங்களில் ஆதிவாசிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 


இந்த பகுதியில் வசிப்போர் பொன்னானி, குந்தலாடி பகுதிக்கு செல்லவும், பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வரவும், அருகில் உள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்வோரும் அருகில் ஓடும் பொன்னானி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.  இந்நிலையில் சக்கரகுளம் - புலியாடி பகுதிக்கு செல்லும் சாலையில் குறுக்கே ஆற்றை கடக்க 
மரங்களை கொண்டும் மூங்கில் கொண்டும் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலம் சமீபத்தில் பெய்த கனமழையால் அடித்து செல்லப்பட்டது.

பொன்னானி ஆறு அகலமாக இருப்பதால் நீண்ட பாலம் மரங்களை கொண்டு அமைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

தற்போது இந்த பாலம் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதி படுகின்றனர். 
இந்த பகுதியில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுபோல நெலக்கோட்டை ஊராட்சி மானிக்குன்னு மற்றும் சுற்று பகுதியையும், சேரங்கோடு ஊராட்சி எருமகுளம், கல்பரா உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றை கடக்கும் வகையில் சிமெண்ட் பாலம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் ஏற்கனவே கட்டப்பட்டது.  இதன் ஒருப்பகுதியான மானிக்குன்னு பகுதிக்கு செல்லும் பகுதியில் ஆற்றின் கரைக்கும் பாலத்திற்கும் இடையே உள்ள இணைப்பு பகுதிக்கு தடுப்பு சுவர் முறையாக கட்டப்படாமல் உள்ளதால் பாலத்தின் ஒரு பகுதி ஒற்றை சுவர் மட்டும் உள்ளது.  இதில் தான் தற்போது மக்கள் நடந்து செல்கின்றனர்.
இதில் பள்ளி மாணவர்கள், கூலி தொழிலாளிகள், பொது மக்கள் பலரும் சென்று வருகின்றனர்.
இதனால் தடுமாறி விழுந்தால் ஆற்றில் அடித்து செல்லும் அபாயம் உள்ளது.

எனவே இந்த பாலத்தின் இணைப்பு பக்கம் தடுப்பு சுவர் அமைத்து மண் நிரப்பி பாலத்திற்கும் மண் திட்டு பகுதிக்கும் இணைப்பை ஏற்படுத்தி மக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...