அரசு பேருந்தில் பயணிகள் ஏற்ற மறுப்பது மக்கள் அவதி குறித்து
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பேருந்துகளில் மூன்றில் 2 பாகம் பயணிகளை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதால்
பேருந்து களில் கூடுதல் பயணிகள் ஏற்றாமல் இறக்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம புற பேருந்துகள் அவ்வப்போது ஒரு நடை இயக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவே பயணிகள் ஏற்றி செல்வதால் மக்கள் பலரும் பேருந்தில் செல்ல இயலாமல் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் பயணிகளை ஏற்றுவதால் கொரனா பரவும் என்பது வேடிக்கையானதாகவே உள்ளது.
54 பேர் செல்ல வேண்டிய பேருந்தில் 35 பேர் சென்றால் கொரனா பரவாதா? இவர்களும் ஏறும் போதும் இறங்கும் போதும் மற்ற பயணிகளை கடந்து தானே செல்ல வேண்டும்
அப்போது மற்ற பயணிகள் அருகில் செல்லும்போது பரவாதா?
பயணிகள் படிக்கட்டு கைபிடிகள் தொட்டே ஏறுகின்றனர்.
இதர கம்பிகளை பிடித்தே பயணிக்கின்றனர்.
சீட்டுகளில் அமர்ந்து சென்றால் அவர்கள் சீட்டின் மற்ற இடங்களில் தொடத்தான் செய்கிறார்.
இதில் குறைந்த பயணி என்றாலும் கூடுதல் பயணி என்றாலும் இதே நிலை தான்.
குறைந்த பயணிகளை ஏற்றினால் மட்டும் பயணிகள் கொரனா தாக்கம் ஏற்படாது என்பது ஏற்புடையதல்ல
கூடுதல் பயணிகளை ஏறினால் அபராதம் என்பதால்
பயணிகளை நடு வழியில் இறக்கி விடுகின்றனர்.
பேருந்திற்கு காத்திருப்போரை ஏற்றாமல் செல்கின்றனர்.
இதனால் பொது மக்கள் பாதிக்கபடுகின்றனர்.
தனியார் வாகனங்களில் பன்மடங்கு கட்டணம் செலுத்தி செல்லும் நிலையே உள்ளது.
எனவே இந்த நிலையை மாற்றி இருக்கை அளவுக்கு கூடுதல் பயணிகளை ஏற்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.
பயணிகள் பாதுகாப்பிற்கு அவ்வப்போது சனிடைசர் பேருந்துகளுக்கு தெளிக்க வேண்டும்.
ஏற்கனவே
போக்குவரத்து துறை அமைச்சர் சொன்னது போல முக கவசம் அணியாத பயணிகளுக்கு குறைந்த விலையில் மாஸ்க் வழங்கி ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.
கோவை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்ட பேருந்துகளில் வருவோரை தனிமை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது போக்குவரத்தை துண்டிக்க வேண்டும்.
என்றும் மக்கள் நலனில்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
பந்தலூர் நீலகிரி மாவட்டம்
No comments:
Post a Comment