உறுப்பினர்களுக்கும் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 பெறுனர் 

மாவட்ட ஆட்சியர் அவர்கள்

மாவட்ட ஆட்சியரகம் உதகை.

 

பொருள்       கொரனா பாதிப்பு தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள குடும்பத்தார் உறுப்பினர்களுக்கும் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 

அய்யா அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்,


நீலகிரி மாவட்டம் பந்தலூர்  கூடலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கொரனா தொற்று அதிகரித்து வருகின்றது.  கொரனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புடையவர்கள் கொரனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள படுகின்றது.  ஆனால் கொரனா தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு கொரனா தொற்று குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளவதில்லை.


கொரனா தொற்று பாதிப்பு ஏற்படுவது குறித்து அறிவதில்லை,  இதனால் கொரனா பாதிப்பு கண்டறியபடாமல் மக்களிடையே கொரனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.

சமீபத்தில் மேங்கோரெஞ் பகுதியில் கொரனா தொற்று ஏற்பட்டது அதில் கெரனா தொற்று ஏற்பட்டவர் உடன் பணியாற்றியவர்களுடன் மட்டும் கொரனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள படுகின்றது.  பணியாற்றியவர்கள் தொடர்பில் உள்ள குடும்பத்தாருக்கு கொரனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள வில்லை.

 

இதனால் பணியாற்றியவர்கள் மூலம் கொரனா தொற்று  அவர்களின் குடும்பத்தாருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது அவர்களை கண்டறியாத பட்சத்தில் கொரனா அதிக நபர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.  எனவே கொரனா தொற்று குறித்து அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளவும்,  

 

கொரனா தொற்று ஏற்படும் போது கொரனா தொற்று  பரிசோதனை மாதிரி எடுக்கப் பட்டுள்ளவர்களை பரிசோதனை முடிவு வரும்வரை  வெளியில் நடமாட தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன் 

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...