பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன?

பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன?

பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன?

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.

இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது :

National Green Tribunal
Faridkot House, Copernicus Marg, New Delhi-110 001
Phone : 011-23043501, Fax : 011-23077931
Email : rg.ngt@nic.in, Web : http://www.greentribunal.gov.in

நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது.

சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.

இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.

இதன் தென்மண்டல அலுவலகம் சென்னை, அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரிய அலுவலக கட்டடத்தில் இயங்குகிறது.

முகவரி :

தேசிய பசுமை தீர்ப்பாயம்
தென்மண்டலம், No.:950/1,
முதலாவது, இரண்டாவது மற்றும் மூ்ன்றாவது தளங்கள்
பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம்,
சென்னை=600 106.

மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613
E-Mail: sanctuarylegal@gmail.com
Web : www.sanctuarylegal.in

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...