நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

 நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி தனிவட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கேபிள் டிவி தனிவட்டாட்சியர் ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட மேலாளர் நடராஜ் முன்னிலை வகித்தார்.


அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளான கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசும்போது

அரசு கேபிள் டிவி தரமான முறையில் சேவை வழங்க வேண்டும். நிர்ணயித்த கட்டணம் வசூலிப்பதை உறுதிபடுத்த வேண்டும். சேரம்பாடி எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் கேரளா மாநில இணைப்புகளை தமிழக அரசின் கேபிள் டிவி இணைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இ சேவை மையங்களில் கூடுதல் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். ஆதார் சேவை மையங்களில் கட்டண பட்டியல் ஓட்ட வேண்டும். ஆதார் சேவை மையங்கள் முறையாக இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்க படாமல் முறையான சேவை வழங்க வேண்டும்.


பதில் அளித்த கேபிள் டிவி தனி வட்டாட்சியர் ஆனந்தி பேசும்போது 

அரசு கேபிள் டிவி இணைப்பு மூலம் தற்போது செய்தி, விளையாட்டு, திரைப்படம் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து வகையைச் சேர்ந்த 268 சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன படுகிறது. தற்போது கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட 160 ரூபாய் பெறப்படுகிறது. இணைய வழியில் நேரடியாக கூட கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. கட்டண காலம் முடிந்தவுடன் ஒளிபரப்பு தானாக நிறுத்தப்படும். புதிய இணைப்பு பெற SD இலவசமாகவும் HD இணைப்பு 500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். கேரளா மாநில எல்லை பகுதிகளில் மலையாள பேக்கேஜ் அதிகம் கேட்பதால், இணைய வசதியுடன் கேபிள் சேவை வழங்குவது குறித்து ஏர்டெல் நிறுவனம் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மாநில அரசு ஒப்பந்தம் மேற்கொண்டபின் தமிழக அரசு கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்படும். இசேவை மையங்களில் ஒரு நபர் பணிக்கு ஏற்ப இருந்தால் கூடுதல் பணியாளர் நியமனம் செய்ய இயலாது. ஆதார் சேவை மையமும் தினசரி சராசரியாக 20 பதிவுகள் வருவதால் கூடுதல் மையங்கள் திறக்க இயலாது. மாநில அரசு மூலமே தனியார் இ சேவை மையங்கள் பதிவு பெற்று செயல்படுகின்றன. ஆதார் சேவைகள் தனியார் மையங்களில் முகவரி மாற்றம் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதர சேவைகளுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம், எல்காட் மற்றும் அஞ்சலகம் ஆகிய சேவை மையங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். சேவை மையங்களின் பணிகள் குறித்து தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண பட்டியல்கள் ஒட்டி வைக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை

 நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன ச...