தீயணைப்பு துறை மாவட்ட நுகர்வோர் காலாண்டு கூட்டம்

 உதகை தீயணைப்பு துறை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகத்தில்

துறை ரீதியான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் காலாண்டு கூட்டத்திற்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி மகேந்திர பூபதி, கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முகமது சலீம், நிர்வாகி இஸ்மாயில், 

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், உதகை தொகுதி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் அமீர்கான் ஆகியோர் கலந்துகொண்டு பேசும்போது 

பந்தலூர், குந்தா வட்டங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். கூடலூர் பகுதியில் விபத்து நேரங்களில் தீயணைப்பு வாகனங்கள் தண்ணீர் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது - இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், வணிக நிறுவனங்களில் தீயணைப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கோத்தகிரியில் தற்போது உள்ள தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மற்றும் மாணவர்கள் இடையே தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்றனர்.


பதில் அளித்த மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் பேசும்போது பந்தலூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறைக்கான இடவசதி கிடைத்தால் அல்லது அரசு நிலம் ஒதுக்கி தந்தால் புதிய கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியில் தீயணைப்பு, பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி மையம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அரசு சார்பில் சுமார் 10 முதல் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் பேரிடர் மீட்பு பயிற்சி மையம் அமைக்படும். இதன்மூலம் மாநிலத்தில் இருந்து பலரும் மலைப்பகுதியில் பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி பெற ஏதுவாக அமையும். நுகர்வோர் அமைப்புகள் நிலம் கிடைக்க முயற்சி செய்து தர வேண்டும். மேலும் தீயணைப்பு நிலையத்தில் ஒரு லாரியில்

தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது. எனினும் அவசர நேரத்தில் உள்ளாட்சி மன்றங்கள் தண்ணீர் தந்து உதவினால் பயனளிக்கும் இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் ஏற்பாடு செய்து கொள்வோம். பேரிடர் மீட்பு குறித்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொடுத்தால் துறை சார்பில் பங்கேற்று பயிற்சி அளிப்போம் என்றார்.


நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அலுவலர்கள் நுகர்வோர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை

 நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன ச...