தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு
கூடலூர்: கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சியில் தேசிய நுகர்வோர் தின சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆல் தி சில்ரன் அமைப்பு மற்றும் மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நடைபெற்றது நிகழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கில் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார்
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் பேசும்போது
நாம் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை 5 முதல் 20 கிராம் வரையே நாளொன்றுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில், குளிர்பானத்தில் 3000 பிபிஎம் அளவு சர்க்கரையும், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் 1000 பிபிஎம் அளவுக்கு மேல் உப்பும் உள்ளது. இவை 10 மடங்கு அதிகம். அதுபோல்
நொறுக்குத்தீனி வகைகளில் சேர்க்கப்படும் எண்ணெய், உப்பு போன்றவை மீண்டும் தின்பதற்கு துண்டுதலை உருவாக்குகின்றன. இவை உடலில் பல்வேறு நோய்கள் அடித்தளமாக அமைகிறது.
உணவு பாதுகாப்பு சட்டப்படி 100 பிபிஎம் வரை சுவைக்கு அஜினமோட்டோ சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் உணவுகளில் இவை அதிகமாக உள்ளது சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட தகவல்களைப் பார்த்து உணவுப் பொருட்கள் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.
கூடலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் பேசும்போது
அனைவரும் நுகர்வோர் என்ற நிலையில் தரமான பொருட்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் என்ன பயன்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட் விளம்பரம் தீர்மானிக்கிறது.
இவர்களோடு போட்டி போட முடியாமல் தரமான பொருட்கள் மக்களிடம் சென்று சேர்க்க முடியாமல் முடங்கியுள்ளனர்.
மையோனாஸ், சபர்மா உள்ளிட்ட உணவுகள் ருசி கவர்ச்சியால் ஈர்ப்பது வியாபார தந்திரம். ஆனால் அவை நம்நாட்டு உணவுகள் அல்ல இவற்றால் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு கட்டுப்பாடுகளும் அவசியம் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் குறைகளை களைவதற்கு இணைய வழியில் புகார் அளிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஈ-தாக்கல் முறையில் நுகர்வு குறைதீர் ஆணையங்களில் புகார் அளிக்கலாம். மொபைல் ஆப்கள் மூலம் தர குறியீடுகளை அறிந்து கொண்டு தரமற்ற பொருட்களுக்கும், உணவு பொருட்கள் சார்ந்த குறைபாடுகளுக்கும் வாட்ஸ்அப் மற்றும் இணையம் வழியில் புகார்களை தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுகர்வோர் குறைகள் விரைவாக களைய முடிகிறது என்றார்.
நிகழ்ச்சியில் பயிற்சி மைய பயிற்றுநர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment