Showing posts with label ccc. Show all posts
Showing posts with label ccc. Show all posts

District Consumer Disputes Redressal Forums

What are the addresses of the District Consumer Disputes Redressal Forums functioning in the State of Tamil Nadu
SL. NO:
District Consumer Disputes Redressal Forum / COMMISSION
Telephone numbers
1
The President,
State Consumer Disputes Redressal Commission,
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
044-24940687
044-24618900
2
The President,
District Consumer Disputes Redressal Forum (Chennai – South)
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
044-24938697
3
The President,
District Consumer Disputes Redressal Forum (Chennai – North)
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
044-24952458
4
The President,
District Consumer Disputes Redressal Forum,
Sub-Collector Office Campus,
GST Salai, Melamaiyur Village, Chengalpattu, Kancheepuram District
044-27428832
5
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 1, D.C.V. Naidu Road, 1st Cross Street,
Tiruvallur – 602 001
04116-27664823
6
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus
Saththuvachcheri, Vellore – 632 009
0416-2254780
7
The President,
District Consumer Disputes Redressal Forum,
58/D, Anna Salai, Adhidravida Welfare Office (Ground Floor)
Dindivanam, Tiruvannamalai – 606 601

8
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 58, Chennai Trunk Salai,Villupuram, Villupuram District

9
The President,
District Consumer Disputes Redressal Forum,
102, Pudhupalayam Main Road, Cuddalore – 2
04142-295926
10
Dharmapuri -- @ Krishnagiri

11
The President,
District Consumer Disputes Redressal Forum,
Yercard MainRoad, Hasthampatty,
Salem – 636 007
0427-2213279
12
The President,
District Consumer Disputes Redressal Forum,
3-152-D, Jeeva Complex Tiruchi Main Road, Namakkal – 637 001
04286-224716
13
The President,
District Consumer Disputes Redressal Forum,
Erode Commercial Complex
Surampatti Naal Road, Erode – 638 009
0424-2250022
14
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Collector’s Office campus, Coimbatore – 641 018
0422 - 2300152
15
The President,
District Consumer Disputes Redressal Forum,
N.G.M.S.Campus, Udhagamandalam – 643 001
04232 - 2451500
16
The President,
District Consumer Disputes Redressal Forum,
Municipal Buildings, Azad Salai, Karur – 639 002
04324 - 260193
17
The President,
District Consumer Disputes Redressal Forum,
Lakshmi Illam, 345, Rower Nagar, First Floor
Ellampaloor Salai, Perambalur, Perambalur District – 621 212
04328-276700
18
The President,
District Consumer Disputes Redressal Forum,
St. Mary’s Campus, First Floor,
Bharathidasan Road, Tiruchirapalli – 620 001
0431-2461481
19
The President,
District Consumer Disputes Redressal Forum,
Ilango Commercial Complex. Court Road, Neethi Nagar,
Thanjavur – 613 002
04362-272507
20
The President,
District Consumer Disputes Redressal Forum,
52, Kumaran Koil Salai, Tiruvarur, Tiruvarur District – 610 001
04366-224353
21
The President,
District Consumer Disputes Redressal Forum,
543, Public l Office Road, Vellipalayam, Nagapattinam – 611 001
04365-247668
22
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus, Pudukottai, Pudukottai District

23
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 95 & 96, Pensioners’ Street,
Near Arya Bhavan, Dindigul, Dindigul District
0451 - 2433055
24
The President,
District Consumer Disputes Redressal Forum,
1st Floor, Combined Court Building, Lakshmipuram,
Periakulam Road, Theni – 625 523
04546-269801
25
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus, Madurai, Madurai District
0452-253304
26
The President,
District Consumer Disputes Redressal Forum,
10 / 25, Thirupattur Road, Sivaganga – 630 561
04575-241591
27
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Complex, Srivilliputtur, Virudhunagar – 626 125
04563-260380
28
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Collecrate Campus, Ramanathapuram – 623 501

29
The President,
District Consumer Disputes Redressal Forum,
2/ 263, 10th Street, "Valli Illam" , P & T Colony,
Thoothukudi – 628 008

30
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 4/993, 2nd Street, Shanthi Nagar,
Bell Ambrose Colony, Palayamkottai, Tirunelveli – 627 002
0462-2572134
31
The President,
District Consumer Disputes Redressal Forum,
New No: 55, Old No: 36/1, First Floor, President Sivadhanu Salai,
S.L.B. Higher Secondary School (South), Nagarcoil,
Kanniyakumari – 629 001
04652-229683
32
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 46, M.V.K. Mansion, West Links Colony,
Krishnagiri – 635 001



தமிழக அரசு சேவைகள்


தமிழக அரசு
சேவைகள்
திட்டங்கள்
படிவங்கள்
ஆவணங்கள்
கோரிக்கை தீர்ப்பு
தமிழ் நாடு
முகப்பு » சேவைகள்


திணைக்களம்
சேவைகள் முறை
வகை
தேடல்
 வேளாண்மை துறை
 வணிகவரி மற்றும் பதிவுத்துறை
 எரிசக்தி
 நிதி துறை
 உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
 வேளாண்மை துறை
 வணிகவரி மற்றும் பதிவுத்துறை
 எரிசக்தி
 நிதி துறை
 உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
 தொழில் துறை
 தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
 சட்டத்துறை
 பொது துறை
 வருவாய் துறை
 பள்ளிக் கல்வி துறை
 சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
 போக்குவரத்து துறை

 

தரமான தேயிலை மற்றும் தேயிலையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

பந்தலூர் பாரிஸ் ஹாலில் தரமான தேயிலை மற்றும் தேயிலையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது

குன்னூர் தென் இந்திய  தேயிலை  வாரியம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல்   பாதுகாப்பு மையம், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்

பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தாளாளர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியை பந்தலூர் வட்டாச்சியர் இன்னாசிமுத்து துவக்கி வைத்து பேசிய பொது    இந்தியாவில்    தேயிலைத் தொழில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல்   பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது.   இப்பகுதி மக்கள் தேயிலையை நம்பியே வாழ்கின்றனர் நல்ல தேயிலை பல்வேறு பயன்களை தருகின்றது. விளம்பர பானங்களை தவிர்த்து தேயிலையை அதிகம் பயன் படுத்த வேண்டும் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  தென்னிந்திய தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரி பிரகாஷ்  பேசும் பொது   தேயிலை தொழில் பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் ஆகும்.  அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.  தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். தேயிலை தயாரிப்பு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தொடர்ந்து  மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேயிலை வாரியம் முடிவு செய்துள்ளது என்றார்.

தேயிலை கலப்படம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்  மருத்துவர் ரவி பேசும்போது
தேயிலையில் கலப்படம் செய்யும் போது அதன் தன்மை மாறி விடுகின்றது இதனால் தேயிலையின் நல்ல பயன்கள் மாறி பாதிப்பு   ஏற்படுத்துகின்றது. தேயிலை தூள் வாங்கும்போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் தகவல்கள் பார்த்து வாங்கினால்  தரமான தேயிலை கிடைக்கும் என்றார்.

பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேயிலையின் பயன்கள் குறித்து பேசிய உபாசி திட்ட அலுவலர் சிவகுமார் போசும்போது  தேயிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது  சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது. தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய்வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது.என்றார்

தொடர்ந்து தேயிலையின் தரம் குறித்து சுனில் குமார் பேசினார்

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பந்தலூர் அரசு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணப்பாளர் தண்டபாணி காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர்  கொண்டனர்

முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்டின் வரவேற்றார்

முடிவில் நுகர்வோர் மைய செயலாளர் கணேஷன் நன்றி கூறினார் 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்   pls visit our webs  http://cchepnlg.blogspot.in/    http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

மின் நுகர்வோர், சம்பந்தப்பட்ட குறைதீர் மன்றத்தை மட்டுமே அணுக வேண்டும்'

"தவறான மின் கட்டண கணக்கெடுப்பு உள்ளிட்ட சேவைகள் தொடர்பான குறைகளுக்கு, மின் நுகர்வோர், சம்பந்தப்பட்ட குறைதீர் மன்றத்தை மட்டுமே அணுக வேண்டும்' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர், குணசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின் நுகர்வோரிடம் இருந்து, தவறான மின் கட்டண கணக்கெடுப்பு, புதிய மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம், குறைபாடுடைய மின்சார மீட்டர், குறைபாடான மின் வழங்கல் போன்ற பல்வேறு குறைபாடுகள் குறித்து, அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் வருகின்றன. ஆனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இத்தகைய பொருட்கள் குறித்து, நடவடிக்கை எடுக்க முடியாது. 

எனவே, மின் நுகர்வோர், அத்தகைய முறையீடுகளை, ஆணையத்திற்கு அனுப்ப வேண்டாம். அந்த மனுக்களை, வட்டார மின்சார அலுவலகத்தில் உள்ள, மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு அனுப்பும்படி, கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

ஒவ்வொரு மின் வட்டத்திலும், மின் வட்டத்தின் மேற்பார்வை பொறியாளரை தலைவராகக் கொண்ட, மின் நுகர்வோர் குறைதீர் மையம் செயல்பட்டு வருகிறது. இதில், இரண்டு அலுவல் சாராத உறுப்பினர், மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், சேவை தொடர்பான குறைகளுக்கு, மின் நுகர்வோர், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் மன்றத்தை அணுகலாம். அத்தகைய மனுவை பெற்றதற்கான, ஒப்புகை அந்த மன்றத்தில் இருந்து, ஏழு பணி நாட்களுக்குள் வழங்க வேண்டும். குறைதீர் மன்றம், இரண்டு மாதங்களுக்குள் மனுக்கள் மீதான ஆணைகளை பிறப்பித்தல் வேண்டும். 

முறையீட்டாளர் மன்றத்தின் தீர்ப்பில், திருப்தியடையவில்லை என்றால் அல்லது முறையீடு தாக்கல் செய்த, இரண்டு நாளில் இருந்து, இரண்டு மாதங்களுக்குள் பதிலுரை எதையும் பெறவில்லை என்றால், சென்னையில் உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலகத்தில் அமைந்துள்ள, மின்குறை தீர்ப்பாளருக்கு மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்


உதகை அருகே கத்தாடிமட்டம் அரசு மேல் நிலை பள்ளியில்  உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் நாட்டு நலப் பணி திட்டம் ஆகியன இணைந்து      சிறப்பு நுகர்வோர்  விழிப்புணர்வு முகாமினை நடத்தின.  நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாரதாமணி தலைமை தங்கினார் 
நாட்டு  நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 
"நுகர்வோர்கள் இன்று பல்வேறு நிலைகளில் ஏமாற்ற படுகின்றனர் இதற்க்கு கரணம் நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது தான். நுகர்வோர் அனைவருக்குமே பல்வேறு உரிமைகளும், கடமைகளும் உள்ளது. நுகர்வோரின் கல்விக்கான உரிமையை செய்து தருவது அரசின் கடமையாகும். நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பள்ளிகளை துவக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது ஒரு தலை முறையினருக்கே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அர்த்தம்.

நுகர்வோருக்கு உரிமை இருப்பதைபோல தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் கடமையும் உள்ளது. பொருட்களை, சேவையை பெறும்போது அவைகளை ஆராய்ந்து பார்ப்பது ஒவ்வொரு நுகர்வோரின் கடமையாகும். வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி பொருட்கள் வாங்குவது தவறு.  உரிமையும், கடமையும் சரி சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவு பொருட்கள் தரமானவைகளா? கலப்படம் அற்றதா? என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். பாஸ்ட் பூட் எனப்படும் நுடுல்ஸ், லேஸ், போன்ற உணவு வகைகள் உடலுக்கு தெங்கு விளைவிக்க கூடியவை  

கலர் ஏற்றப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் இயற்கை உணவுகளை உண்டதால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். இன்று நமது சராசரி வயது 63 ஆக உள்ளது. இது மட்டுமின்றி சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே தரமற்ற பொருட்களை  வாங்குவதை தவிர்த்து தர முத்திரைகள் பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் என்றார் 

முதுகலை ஆசிரியர் அர்சுனன், மாணவி தீபிகா ஆகியோர் நுகர்வோர் குறித்து பேசினார்கள்.  

ஆசிரியர் யோகநாத மூர்த்தி, இராமச்சந்திரன், கணேஷன் மெர்சி  கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகி ஜெயபிரகாஷ்  மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் 400க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.


முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ தலைவர் ரியாஸ் அகமது வரவேற்று பேசினர் 

முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.






நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலர் ஜெயலச்ச்மி பொருளார் நிஷா மற்றும்  நிர்வாகிகள் செய்து இருந்தனர்.   

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...