CERTIFICATION MARKS IN INDIA


 ✅ CERTIFICATION MARKS IN INDIA 


🔶 Certification marks in India are used to assure consumers about the quality and standards of various goods and services. 


💢 AGMARK

✔️ Purpose: Guarantees the quality and purity of agricultural produce.

✔️ Issued by: The Directorate of Marketing & Inspection under the Ministry of Agriculture & Farmers Welfare, Government of India.


💢 ISI Mark

✔️ Purpose: Certification mark for industrial products, signifying conformity to Indian Standards.

✔️ Issued by: The Bureau of Indian Standards (BIS).


💢 FPO Mark

✔️ Purpose: Indicates that processed fruit products adhere to food safety standards.

✔️ Issued by: Ministry of Food Processing Industries.


💢  India Organic

✔️ Purpose: Certifies that a product meets the National Standards for Organic Production. 

✔️ Issued by: the National Programme for Organic Production (NPOP).


💢  Ecomark

✔️ Purpose: An eco-label issued for products that demonstrate reduced environmental impact. 

✔️ Issued by:  The Bureau of Indian Standards (BIS).


💢  Woolmark

✔️ Purpose: Assures the purity and quality of wool products.

✔️ Issued by: The Woolmark Company (a subsidiary of Australian Wool Innovation Limited).


💢  Hallmark 

✔️ Purpose: Certifies the purity of precious metals like gold and silver in jewelry.

✔️ Issued by: The Bureau of Indian Standards (BIS).

  

Gudalur Consumer Human Resources and Environment Protection Center - The Nilgiris 643233.




கர்ப்பிணிபெண்கள்* - 3

 *#கர்ப்பிணிபெண்கள்* - 3


போலிக் அமிலக் குறைபாடு

 

1. கை கால்கள் சில்லிட்டுப் போதல்.


2. கை கால்களில் சிறு உதறல் ஏற்படுதல்


3. குதிக்கால் வலி பிரதானமாக இருத்தல்.


4. தோல் வெளுப்பாக இருத்தல்.

5. ஞாபக மறதி அதிகமாக இருத்தல்


6. சதைப் பிடிப்பும், வாய்வுப் பிடிப்பும் அதிகமாக இருத்தல்


7. நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல்.

8. இரத்தச் சோகை அதிகரித்தல்


9. மதியம் சாப்பிட்ட பின், கொஞ்சமாவது தூங்கினால்தான் அடுத்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுதல்.


கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மருந்து உட்கொண்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம்.


உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. 


கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. தேவைக்கேற்ப குடிக்கலாம். 


கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 643233.

ஐஸ் கிரீம்களில்

 ஐஸ் கிரீம்களில், "கிரீம்' அதிகமாக இருப்பதற்காகவும், நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை இருப்பதற்காகவும், அதில், "சயனைடு' ஸ்டார்ச் மாவு கலக்கப்படுவதால், அதைச் சாப்பிடும் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தான், மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. மரவள்ளிக் கிழங்கை அரைத்துத் தயாரிக்கப்படும், "ஸ்டார்ச்' எனப்படும், கிழங்கு மாவு, பேப்பர் கூழ், பசை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். பெரும்பாலான ஆலைகள், தோலை நீக்காமலேயே, "ஸ்டார்ச்' தயாரிக்கின்றன.

வியாபாரிகள் பலர், தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை வாங்கி, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். "சயனைடு' என்பது கொடிய விஷம். 

இதன் வீரியத்தைக் குறைத்து, "ஸ்டார்ச்' மாவில் கலக்கின்றனர். 

அந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:"ஸ்டார்ச்'சை பேப்பர் கூழ், பசை தயாரிப்புக்காக விற்பனை செய்கிறோம் என, சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை கொள்முதல் செய்து, சில ஐஸ் கிரீம், நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். 

பால் மூலம், "கிரீம்' உற்பத்தி செய்ய செலவு அதிகமாகும். அதற்குப் பதிலாக, "ஸ்டார்ச்' மாவு கலப்பதால், குறைந்த செலவில், "கிரீம்' அதிகமாகக் கிடைக்கும். இதனால், சில தயாரிப்பாளர்கள், 

ஐஸ் கிரீமில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர்.

குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைத்த நூடுல்ஸ்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். இந்த நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கப்படுகிறது.

சில்லி சிக்கன், மீன் வருவல் ஆகியவற்றிலும் மசாலா பிடிக்க வேண்டும், 

மொறுமொறு தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக,

குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர். "ஸ்டார்ச்' தயாரிப்புக்காக, தோலுடன் கூடிய மரவள்ளிக் கிழங்கை அரைத்து உலர வைக்கும்போது, தோலில் காணப்படும், "சயனைடு' விஷத்தின் வீரியம் குறைந்து விடும். எனினும், முழுமையாகக் குறையாமல் ஓரளவு மாவில் கலந்திருக்கும் .

"ஸ்டார்ச்' கலந்த நூடுல்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிடும் குழந்தைகள், குறுகிய காலத்தில் வயிற்று வலி, அல்சர் உட்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாவர். நூடுல்ஸ் தயாரிக்கும் பெற்றோர், நூடுல்சை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொதிக்க வைத்த நீரில், 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், வெந்நீரை கொட்டி விட்டு, நூடுல்சை எடுத்து வழக்கம் போல தயாரிக்க வேண்டும். 

ஐஸ் கிரீமை பொருத்தவரை, நுகர்வோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.உணவுப் பொருட்களில் சட்டவிரோதமாக, "ஸ்டார்ச்' கலக்கப்படுவதால், சேகோ ஆலைகளில் தோல் நீக்கிய மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' தயாரிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

மீறி தயாரிக்கும் ஆலைகள் மீது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அனுராதா கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

கிர்ணி பழத்தை யாரும் மிஸ் பண்ணாதீங்க

 இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கிர்ணிப்பழம்...!


கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அலவு அதிகமாக உள்ளதால் இதனை ஜூஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.


உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழம் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் கண்கள் பிரகாசிக்கும். 


ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள கலோரி 546, வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு.

 

கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும். கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

 

பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. 


பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும்.வேறு எந்தப் பழமும் இதைப் போல வேகமாக உடல் சூட்டைத் தணிப்பதில்லை.

 

உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

 

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

 

கிர்ணிப் பழம் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்க உதவியாக உள்ளன.

 

நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழமாகவும் இருக்கிறது கிர்ணி பழம்.


இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கிர்ணி பழத்தை யாரும் மிஸ் பண்ணாதீங்க....

ஒரு உத்தரவாதி (பிணை தருபவர் விலகி கொள்ள முடியுமா

 *ஒரு உத்தரவாதி (பிணை தருபவர்) ஜாமீன் (SURETY)   கையெழுத்து போடுபவர்கள் தங்கள் பிணையை நீக்கி கொள்ள முடியுமா? 

தங்களின் உரிமைகள் என்ன?கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.*            


இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) - 1872

இந்த சட்டத்தின் 8 ஆம் பகுதியில்   (Indemnity and Guaranty) இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  


124 வது பிரிவு முதல் 147 வது பிரிவு வரையில்  SURETY பற்றி நாம் இந்த சட்டத்தில் விரிவாகக் காணலாம். 

SURETY கொடுப்பவரை உத்தரவாதம் கொடுப்பவர் என்பதால் உத்தரவாதி என்றும் தமிழில் கூறுகிறார்கள்.


SURETY LOAN என்றால்.


மற்ற லோன்கள் வங்கியில் வாங்கும்போது  கொடுப்பவர், வாங்குபவர் என்று இருவர் மட்டுமே இருப்பார்கள். அடமானக் கடன் என்றால், இவர்கள் இருவரைத் தவிர சொத்துக்கள் இருக்கும்.  


ஆனால், இந்த சூரிட்டி லோனில் கடன் கொடுத்தவர் (Creditor), கடனை பெற்றவர் (Principal Debtor) மற்றும் உத்தரவாதம் அளித்தவர் (SURETY)  என்று மூன்று நபர்கள் இருப்பார்கள். 


இவர்கள் மூன்று பேர்களில் பாதுகாப்பு இல்லாதவர் உத்தரவாதம் அளித்தவர்தான். 


ஆனால்  உத்திரவாதம் அளித்தவருக்கும் சட்டம் மூன்று வகையான உரிமைகளை அளித்திருக்கிறது.  அது என்ன என்று பார்ப்போம்.


1. கடன் பெற்றவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்பும் உரிமை.

வாங்கிய கடனை உரிய காலத்திற்குள் செலுத்தி அந்தக் கடனை உடனே தீர்க்க வேண்டும்! என்று கடன் வாங்கியவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப சூரிட்டி தந்தவருக்கு உரிமையுண்டு.


2. பற்று உரிமையை மாற்றிக் கொள்ளுதல்  கடன் வாங்கியவர் வங்கிக்கு கொடுக்க வேண்டிய தொகை முழுவதையும் வங்கியில் சூரிட்டி அளித்தவர் கட்டிவிட்டு, வங்கிக்கு இருந்த உரிமைகளை தனக்கு மாற்றிக் கொள்லலாம். 


இதனை ஆங்கிலத்தில் Subrogation (பற்று உரிமை மாற்று) என்று சொல்கிறார்கள்.


3. கடன் பெற்றவருக்குள்ள பத்திரங்கள்மீது உரிமை பற்று உரிமையை மாற்றிக் கொண்ட பிறகு, கடன் வாங்கியவர் வங்கியில் இந்தக் கடனுக்காக அடமானமாக வைத்திருந்த சொத்துப் பத்திரங்களின்மீது, 

கடன் கொடுத்திருந்த வங்கி எடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும் எடுக்கும் உரிமை பிரிவு 141-ன்படி   கடன் கொடுத்தவருக்கு வந்துவிடும்.   

               

4. இழப்பு எதிர்காப்பு உரிமை - Indemnity

கடன் வாங்கியவர் சார்பாக சூரிட்டி கொடுத்தவர் வங்கியில் செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு  உரிமை  பிரிவு 149-ன்படி  அவருக்கு உண்டு.


5. கடனாளியை கட்டாயப்படுத்தும் உரிமை

சூரிட்டி கொடுத்தவர், வங்கியின் நெருக்கடி காரணமாக, கடன் வாங்கியவர்   சார்பாக வங்கியில் பணம் செலுத்துவதற்கு முன்பாக  கடன் வாங்கியவரிடம்  தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்கலாம்.


தனது சூரிட்டியை ஏற்று கடன் கொடுத்தவருக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் 


1. வங்கியில் உள்ள, கடன் வாங்கியவரின் பத்திரங்களை கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால்,  தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.


2.  கடன் வாங்கியவர் அவருக்குச் சொந்தமான சொத்துக்களின் பத்திரங்களை ஏற்கனவே தான் வாங்கிய கடனுக்கு  சூரிட்டியாக வங்கியிடம் கொடுத்திருப்பார். 


அந்த சொத்துக்களை முதலில் விற்று, அந்த தொகையில் வங்கிக்கு சேரவேண்டிய கடன் தொகையை முதலில்  எடுத்துக் கொள்ளச் சொல்லும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.


3. வங்கியாளர் பணம் கேட்டு தன்னிடம் வரும் போது, அவர்களிடம் கொடுத்த கடன் தொகையை வசூல் செய்ய கடன் வாங்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.


இணை உத்தரவாதிகளுக்கு எதிராக உத்தரவாதியின் உரிமைகள்

கடன் வாங்கியவர் தன் கடனை தீர்க்காமல் போய்விடும் நேரத்தில், உத்தரவாதியை  அந்தக் கடனை தீர்க்கச் சொல்லி வங்கி நெருக்கடி கொடுக்கும். 


அந்த நேரத்தில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்க உரிமை உண்டு. 


அப்போது உத்தரவாதியும் மற்றும் இதர இணை உத்தரவாதிகளும் இணைந்து ஒவ்வொருவரும்  சமமாக வங்கிக்கு செலுத்தப்படுகின்ற தொகையில் பங்கு பெற வேண்டும். 


இவ்வாறாக,  அணைத்து  உத்தரவாதிகளும் சேர்ந்து கடன் வாங்கியவரின் கடன் முழுவதையும் வங்கியில் தீர்த்த பிறகு, வங்கியின் வசம் இருக்கின்ற கடன் வாங்கியவரது சொத்துப் பத்திரங்களில் அவர்கள் அனைவருக்கும் உரிமை வந்துவிடும். 


அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சொத்தில் அவரவர்களுக்குரிய  பங்கினை பெற்றுக் கொள்ளலாம்.


உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல் 

கொடுத்த உத்தரவாதத்தை திரும்பப் பெற முடியுமா?


இந்திய ஒப்பந்தச் சட்டம் - 130,131 மற்றும் 133 ஆகிய பிரிவுகளில், உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து எந்தெந்த சூழ்நிலையில் வெளியேறலாம்? என்பதைக் கூறுகிறது.


பிரிவு - 130 - உத்தரவாதத்தை திரும்ப பெறும் அறிவிப்பு ஒன்றினை வங்கிக்கு எழுத்து மூலமாக கொடுப்பதன் மூலம்


பிரிவு - 131- உத்தரவாதி n இறந்து போனால்.


பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுத்தப்படும் போது.


என்றென்றும் மக்கள் பணியில்

இரா.கணேசன்

அருப்புக்கோட்டை

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

குறட்டையை நிறுத்த மருந்து

 குறட்டையை நிறுத்த மருந்து

தூக்கத்தில் சிலர் பக்கத்தில் யாரும் தூங்க முடியாதவாறு கர்ண கொடூரமாக குறட்டை விடுவார்கள். இதற்கு பல காரணங்கள் கூறினாலும் அன்னாக்கு உள்ளே இலுத்துக்கொள்வதும் ஒரு காரணமாகும்.

இதை நிறுத்த மருந்து  

மூக்கிரட்டை வேர் பொடி 100 கிராம் 

மிளகு பொடி 25 கிராம்

இந்த சூரணத்தை காலை,இரவு உணவிற்கு பின்பு ஒரு வேளைக்கு இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்து (20 நாட்கள்) சாப்பிடவும். 

மருந்து சாப்பிட்டு முடியும் வரை மது, அசைவம், அகத்திக்கீரை,பாகற்காய் பறங்கிக்காய் இவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

(மூக்கிரட்டை வேரை முறையாக காயவைத்து பொடி செய்ய வேண்டும்.)



வரதட்சனை சட்டம் 1961

 வரதட்சனை சட்டம் 1961 : 


பிரிவு 7. குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு.


1 [ 7. குற்றங்கள் பற்றிய அறிவாற்றல். --(1) குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (2 இன் 1974) இல் உள்ள எதுவும் இருந்தபோதிலும்,--


(அ) ​​மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் ஆகியோருக்குக் குறைவான எந்த நீதிமன்றமும் இந்தச் சட்டத்தின் கீழ் எந்தக் குற்றத்தையும் விசாரிக்கக் கூடாது;


(b) எந்த நீதிமன்றமும் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை எடுத்துக் கொள்ளாது--


(i) அதன் சொந்த அறிவு அல்லது அத்தகைய குற்றத்தை உருவாக்கும் உண்மைகள் பற்றிய போலீஸ் அறிக்கை, அல்லது


(ii) குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது அத்தகைய நபரின் பெற்றோர் அல்லது பிற உறவினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நலன்புரி நிறுவனம் அல்லது அமைப்பு மூலம் புகார்;


(c) ஒரு பெருநகர மாஜிஸ்திரேட் அல்லது முதல் வகுப்பின் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் இந்தச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தண்டனையையும் வழங்குவது சட்டப்பூர்வமானது.

விளக்கம் 


.--இந்த துணைப்பிரிவின் நோக்கங்களுக்காக, "அங்கீகரிக்கப்பட்ட நல நிறுவனம் அல்லது அமைப்பு" என்பது மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக நல நிறுவனம் அல்லது அமைப்பு.


(2) குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (1974 இன் 2) இன் அத்தியாயம் XXXVI இல் உள்ள எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தாது.]


2 [(3) தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்திலும் எதனையும் உள்ளடக்கியிருந்தாலும், குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபரின் அறிக்கை, அத்தகைய நபரை இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படாது.]


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

சில தீர்ப்புகள்

 ஒரு கட்சிக்காரருக்காக வக்காலத்து தாக்கல் செய்த வழக்கறிஞர் , தனக்கு வழக்குரைஞர் கட்டணம் கொடுக்கவில்லை என்பதற்காக வழக்கில் ஆஜராக மறுக்க முடியாது. கட்சிக்காரரின் வக்காலத்தை ஏற்றுக் கொண்ட வழக்கறிஞக்கு அக்கட்சிக்காரர் சேவை கட்டணம் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் அவருக்காக வாதாட வேண்டியது அவ்வழக்கறிஞரின் கடமை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Ali Mohammed Kashmiri case - AIR 1960 AII (FB) P 660

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் ஆவணங்களை, பொது ஆவணங்களாக கருத வேண்டும். ஆகவே அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாவணங்களாக குறியீடு செய்யலாம். 


(2009) 4 MLJ (Crl) Rakkappan Vs. State rep. By Inspector of Police, Cherambadi Police Station, Uthagamandalam District 


and 2011-1-LW (Crl) 335 S.Ramkumar Vs. State and Ors.

 புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா? 

சென்னை உயர்நீதிமன்றம் " மந்திரன் கோனான் Vs காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் (2006-2-MWN-CRL-356)" என்ற வழக்கில், திருமணம் சம்மந்தமாக இல்லாமல் எதிரி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டால் அதனை இ. த. ச பிரிவு 498 A ன் கீழான குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


அதேபோல் உச்சநீதிமன்றம் " பிரீத்தி குப்தா Vs ஜார்க்கண்ட் மாநில அரசு (2010-7-SCC-667)" என்ற வழக்கில், ஒரு கணத்தில் ஏற்படுகிற கோபத்தின் காரணமாக பெரும்பாலான புகார்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழ் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறு விசயத்தை மிகவும் பெரிதுபடுத்தி அது சம்பந்தமாக புகார் அளிக்க கூடாது. வழக்கறிஞர்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழான பிரச்சினையை ஒரு அடிப்படை சமூக பிரச்சினையாக கருதி அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பொய் புகார் கொடுக்க உடந்தையாக இருக்கக்கூடாது. பல பொய் புகார்கள் உருவாக வழக்கறிஞர்கள் காரணமாக இருக்கக்கூடாது. எனவே பொய்யான வரதட்சணை வழக்குகளை ஏற்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


இதே கருத்தை உச்சநீதிமன்றம் " பஸ்கான் குமார் மீன் Vs பஞ்சாப் மாநில அரசு"  என்ற வழக்கில் வலியுறுத்தியுள்ளது. 


எனவே புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 RSO 31 - 5(ii) மற்றும் 8 ன்படி புல உட்பிரிவுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சினைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013)


2.  RSO 31-6(ii) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுகள் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


3. RSO 31-7 ன்படி 12 ஆண்டுகளாக நிலத்தின் சுவாதீனம் தன்னிடம் உள்ளது என்று நிரூபிப்பவரின் பெயரில் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


4.  கிரையம் பெற்றவரின் சொத்து விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யலாம். (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


5.  நிலத்தை மாற்றம் செய்பவர் பெயரும் 10(1) சிட்டாப்படி பதிவு செய்யப்பட்டவர் பெயரும் வெவ்வேறாக இருந்தால் நிலத்தை வாங்குபவர் மற்றும் விற்பவரை அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும். ஆவணச் சான்றுகள், முந்தைய விற்பனை பத்திரங்கள், கிஸ்தி ரசீதுகள், கிராம நிர்வாக அலுவலரின் நேர்முக சாட்சியங்கள் முதலியவற்றை பரிசீலனை செய்து 10(1) சிட்டாப்படி பதிவு பெற்ற நிலச்சுவான்தாரர் மற்றும் நிலத்தை தன் பெயருக்கு பதிவு மாற்றம் கோருபவர்களுக்கிடையே உள்ள தொடர்பை கண்டறிந்து ஆணை பிறப்பிக்க வேண்டும். (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் H 1.113.287/1981, dt - 4.4.1981)


6.  பட்டா மாற்றத்தை ரத்து செய்யப்படும் மனுக்களில் அதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அனுப்பி அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையை சம்பந்தப்பட்ட கோப்பில் வைக்க வேண்டும் (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் எண். K4. 16014/1985(சர்வே) dt - 8.2.1986)


VAO-க்கள் மீதான புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும், தவறு செய்யும் VAO-க்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உயர் நீதிமன்றம்.


CASE: W. P. No – 13916/2019, DATE – 1.7.2019.

 வண்டி சாவியை எடுக்க காவலர்களுக்கு அதிகாரம் உள்ளதா?

- May 24, 2021


பவன் பாரிக் (Pawan Parikh) என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த (தகவல் அறியும் உரிமை) ஆர்.டி.ஐ'ன் படி, மதுபோதையில் வண்டி ஓட்டுதல், திருட்டு வண்டி, தேடப்படும் குற்றவாளி மற்றும் சோதனைக்கு உட்படாமல் தப்பிக்க முயலுதல் போன்ற எந்தவொரு காரணமும் இல்லாமல் வாகனத்தின் சாவியைப் எடுக்க, எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை.


காவலர் வண்டியை நிறுத்த சொல்லும்போது, நிறுத்தி..அவரின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 179ன் படி 1 மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது 500.ரூ வரையிலான அபராதமோ விதிக்க முடியும்.


சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழே உள்ள காவலர்க்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்கவும் மற்றும் அபராதம் விதிக்கவும் அதிகாரம் இல்லை.  


இதனை மீறிச் செயல்படும் காவலர்க்கு எதிராக, 100'ஐ தொடர்பு கொண்டு, காவலரின் பெயர் - இடத்தினை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.


கிராமப்புறங்களில் சட்ட ஒழுங்கு காவலரே, போக்குவரத்து காவலராகவும் செயல்படுவார்.

புலன் விசாரணையை மறுக்கலாம்

 1. காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது. 


2. கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


3. காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார். 


4. காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும் தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது. 


5. காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார். 


6. வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார். 


7. குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

8. கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

முஸ்லீம் பெண் பராமரிப்புக்காக தாக்கல் செய்யலாமா?

பிரிவு 125 CrPC இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் பராமரிப்புக்காக தாக்கல் செய்யலாமா? உச்சநீதிமன்றம் பரிசீலிக்க*

விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவதற்கான உத்தரவை எதிர்த்து ஒரு முஸ்லீம் ஆணின் மனுவில், 

சிஆர்பிசி பிரிவு 125 இன் கீழ் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஒரு மனுவை பராமரிக்க உரிமை உள்ளதா என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது. 

நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சமீபத்தில் குடும்பநல நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு வழக்கை விசாரித்தது, இது ஒரு முஸ்லீம் பெண்ணின் விருப்பமான பிரிவு 125 CrPC மனுவில், மனுதாரருக்கு (அவரது கணவர்) இடைக்கால பராமரிப்பு தொகை ரூ. 20,000 செலுத்துமாறு உத்தரவிட்டது. 

மாதம். 2017 ஆம் ஆண்டு தனிப்பட்ட சட்டங்களின்படி இருதரப்பினரும் விவாகரத்து பெற்றனர் மற்றும் அதற்கான விவாகரத்து சான்றிதழ் இருந்ததன் அடிப்படையில், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு சவால் செய்யப்பட்டது, ஆனால் அதை குடும்ப நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. 

ஆனால், இடைக்கால பராமரிப்புக்கான உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. இதில் உள்ள உண்மைகள் மற்றும் சட்டத்தின் பல கேள்விகளைக் கருத்தில் கொண்டு, மனு தாக்கல் செய்த நாளிலிருந்து செலுத்த வேண்டிய குவாண்டம் தொகையை மாதம் ரூ.20,000லிருந்து ரூ.10,000 ஆகக் குறைத்தது. 

ஐம்பது சதவீத நிலுவைத் தொகையை மனுதாரர் ஜனவரி 24, 2024 க்குள் செலுத்தவும், மீதமுள்ள தொகையை மார்ச் 13, 2024 க்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், முக்கிய வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க குடும்பநல நீதிமன்றம் கேட்கப்பட்டது. 

விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு CrPC பிரிவு 125ன் கீழ் மனுவைத் தொடர உரிமை இல்லை என்றும், முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 இன் விதிகளின் கீழ் தொடர வேண்டும் என்றும் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

 1986 ஆம் ஆண்டு சட்டம் முஸ்லீம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார். 

உண்மைகளின் அடிப்படையில், மனுதாரர் தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு இத்தாத் காலத்தில் பராமரிப்புக்காக ரூ.15,000 செலுத்தியதாகக் கூறுகிறார். பிரிவு 125 CrPC இன் கீழ் குடும்ப நீதிமன்றத்தை அணுகிய தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் செயலை அவர் சவால் செய்தார், அதன் அடிப்படையில் இருவரும் 1986 சட்டத்தின் மீது CrPC விதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் எந்த பிரமாணப் பத்திரத்தையும் பிந்தைய சட்டத்தின் 5 இன் படி சமர்ப்பிக்கவில்லை. 

ஆரம்ப சமர்ப்பிப்புகளைக் கேட்ட நீதிமன்றம், மூத்த வழக்கறிஞர் கௌரவ் அகர்வாலை உதவிக்கு நியமித்து, பிப்ரவரி 19, 2024 அன்று இந்த விஷயத்தை பரிசீலனைக்கு பட்டியலிட்டுள்ளது. 

பின்னணி

முகமது அகமது கான் எதிராக ஷா பானோ பேகம் வழக்கில் உச்ச நீதிமன்றம் மைல்கல் தீர்ப்பை வழங்கிய 1985 ஆம் ஆண்டிலிருந்து பிரச்சினையின் வரலாற்றைக் காணலாம். நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், ஒருமித்த தீர்ப்பில், பிரிவு 125 CrPC முஸ்லிம் பெண்களுக்கும் பொருந்தும் மதச்சார்பற்ற விதி என்று அந்த நேரத்தில் தீர்ப்பளித்தது. எவ்வாறாயினும், இந்த தீர்ப்பு சமூகத்தின் சில பிரிவினரிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை மற்றும் மத, தனிப்பட்ட சட்டங்கள் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டது. 

முஸ்லீம் பெண்கள் சட்டம், 1986 இயற்றுவதன் மூலம் தீர்ப்பை ரத்து செய்யும் முயற்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இது விவாகரத்துக்குப் பிறகு (இத்தாத் காலம்) 90 நாட்களுக்கு முஸ்லீம் பெண்களின் பராமரிப்பு உரிமையை கட்டுப்படுத்தியது. 

இந்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாக்கம் 2001 இல் டானியல் லத்திஃபி & அன்ஆர் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா என்ற உச்ச நீதிமன்றத்தின் முன் சவால் செய்யப்பட்டது. சிறப்புச் சட்டத்தின் செல்லுபடியை நீதிமன்றம் உறுதி செய்தது. எவ்வாறாயினும், 

1986 சட்டத்தின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப் பராமரிக்க ஒரு முஸ்லீம் கணவரின் பொறுப்பு இத்தாத் காலத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்று அது தெளிவுபடுத்தியது. 

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இக்பால் பானோ v. மாநிலம் உ.பி. மற்றும் Anr (2007), எந்த ஒரு முஸ்லீம் பெண்மணியும் CrPC பிரிவு 125 இன் கீழ் மனுவைத் தக்கவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷபானா பானோவில் வி. இம்ரான் கான், நீதிமன்றத்தின் மற்றொரு பெஞ்ச், ஒரு முஸ்லீம் பெண் விவாகரத்து செய்யப்பட்டிருந்தாலும், 

அவள் மறுமணம் செய்யாத வரை, இத்தாத் காலம் முடிந்த பிறகு, CrPC இன் பிரிவு 125 இன் கீழ், அவள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று கூறியது. 

அதைத் தொடர்ந்து, ஷமிமா ஃபரூக்கி எதிர் ஷாஹித் கான் (2015) வழக்கில், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்குப் பராமரிப்புக்கான பிரிவு 125 CrPC மனுவைப் பராமரிக்க உரிமையுள்ள குடும்ப நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் மீட்டெடுத்தது. 

2019 ஆம் ஆண்டில், நீதிபதி ஏ அமானுல்லா (பாட்னா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக) ஒரு முஸ்லீம் பெண்ணின் பராமரிப்பு மனுவை நிராகரித்த குடும்ப நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். 

முஸ்லீம் பெண் 1986 சட்டம் மற்றும் CrPC இன் கீழ் பராமரிப்புக்காக செல்ல விருப்பம் உள்ளது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அவர் கோட் தேர்வு செய்தால், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் என்ற காரணத்திற்காக சட்டத்தின் கீழ் அவர் தடை செய்யப்பட்டார் என்று கூற முடியாது. 

சமீபத்திய நீதித்துறை முன்மாதிரிகள்

அலகாபாத் உயர் நீதிமன்றம்

ஷகிலா காதுன் எதிர் உ.பி. மற்றும் மற்றொரு (2023), ஒரு தனி நீதிபதி விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்ணுக்கு பிரிவு 125 CrPC இன் கீழ் இத்தாத்திற்குப் பிறகும் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும், வேறொருவருடன் திருமணம் போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்படாவிட்டால், அவர் பராமரிப்புக்காக உரிமை கோருகிறார். 

ரசியா எதிர் உ.பி மாநிலம் (2022), விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் மறுமணம் செய்யாத வரை, இத்தாத் காலம் முடிந்த பிறகும், பிரிவு 125 CrPC இன் கீழ் தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று ஒரு தனி நீதிபதி கவனித்தார். 

Arshiya Rizvi மற்றும் Anr இல். v. உ.பி மாநிலம் மற்றும் Anr. (2022), ஒரு முஸ்லீம் பெண் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரிவு 125 CrPC இன் கீழ் தனது கணவரிடம் இருந்து பராமரிப்புப் பெற உரிமை உண்டு என்று ஒரு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். 

கேரள உயர் நீதிமன்றம்

In Noushad Flourish v. அகிலா நௌஷாத் & Anr. (2023), 'குலா' என்று கூறி விவாகரத்து செய்த முஸ்லீம் மனைவி, 125 சிஆர்பிசியின் கீழ், குலாவை நிறைவேற்றிய பிறகு தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று ஒரு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். 

முஜீப் ரஹிமான் எதிராக. தஸ்லீனா & அன்ர். (2022), விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண் 1986 சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் நிவாரணம் பெறும் வரை பிரிவு 125 CrPC இன் கீழ் ஜீவனாம்சம் பெறலாம் என்று ஒரு தனி நீதிபதி தீர்ப்பளித்தார். 

சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படும் வரை பிரிவு 125 இன் கீழ் நிறைவேற்றப்பட்ட உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று சேர்க்கப்பட்டது.

பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்:

 கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்:


1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.


2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.


3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.


4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.


5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.


6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.


7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.


8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 1௦௦/- மொத்த செலவும், 5௦௦க்குள் முடியும்.


9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.


10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.


11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.


12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.


13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.


14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.


15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.


16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.


17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்

.

18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.


19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.


20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்

 காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் என்னென்ன?


காவல் நிலையங்களில் மொத்தமாக 38 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது!  


#அவைகள்_யாதெனில்# 


1. பொது நாட்குறிப்பு


2. முதல் தகவல் அறிக்கை தொகுப்பு


3. பாகம் - 1 நிலைய குற்ற வரலாறு


4. பாகம் - 2 குற்ற வரைபடம்


5. பாகம் - 3 தண்டனை பதிவேடு


6. பாகம் - 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் - 110


7. பாகம் - 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடு


8. கெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடு


9. பெயர் வரிசைப் பதிவேடு


10. குற்ற செய்முறை தனித்தாள் தொகுப்பு


11. முன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடு


12. விசாரணை படிவம் "அ"


13. விசாரணை படிவம் "ஆ"


14. குற்றத் தொகுப்பு


15. கைது அட்டை


16. கைதி பரிசோதனை பதிவேடு


17. பிணைப் பத்திரம்


18. கட்டளைப் பதிவேடு


19. கைவிரல் ரேகை பதிவுத்தாள்


20. சிறுவழக்கு பதிவேடு


21. சமுதாய பணிப் பதிவேடு


22. மருத்துவமனை குறிப்பாணை


23. போக்கிரி பதிவேடு


24. காவல்முறை மாற்றுப் புத்தகம்


25. அலுவல் பதிவேடு


26. மிகைநேர அலுவல் படிப் பதிவேடு


27. நோட்டுப் புத்தகம்


28. பணப் பதிவேடு காவல் நிலை ஆணை 262


29. அஞ்சல் அனுப்புகை பதிவேடு


30. நடப்புத் தாள் பதிவேடு


31. ஆயுத வழக்கு பதிவேடு


32. துப்பாக்கி உரிமப் பதிவேடு


33. ஆயுத வைப்புப் பதிவேடு காவல் நிலை ஆணை 332 படிவ எண் - 47


34 - கிராமப் பதிவேடு


35 - அரசு சொத்துப் பதிவேடு


36. காலமுறை தொகுப்புகள்


37. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு


38. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு

என்றென்றும் மக்கள் பணியில்

தகவல் நன்றிகள் 

இரா. கணேசன் அருப்புக்கோட்டை


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

பொதுத்தொல்லைகள்

 *பொதுத்தொல்லைகள்* 


இன்றைய சூழ்நிலையில் நாம் ரோட்டில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ பலவித தொல்லைகளை அனுபவித்துக் கொண்டேதான் செல்ல வேண்டியதிருக்கிறது. ஆனால், இதைப் பற்றி புலம்பிக் கொண்டே செல்கிறோமே தவிர இதற்கு யார் பொறுப்பு? இதற்கு பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? 

யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? என்பது குறித்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு இல்லை. அதனை தீர்க்கவே இதனை எழுதுகின்றேன்.


*நாள்தோறும் என்னென்ன பொதுத் தொல்லைகளை அனுபவிக்கிறோம்?*


⧭ சாலையின் நடுவே தோண்டப்பட்டு சரியாக மூடாமல் இருக்கும் குழிகள்

⧭ ரோட்டில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக்கழிவுகள்

⧭ ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கட்டிட பொருட்கள்

⧭ திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிகளை சத்தமாக வைப்பது

⧭ வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் ரோட்டில் செல்வோருக்கு இடைஞ்சல் தருவது

⧭ சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவது

⧭ தங்கள் வாகனங்களை ரோட்டில் ஓரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைப்பது.

⧭ சாலை ஓரங்களிலேயே மல, ஜலம் கழிப்பது

⧭ சாலைகளில் சாக்கடைத் தண்ணீர் தேங்கி கிடப்பது 

⧭ சாலை ஓரங்களிலேயே குப்பைகளை கொட்டுவது

⧭ பொது இடங்களில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது

⧭ சாலை ஓரங்களில் கழிவுகளை எரிப்பது

⧭ சாலைகளில் கால்நடைகளை விட்டு வைப்பது 

⧭ அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவுகள், சப்தங்கள் 


 *யார் யார் புகார் அளிக்கலாம்* ?


மேற்கண்ட தொல்லைகளை ஆங்கிலத்தில் Public Nuisance என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றை தடுக்க சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன் கீழும், இந்திய தண்டணைச் சட்டம் 268 முதல் 294 வரையில் உள்ள பிரிவுகள் கீழும், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133ன் கீழும் யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம்.


*சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91*


சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன்படி மேற்கண்ட குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மேலும் சிலரை நம்முடன் சேர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதனை நடத்தி நாம் சந்திக்கின்ற தொல்லைகளை தடுக்க தடை உத்தரவு வாங்கலாம். இது கொஞ்சம் சிரமமானது மட்டுமல்ல, காஸ்ட்லியானதும் கூட. 


*இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?*


குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133

மேற்கண்ட குற்றங்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டத்தினை (பிரிவு 133) பயன்படுத்தினால் நமக்கு அலைச்சலில்லை, செலவு அதிகமில்லை. மிக எளிதானது. 


*என்ன செய்ய வேண்டும்?*


நாம் பொது இடங்களில் சந்திக்கின்ற இடையூறுகளைப் பற்றி ஒரு புகாராக எழுதி, நாம் குடியிருக்கும் பகுதிக்குரிய வருவாய் கோட்ட அலுவலர் (Revenue Divisional Officer) அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும். அல்லது சப் கலெக்டர் எனப்படும் கோட்டாட்சியர் அவர்களுக்கும் அந்தப் புகாரை அனுப்பலாம். புகாரின் தலைப்பிலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ் புகார்மனு என்று எழுதிவிட்டு அதற்குப் பிறகு அனுப்புனர் என்பதை எழுதுங்கள்.


*புகார் அனுப்பியதும் என்ன நடக்கும்?*


உங்கள் புகார் கிடைக்கப் பெற்றதும் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இருந்தால் அந்த தொந்தரவுகளை அகற்ற உடனே உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். இந்த உத்தரவுகளில் சிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது விசேஷச் செய்தி ஆகும். இந்த உத்தரவின் கீழ் அந்த தொந்தரவு தருபவர்கள் அதனை அகற்ற அல்லது நிறுத்த மறுத்தால் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 188ன் கீழ் தண்டணைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


*என்ன தண்டணை கிடைக்கும்?*


குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிறப்பிக்கப் படுகின்ற உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரிசெய்ய மறுத்தால், அந்த குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒரு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 200/- அபராதமும் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதிக்கப்படும்.


*காவல் துறையில் புகார் அளிக்கலாமா?*


பொதுத் தொல்லைகளால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்கள் இந்திய தண்டணைச் சட்டம் 268 முதல் 294 வரையில் உள்ள பிரிவுகள் கீழ் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

ஒரே சொத்து, இரண்டு பத்திரம் என்ன* *செய்ய வேண்டும்*

 

*ஒரே சொத்து, இரண்டு பத்திரம் என்ன* *செய்ய வேண்டும்*


*ஒரே சொத்தை இருவருக்கு விற்பது* *சட்டப்படி குற்றம் ஆகும்*


அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்? 


இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்து செய்யக் கோரி, பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 82ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.


மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வு செய்வார். 


உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரிய வந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்திரஙளை ரத்து செய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.


பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 83ன் கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்டம்






குற்றவியல் திருத்த சட்டம்* *2013, 354D பிரிவின்படி*


*குற்றவியல் திருத்த சட்டம்*

*2013, 354D பிரிவின்படி*

ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்து அவரை பின்தொடர்தல், 

இவரின் இந்த செய்கையை அந்தப் பெண் எதிர்த்தும் தொடர்வது, 


மேலும் மின்னஞ்சல் போன்ற விஞ்ஞான

சாதனத்தின் மூலம் ஒரு

பெண்ணை தொடர்பு கொண்டு

தொந்தரவு செய்ய முயற்சி

செய்தல்.


தண்டனைக்குரிய

குற்றங்களாக கருதப்படுகின்றன.


முதன்முறையாக செய்யப்படும்

இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும்,


தொடர்ந்து இதே குற்றத்தை

செய்யும் பட்சத்தில் 5

ஆண்டுகள் அபராதத்துடன்

கூடிய சிறைத்தண்டனையும்

விதிக்கப்படும்.

இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு குற்றச்செயலை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அல்லது சட்டத்தின்

உதவியுடன் ஒருவர் ஒரு

பெண்ணை பின்தொடர்வது

குற்றமாக கருதப்படமாட்டாது.

கூட்டுறவு சங்கங்கள் இணைப்ப பதிவாளர் அலுவலகத்தில் துறை சார்பான நுகர்வோர் காலாண்டு கூட்டம்

 கூட்டுறவு சங்கங்கள் இணைப்ப பதிவாளர் அலுவலகத்தில் துறை சார்பான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் இம்தியாஸ் தலைமை தாங்கினார்.


அங்கிகரிக்கபட்ட நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் . தலைவர் வாசுதேவன் செயலாளர் முகமது சலீம் கூடுதல் செயலாளர் பீட்டர், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ஹால்துரை, உதகை நுகர்வோர் சங்க தலைவர் அமீர்கான் ஆகியோர் பங்கேற்று பேசும்போது


கூட்டுறவு கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாத சூழல் உள்ளது ஏற்கனவே பலரும் பணி கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் சூழலில் சிலருக்கு மட்டும் பணி வழங்கி பல இடங்களில் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது.

இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது ஒரே நபர் எடை போடுவது பொருட்கள் வழங்கும் சூழலும் உள்ளது .

இதை தவிர்க்க அனைத்து கடைகளிலும் விற்பனையாளர் மற்றும் எடையாளர் என இரு பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கும் இதர பொருட்கள் தரமானதாகவும் இருப்பதை உறுதி படுத்தவும், அதனை விருப்பம் இன்றி கட்டாயபடுத்தி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதுபோல உள்ளூர் மளிகை கடைகளை விட விலை குறைவாகவும் வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தேவாலாவின் செயல்பட்டு வந்த கூட்டுறவு சிறப்பு அங்காடி மீண்டும் செயல்படுத்த வேண்டும் அல்லது பந்தலூரில் கூட்டுறவு சிறப்பங்காடி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மத்திய அரசு வழங்கும் பாரத் அரிசி அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் செயல்படும் மகளிர் குழுக்களுக்கு அரசு மூலம் வழங்கும் செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் உப்பு செறிவூட்டப்பட்ட பாமாயில் பயன்களை குறித்தும் விளக்கம் அளித்து ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வழங்கும் மளிகை பொருட்களை வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் செயல்படுத்த படும் இ சேவை மையங்களில் முறையான சேவை வழங்குவதை உறுதி படுத்தவும் , ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவையையும் விரிவுபடுத்த வேண்டும். கடைகள் அடைத்து இருக்கும்போது அதற்கான தகவல் தெரிவிக்க படவேண்டும். மண்ணெண்ணெய் வழங்கும் நாள் குறித்து முறையான அறிவிப்பு இல்லத்தினால் மக்கள் மண்ணெண்ணெய் பெறுவது முறைப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் உள்ளிட்ட கடன்கள் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தியும், கடன் தள்ளுபடி செய்த பின்னரும் கடன் பெற்றபோது பிடித்தம் செய்த பணம் திருப்பி வழங்காமல் உள்ளது அவற்றை முறைப்படுத்தி மீண்டும் கடன் பெறாதவர்களுக்கு வழங்க வேண்டும். தேவாலா, பந்தலூர் பகுதிகளில் செயல்பட்ட கூட்டுறவு மருந்து கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.


அதற்கு பதில் அளித்த துணை பதிவாளர் இம்தியாஸ் பேசும்போது.

ரேஷன் கார்டுகள் குறைவாக உள்ளதால் கூடுதல் பணியாக நியமனம் செய்வதில் வாய்ப்புகள் குறைவாக உள்ளது எனினும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு சார்பில் வழங்கப்படும் அரசு உப்பு அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது கூடுதல் தேவைக்கு பொதுமக்கள் கேட்பதற்கு இணங்க கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது விநியோகம் அல்லாத பொருட்கள் கட்டாயமாக விற்பது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது மீண்டும் புகார் விருது பட்சத்தில் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பெரும்பான்மையான பொருட்கள் மளிகை கடைகளை விட குறைவாக வழங்கப்படுகிறது எனினும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பாரத் அரிசி ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது குறித்து அரசு எடுக்கும் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் நிலுவையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் கடன் பெற்றவர்களின் தொகைகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மூடப்பட்ட சிறப்பு அங்காடி மற்றும் மருந்தகங்கள் மீண்டும் திறக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்


கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மேனுவல் பட்டா பெயர்* *மாற்றம்

 *வெறும் மேனுவல் பட்டா பெயர்*   *மாற்றம் மட்டும் செய்தால் போதாது* *சிட்டா,அ-பதிவேடு,புலப்பத்திலும்* *மாற்றம் செய்யபட வேண்டும்*


1.இப்பொழுது பட்டா மனு செய்யும் முறை ஆன்லைன் ஆகிவிட்டது. இதற்கு முதல் எல்லாம் பட்டா மனு செய்ய தேவையான ஆவணங்களை நகல் எடுத்து அன்றைய தேதி வரை EC எடுத்து பட்டா வேண்டி கேட்கும் மனுவை இணைத்து அனைத்தையும் ஒரு நூலால் கட்டி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கொடுக்கும்படி இருந்தது .


2.மனு செய்வதற்கு என்று எந்தவிதமான கட்டணமும் இல்லை. ஆனால் இப்போதைய ஆன்லைன் முறையில் பட்டா மனு செய்யும் போது மனு கட்டணம் ரூ.50 வாங்குகிறார்கள். (சில இடங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள் ) இதன் மூலமே வருவாய்துறை இப்பொழுது பல இலட்ச ரூபாய்களை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டது.


3.ஆன்லைன் பட்டா மனு செய்ய கூட்டுறவு சொசைட்டி , தாலுகா அலுவலகங்ளில் உள்ள E.சேவை மையங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தான் நிலவுகிறது. கரண்ட் இல்லை, சர்வர் வேலை செய்யவில்லை, கம்யூட்டர் சரி இல்லை என்று கிராம மக்கள் பத்து கிலோமீட்டர் இரண்டு மூன்று நாள் தொடர்ந்து பயணம் செய்து, இரண்டு நாள் காட்டு வேலையை விட்டு தான் பட்டா ஆன்லைன் மூலம் மனு செய்ய வேண்டி இருக்கு! நகரங்களிலும் இதே நிலைமை தான்.


4.VAO க்கோ சர்வேயருக்கோ ஆன்லைனில் நிலுவையில் மனு எதுவும் இருக்க கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஆன்லைனில் பட்டா மனு செய்துவிட்டு பின்தொடரல் இல்லை என்றாலோ அல்லது தாமதமாக சென்று பார்த்தாலோ மனுக்களை ஆன்லைனிலே தள்ளுபடி செய்து விடுவார்கள். மனு தள்ளுபடிக்கு ஆவணங்கள் லிங்க் இல்லை அல்லது வேறு ஏதாவது காரணங்களையும் சொல்லி இருப்பார்கள். பிறகு என்ன மீண்டும் ஆன்லைன் வரிசையில் நின்று பணம் கட்டிய பிறகு மீண்டும் நீங்கள் மனு செய்தல் வேண்டும்.


5.ஆன்லைன்ல பஸ் டிக்கெட் புக் செய்வது போல ஏடிஎம் ல பணம் எடுப்பது போல பட்டா மனு செய்த உடனே பட்டா வராது. பட்டா மனு செய்வது மட்டும் தான் ஆன்லைன் முறை். மீதி வேலை எல்லாம் வழக்கம் போல் தான் தாலுகா ஆபிஸில் தொடர் களப்பணி செய்வதன் மூலம் தான் பட்டா பெற முடியும்.


6.அதாவது ஆன்லைன் மூலம் மனு செய்த ரசீதை எடுத்து கொண்டு பட்டா வாங்க போகும் நிலத்தின் முழு ஆவணங்களின் நகலையும் எடுத்து கொண்டு பழைய முறைப்படி கிராம நிர்வாக அதிகாரியையோ, சர்வேயரையோ நேரடியாக சந்தித்து, பின் தொடரல் வேண்டும். VAO சர்வேயர் LRD (LAND RECORD DRAFT) தலைமை சர்வேயர் – தாசில்தார் என அனைத்து டேபிளுக்கு பேப்பரை நகர்த்துவதும் நாம் தான் செய்ய வேண்டும்.


7.பொதுவாக பட்டா மனு செய்யும் போது முழு புலம் கொண்ட இனங்கள் , உட்பிரிவு கொண்ட இனங்கள் என இரண்டு வகையாக பிரிப்பர்.முழுபுலம் கொண்ட இனங்களின் மனுக்கள் ஆன்லைனில் VAO விடம் செல்லும்படி லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது. உட்பிரிவு இனங்கள் சர்வேயர் ஆன்லைனில் லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது, அதன்படி ஒவ்வொரு வகையான மனுவும் முறையே VAOவிற்கும், சர்வேயருக்கும் சென்று விடுகிறது.


8.முழுபுலம் பட்டா பெயர் மாற்றங்கள் VAO விடம் வந்து விடுகிறது. அவர்கள் அதனை பட்டா பெயர் மாற்றம் செய்து விடுகின்றனர். அதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.


9.உட்பிரிவு இனங்கள் தான் சர்வேயரிடம் வருகிறது, அதன்பிறகு LRD (LAND RECORD DRAFT ) தலைமை சர்வேயர் மூலம் இறுதியாக தாசில்தாரரிடம் கையெழுத்தாகிறது, அவர்களின் நடைமுறையில் நகரும் பேப்பருக்கு 8 A – ஆவணம் என்று சொல்வார்கள்.


10.அது என்ன 8 A என்றால் அது ஒரு சர்வே சட்டம், விவரமாக சொல்லனும்னா , பட்டா கோழி குஞ்சு வெளியேறுவதற்கு முன் இருக்கும் முட்டை பருவம் தான் 8A. 8A வில் தாசில்தார் கையெழுத்து போட்டவுடன் பட்டா ஆன்லைனில் ஏற்றபடுகிறது.


11. அதோடு ஆன்லைனில் பட்டா ஏறிய மகிழ்ச்சியில் நீங்கள் வந்து விடுவீர்கள ஆனால் FMB யிலும்

அ-பதிவேட்டிலும், உட்பிரிவு விவரங்கள் ஏறிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.


12.பழைய பட்டா பெயர் மாற்ற முறையில் கிராம நிர்வாக அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கிறது , இப்போது முழுபுலம் பட்டா பெயர் மாற்றம் மட்டும் VAO க்கும் உட்பிரிவுகள் சர்வேயருக்கும் போவதால் (பெரும்பாலும் 90% உட்பிரிவு இனங்கள்தான் ) கிராம மக்கள் தாலுகாவை நோக்கி படையெடுத்து சர்வேயரை சந்திக்கின்றனர் , சர்வேயர் நேரடியாக களத்திற்கு வருகிறார். இடத்தை பார்த்துவிட்டு பட்டாவுக்கு வழிவகை செய்கிறார்.


13.மேற்படி சர்வேயர்கள் இப்பொழுதெல்லாம் கிராம நிர்வாக அலுவலகம் பக்கமே போவதில்லை ( ஏன் என்று எனக்கு தெரியவில்லை ) அதனால் கிராம கணக்குகளில் அ- பதிவேடு , புலபட புத்தகங்களில் பதிவு செய்வது இல்லை. உதாரணமாக சர்வே நம்பர் 2A என்று இருந்தால், அது உட்பிரிவு செய்யபடும் போது 2A1, 2A2 என இரண்டாக உடையும். இதனை சர்வேயர் தான் கிராம கணக்குகளில் திருத்த வேண்டும்.VAO வுக்கு அந்த உரிமை இல்லை!


14.எனவே சர்வேயர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரடியாக வந்து A – பதிவேடு – FMB களில் , சிட்டா கணக்குகளில் உட்பிரிவை குறிக்க சொல்லி நாம் கேட்க வேண்டும். சில ஊர்களில் அ – பதிவேடு ஆன்லைன் ஆகியிருக்கும் சில ஊர்களில் FMB யும் ஆன்லைன் ஆகி இருக்கும், அதிலெல்லாம் நம்முடைய பட்டா உட்பிரிவு பதிவாகி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆகவில்லை என்றால் சர்வேயரை பின் தொடரல் செய்து அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.


15.அப்படி நாம் செய்யவில்லை என்றால், பட்டா ஆன்லைனில் ஏறினாலும் , VAO க்கு பட்டா மாறிய விசயமே தெரியாது போய்விடுகிறது. கிராம கணக்கில் பட்டா மாற்றமே நடக்கவில்லை என்று ஆவணங்கள் சொல்லும்.


16.ஆன்லைன் பட்டா வாங்கிவிட்டு விவசாய நிலத்தில் கிணறு போட வேண்டும் என்றால், FMB யில் கிணறு எங்கே வருகிறது என முதலில் குறிக்க வேண்டும். அதற்காக VAO வை பார்த்தால் அவர் கணக்கில் புலப்புத்தகத்தில் உட்பிரிவு செய்யாமலே இருக்கும்.உட்பிரிவு செய்தால் தான் கிணறுக்கான பாயிண்டை குறிக்க முடியும்.

எனவே உட்பிரிவு FMB யிலும் செய்து வாருங்கள் என்று VAO சொன்னால் ஆன்லைனிலே் பட்டா வந்துருச்சி , ஏன் இன்னும் FMB கட் செய்யலயே என்று VAO கிட்ட சண்டை போட்டு இருப்பீங்க.


17.பயிர் கடன் வாங்க , வீடு கட்ட வங்கி கடன் வாங்க, பயிர் இன்சூரன்ஸ்க்காக , வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் மற்றும் நில எடுப்புக்கு பணம் வாங்க, VAO கையெழுத்துடன்- அ – பதிவேடு, சிட்டா தேவைபடும் அப்பொழுது அதனை கேட்டு கேட்டு சென்றால், உங்கள் பெயரும் உட்பிரிவும், கிராம கணக்கில் ஏறி இருக்காது. அந்த நேரத்தில் அல்லல் பட்டு கொண்டு நிற்ப்பீர்கள்


18.எனவே பட்டா வாங்க முடிவு செய்தால், ஆன்லைன் பட்டா மட்டும் போதாது, அதனுடன் FMB , அ – பதிவேடு, சிட்டாவில் எல்லாம் பெயர் மற்றும் உட்பிரிவு ஏற்றப்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வேலையோடு வேலையாக ஆன்லைன்ல கிராமகணக்கு இருந்தால் சர்வேயரை பின் தொடரல் செய்து அப்டேட் செய்ய சொல்ல வேண்டும். கிராம கணக்கு மேனுவலாக இருக்கும் பட்சத்தில் சர்வேயரை VAO அலுவலகம் செல்ல வைத்து கிராம கணக்கில் அப்டேட் செய்ய நாம் தான் ஒருங்கிணைக்க வேண்டும்...


ஈவ்_டீசிங்_கேலி_வதைத்_தடுப்புச்_சட்டம்

*#ஈவ்_டீசிங்_கேலி_வதைத்_தடுப்புச்_சட்டம்*

பொதுவாக கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு ஆண்களைப் போல பெண்கள் பலி ஆனாலும், சில குற்றங்கள் பெண்களுக்கு எதிராக மட்டுமே நடைபெறுகின்றன. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் ஐபிசி என்று சொல்லக்கூடிய இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வருகிறது.

1. கற்பழிப்பு.

2. ஆள்கடத்தல் (விபசாரத்துக்குப் பயன்படுத்துதல்).

3. வரதட்சணை மரணம்.

4. கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மனதாலும் உடலாலும் கொடுமை செய்தல்.

5. மானபங்கப்படுத்துதல்.

6. பாலியல் வன்முறை.

7. அமில வீச்சு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் மரணம்.

8. ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை ஊடுருவுதல் அல்லது படம் பிடித்தல்.

9. ஒரு பெண்ணை பின்தொடர்தல் அல்லது கணினி மூலம் தொல்லை கொடுத்தல்.

சமீபத்தில் மேற்கூறிய குற்றங்களில் பெரும்பாலானவை 2013ம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்தத்தால் புதுப்பிக்கப்பட்டு, சில புதிய குற்றங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இவை தவிர...

Immoral traffic (prevention) act 1956

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961

Indecent representation of women(prohibition) act 1986

சதி தடுப்புச் சட்டம் 1987

- ஆகிய சட்டங்களும் உள்ளன.

 இவ்வளவு சட்டங்கள் இயற்றப்பட்டு இருப்பினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. காரணம்... பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெறும் அவலங்களை வெளியே சொல்லத் தயங்குவதுதான். அவ்வாறு வெளியே சொல்லும் பெண்கள் மீதான சமுதாயத்தின் பார்வை... 

அதோடு சட்டத்துக்கு முன் குற்றவாளிகளை உரிய ஆதாரங்களுடன் நிறுத்துவது கடினமான செயல். மேலும் வழக்குகளின் காலதாமதம் போன்றவை அவர்கள் புகார் அளிப்பதை ஊக்குவிப்பதில்லை. 

பதிவு செய்யப்படும் குற்றங்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டிருப்பது புரியும்.

ஒரு சராசரி இந்தியப் பெண் பெரும்பாலும் படிப்புக்காகவோ, அலுவல் காரணமாகவோ, வேறு ஏதாவது ஒரு காரணமாகவோ, தனியாகவோ, கூட்டாகவோ - ஆணின் துணை இல்லாமல் வெளி இடங்களுக்கு செல்லும்போது கேலி வதைக்கு ஆளாவது ஏன்? 

ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் அதனை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை. பெரும்பாலான ஈவ் டீசிங் குற்றங்களின் புகார்கள் பதிவு ஆகாமல் இருப்பது வேதனையே...

ஈவ் டீசிங் போன்ற குற்றங்கள் ஏதோ மிகவும் அழகான கவர்ச்சியான இளம்பெண்களுக்கு எதிராக மட்டும் நடைபெறுவதல்ல. 

உண்மையில் இது வயது வித்தியாசம் இல்லாமல், ஏழை-பணக்காரர், படித்தவர்-படிக்காதவர், திருமணம் ஆனவர்-ஆகாதவர் என்று எல்லாத் தரப்பு பெண்களுக்கும் ஏற்படும் கொடுமையே. 

சிலர், பெண்களின் நடை உடை பாவனை ஆண்களை வசீகரிக்கும் நிலையில் இருக்கும் பட்சத்தில் இது போன்ற வன்முறை செயல்கள் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள். இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஒரு கருத்து உண்டு. 

ஒரு வழக்கறிஞராக நான் அறிந்தபடி, பெண்கள் எந்த உடை உடுத்தியிருந்தாலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வன்முறை அரங்கேறிக் கொண்டிருப்பதுதான் உண்மை.

பெண்களின் மீது கேலி வதை செய்வது என்ற செயல் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு... தனிமனிதனின் மனம் சார்ந்த செயல். ஈவ் டீசிங் என்ற வார்த்தை இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சட்டத்தின் சில பிரிவுகள் அதனை குறிக்கிறது என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு எதிரான கேலி வதை மட்டுமல்ல... எல்லாவித குற்றங்களும், நம் அரசியல் சாசனத்துக்குப் புறம்பான ஒரு செயலாகவே உள்ளன. இந்திய குடிமகனுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் உரியதே. 

எனினும், இந்தச் சமுதாயம் அவர்களுக்கு அந்த சம உரிமையை மறுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆண் என்ற ஒரு காரணத்துக்காக பெண்ணினத்தை எள்ளி நகையாடி, அவர்களை வதை செய்து பலவகை இன்னல்களுக்கு ஆளாக்கும் அரக்கர்களுக்கு சட்டம் கொடுக்கும் பதிலடிதான் என்ன? பெண் என்ற

காரணத்தால் சகிப்புத் தன்மையோடு தன்மானத்தை அடகு வைத்துதான் வாழ வேண்டுமா?

*சட்டம்*

1998ம் ஆண்டு, சென்னையில் புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியில் பயின்ற மாணவி சரிகா ஷா, கல்லூரியின் அருகிலேயே அவ்வழியில் சென்ற வன்மம் மிகுந்த வாலிபர்கள் சிலரால் ஈவ் டீசிங் என்ற பெயரால் நசுக்கப்பட்டு உயிரை விட்டார். இதன்பிறகே ‘ஒயிட் ப்ரிகேட்’ என்கிற பெண் காவல் படையின் கண்காணிப்பு, புகார் பெட்டிகள் உள்பட பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. 

தன் பிறந்த நாளான ஜூலை 23 அன்றே, ஈவ் டீசிங் கொடுமையால் உயிரை இழந்த சரிகா ஷாவின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. தன் உயிர் கொடுத்து கேலி வதையிலிருந்து பெண்களைக் காக்க தமிழகத்தில் சட்டம் இயற்ற அவள் வழிவகை செய்ததால் Tamil Nadu Prohibition of Eve Teasing act 1998 என்ற சட்டம் உருவானது.

*விளக்கமும்_தண்டனையும்*

2002ம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி ஈவ் டீசிங் என்ற வார்த்தைக்குப் பதிலாக Harassment of Women என்று மாற்றப்பட்டது. வன்கொடுமை என்பதற்கு இந்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம்...

 ஒரு ஆணின் முறை தவறிய நடத்தை அல்லது செயலால் ஒரு பெண்ணுக்கு அச்சமோ, பயமோ, அவமானமோ, தொல்லையோ, வேறு ஏதாவது உடல்ரீதியான தாக்குதலோ ஏற்படுதல். இச்சட்டத்தின் கீழ் இவ்வாறான செயல்களை ஒரு பெண்ணுக்குச் செய்யத் தூண்டுவதோ, அந்தத் தவறை விளைவிப்பதோ, மேலும் கல்வி வளாகத்திலோ, கோயில் போன்ற வழிபாட்டுத் தலத்திலோ, பேருந்து நிறுத்தத்திலோ, புகைவண்டி நிலையத்திலோ, சாலையிலோ, திரையரங்கிலோ, பூங்காக்கள், கடற்கரை, திருவிழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களிலோ, பேருந்து ரயில் போன்ற பொது ஊர்தியிலோ... 

மேற்கூறிய தவறுகளை செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம்.

சில வேளைகளில் இத்தகைய வன்கொடுமையில் ஈடுபடும் ஆண், அந்தப் பெண்ணுக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வன்கொடுமையில் ஈடுபடும் பட்சத்தில் அவருக்கு ஆயுட்காலம் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

 ஒரு ஆண் தன்னுடைய வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு மரணம் ஏற்படும் என்று அறிந்திருந்தும், உயிர் கொல்லும் எண்ணத்தில் செயல்படும் பட்சத்தில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படலாம்.

எந்தவிதத் தவறான எண்ணமும் இல்லாமல் ஒரு ஆணின் வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம். 

இந்த வன்கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் அந்த வன்கொடுமையை செய்த ஆணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் போன்றவை பெண்கள் மீதான வன்கொடுமை ஏற்படுவதை தடுப்பதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். அதனை மீறி ஒரு பெண்ணுக்கு பொது இடங்களில் இவ்வாறான வன்கொடுமை ஏற்படும்போது, 

இந்த இடங்களின் பொறுப்பாளருக்கு அல்லது மேலாளருக்கு தெரிய வரும்போது அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க அந்தப் பெண்ணுக்கு உதவவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் தவறு இழைப்பவருக்கு ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 

பேருந்து போன்ற பொதுமக்களுக்கான ஊர்திகளில் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்றால் அந்தச் செயல் அந்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் தெரியவரும் பட்சத்தில், அந்த வாகனத்தை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்று, புகார் கொடுத்து அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும். செய்யத் தவறும் பட்சத்தில் ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.

ஒருவேளை பொதுமக்களுக்கான வாகனத்தில் பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை ஏற்படும் பட்சத்தில், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்காத பட்சத்தில் அந்த ஊர்தியின் ஓட்டுநரும் இந்த வன்செயலுக்கு உடந்தையாக இருந்தார் என்று இந்தச் சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படலாம். 

 அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வழிசெய்யப்பட்டுள்ளது.

 இச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாகக் கொடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 இந்தக் குறிப்பிட்ட சட்டத்தால் பொதுவாக இருக்கும் சட்டத்துக்கு எந்தவித பங்கமும் கிடையாது. பொதுச்சட்டத்துடன் இணைந்தே செயல்படுத்தப்படும்.

*முக்கிய_வழக்கு*

Rupan deol bajaj and another vs K.P.S.Gill  

  1995 (vi scc) 194

இந்த வழக்கில்தான் நாகரீகமான சமுதாயம், ஒரு பெண்ணுக்கு எந்த அளவு பாதுகாப்பு தரவேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தன்மானத்தை காப்பது ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத கடமை என்பதையும் வலியுறுத்தியுள்ளது. 

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பொதுநிகழ்ச்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை தன் கையால் தட்டுதல் பெண்ணுக்கு எதிரான வன்முறையில் அடங்கும் என்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

பிஸ்கட் குறைவு

 

கடந்த ஆண்டு டிசம்பரில், கேட்பரி நிறுவனம் தான் விற்கும் பொருட்களில் ஒன்றான போர்ன்விட்டாவை 15 சதவீதம் குறைவான சர்க்கரை கொண்டதாகக் கூறி சந்தையில் அறிமுகப்படுத்தியது.


சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால், சமூக ஊடகத்தில் பிரபலமான நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவின் காரணமாகவே கேட்பரி நிறுவனம் தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது.


ரேவந்த் ஹிமாத்சிங்கா ஊட்டச்சத்தான உணவுகள் குறித்து, தான் நடத்தும், ஃபுட்ஃபார்மர் என்ற சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், போர்ன்விட்டாவில் 50 சதவீதம் சர்க்கரை உள்ளது என்று கூறினார். இதையடுத்து மத்திய அரசு அமைப்புகள் கேட்பரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.


இப்படி ஏற்படுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் கூட, தங்களது உணவு தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக, நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி மாவட்டம்

*வீடு மற்றும் அடமானக் கடனுக்கும்* *என்ன வித்தியாசம்*

 *வீடு மற்றும் அடமானக் கடனுக்கும்* *என்ன வித்தியாசம்*


தன்னுடைய தேவைகளுக்காக மனிதன் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது என்பது சமுதாயத்தில் நடக்கக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வுகள் ஆகும். பெரும்பாலும் வங்கிகளில் கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். அனைத்து தரப்பினர்களும் அதிகமாக பெறுவது இரண்டு வகையான கடன்களே!


மேலும் வீட்டுக்கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன் என்ற இரண்டு வார்த்தைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்டவை என்பதை அறியாமலே நாம் அந்த வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.


சந்தையிலிருந்து நிதியைப் பெறுவதற்கு ஒருவர், துணை ஈடு வழங்க வேண்டுமென்று கருதப்படுகிறது. இந்த வகையில் கிடைக்கப்பெறும் அனைத்து வகை கடன்களும் அடமானக் கடன்களில் பொருந்தக்கூடியது ஆகும்.


எனவே, வீட்டுக்கடன் என்பதே ஒரு வகை அடமானக் கடன் தான் - அந்தக் கடன் வீட்டை ஈடாக வைத்துத் தரப்படுகிறது. அதே சமயத்தில், நீங்கள் உங்கள் இதர சொத்துக்களையும் கடன் பெறுவதற்கான பிணைய ஈடாக வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


*அடமானக் கடன்*


ஒரு அடமானக் கடனில் உங்கள் சொத்து பாதுகாப்புப் பிணையமாக செயல்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால், அடமானக் கடன்களில் உங்கள் சொத்துகளை, கடனுக்கு ஈடாக பிணையமாகப் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில் பெரும்பாலான வீட்டுக் கடன்கள் அடமானக் கடன்களாகத் தான் இருக்கின்றன. அதற்கு பொருள் என்னவென்றால், ஒருவேளை நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், இழப்பை ஈடு செய்வதற்காக உங்கள் சொத்துக்களை விற்கும் உரிமை வங்கிக்கு இருக்கிறது.


*வீட்டுக் கடன்*


வீட்டுக்கடன்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்ட ஒரு இயல்பை உடையன. இது ஒரு சொத்தை வாங்குவதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


மாறாக, அடமானக் கடன் மூலமாக பெறப்பட்டக் கடனை இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடமானக் கடனைப் பெறும்போது நீங்கள் அதிக வட்டியை செலுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.


*வங்கிகள்*


இந்திய வங்கிகள் உங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உங்கள் சொத்துக்களை ஈடாக வைத்துக் கொண்டு தரப்படும் அடமானக் கடன்களை விரிவுப்படுத்தியுள்ளது.


*நிதி பயன்பாடு*


ஆனால் ஒரு வீட்டுக்கடன் வழக்கில், வங்கிகள் நேரடியாக வீடு விற்பவர்களின் வங்கிக் கணக்கிற்கு கட்டணத்தைச் செலுத்திவிடும். பெறப்பட்ட நிதி வீடு வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ள இது ஒரு வழியாகும்.


அதே சமயம், ஒரு அடமானக் கடனைப் பொறுத்த வரை கடன் வாங்கியவர்கள் அவர்கள் தேர்வு செய்யும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிதியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. அடமானக் கடனில் வங்கி கடன்தாரருக்கு நேரடியாக பணத்தை வழங்குகிறது.


*வரி சலுகை*


வீட்டுக்கடனில் இருப்பது போலன்றி, அடமானக் கடன்களைச் செலுத்தும் போது ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு தரப்படும் வரிச் சலுகையும் இல்லை.


ரூபாய் 28 இலட்சங்கள் வரை வாங்கப்படும் வீட்டுக் கடன்கள் முன்னுரிமைப் பிரிவில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வரம்பின் கீழ் வருகின்றன. மாறாக, அடமானக் கடனில் இந்தப் பயனையும் அனுபவிக்க முடியாது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

போலிஸ் இருதரப்பு மீதும் FIR போட்டால் வழக்கை என்ன செய்வது

 *போலிஸ் இருதரப்பு மீதும் FIR போட்டால் வழக்கை என்ன செய்வது?* 


காவல்நிலையத்தில் இரண்டு புகார் இருதரப்பு மீதும் FIR.

காவல்நிலையத்தில் அடிதடி பிரச்சனை சார்த்த புகார் அளிக்கும் போது மனுதாரருக்கும் எதிரிக்கும் சேர்த்தே சில நேரங்களில் FIR போடுகிறார்கள் இது எப்படி நடக்கிறது நடக்கிறது இந்த புகாரினை காவல்துறை எப்படி விசாரணை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம். 


 *இருதரப்பு மீதும் FIR ./How to file an FIR against both parties.* 


காவல்நிலையத்தில் ஒரே சம்பவத்தில் எதிரிக்கும், புகார்தாரருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்து, அந்த சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் அந்த புகார்களையும் பதிவு செய்து காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். 


காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து புகாரில் சொல்லபட்ட சங்கதிகள் உண்மை குற்றம் நடந்துள்ளது என அறிந்தால் இரண்டு வழக்குகளிலும் FIR போட்டு அதாவது முதல்தகவலறிக்கை போட்டு இறுதியறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். காவல்நிலையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் இது சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்புகள்.


பொய் புகார்./False complaint.

புகார் பொய்யானது என்று தெரிய வந்தால் அந்த புகாரின் மீதான விசாரணையை காவல்துறையினர் கைவிட்டு விட வேண்டும்.


 *வழக்கு நடைமுறை./Case procedure.* 


வழக்கு மற்றும் எதிர்வழக்கு ஆகியவற்றில் எந்த நடைமுறையை பின்பற்றி புலன் விசாரணை செய்ய வேண்டும் என காவல்நிலைய ஆணை எண் 588 ல் கூறப்பட்டுள்ளது. 

எதிரிகளால் அளிக்கப்பட்டுள்ள புகாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதனை நிரூபிப்பதோடு மட்டுமின்றி அவர்களுக்கு ஏற்பட்டிருந்த காயங்களுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.


 இந்த நடைமுறைகளை கட்டாயம் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டும்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்


குழந்தைக்கு உரைமருந்து கொடுக்கும் பழக்கம்

 

---------------------------------

 குழந்தைக்கு உரைமருந்து கொடுக்கும் பழக்கம்.

================

Dr.M.Chandran.Ph.D.

நாட்டு மருந்துக்குழு.


பிறந்த குழந்தைக்கு உரை மருந்து கொடுத்தால் எந்த நோயும் வராது. எப்படி, எவையெல்லாம் தரவேண்டும் என தெரிந்து கொள்வோம்.


தற்போதுள்ள நவீன மருந்துகள் இல்லாத காலத்தில் கூட நமது முந்தைய தலைமுறையினர் எல்லோருமே ஆரோக்கியமாகவே இருந்தார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. 


இன்றும் கிராமங்களில் குழந்தைகள் உரை மருந்து உதவியுடன் ஆரோக்கியமாக பெரும்பாலும் நோயில்லாமல் வளர்ந்து விடுகிறார்கள். குழந்தைக்கு உரை மருந்து கொடுப்பதால் குழந்தைகள் உடல்நலம் அதிகரிக்கவே செய்யும். உரை மருந்தில் பயன்படுத்தப்படும் பொருள்கள் என்ன, எந்த அளவில் கொடுக்கலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.


​வசம்பு -குழந்தைக்கான உரை மருந்து.


வசம்பு : பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா? வேண்டாமா?அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


பிள்ளைவளர்த்தி என்று சொல்லகூடிய வசம்பு -வின் மருத்துவ குணத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். வயிறு மந்தம், வயிறு உப்புசம், வயிறு வீக்கம், செரிமானம் என அனைத்தையும் போக்கும் வசம்பு குழந்தை பிறந்த 15 நாட்களிலேயே பயன்படுத்துவார்கள். 


ஆனால் அதை பயன்படுத்தும் அளவு குறித்து தெரிந்துவைத்திருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைக்கு பேச்சு வருவதில் தாமதமும், பேச்சு திக்கி திக்கியும் பேசும்படியும் குறை உண்டாகிவிடும்.


நாட்டு மருந்து கடைகளில் பிள்ளை வளர்த்தி கிடைக்கும். அதை வாங்கி நல்லெண்ணெய் தடவி நல்லெண்ணெய் விட்டு ஏற்றிய அகல் விளக்கில் சுட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். ஒரு மூறை சுட்டால் இதை 5 முறை பயன்படுத்தலாம்.


​கடுக்காய் -குழந்தைக்கான உரை மருந்து.


வாய், தொண்டை, இரைப்பை , குடல், கல்லீரல் சக்தியை ஊக்குவிக்ககூடியவை, பசியை தூண்டும், ரத்தத்தை சுத்த செய்யும். வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலைப்படுத்தும். உடலுக்கு வலிமைதரக்கூடியது. இரைப்பு நோய் வராமல் காக்கும். வயிற்றுப்பொருமலை குணப்படுத்தகூடியது. அஜீரணக்கோளாறை சரிசெய்யும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு சுவைகள் அடங்கியவை.


கடுக்காய் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் அதை வாங்கி வேகவைக்க வேண்டும். நெல் அவிக்கும் போது இதை வெள்ளைத்துணியில் முடிந்து வேகவிடவேண்டும். அல்லது சாதத்தை வேகவைக்கும் போது அதில் அப்படியே போட்டும் வேகவைத்துஎடுக்கலாம். அரை வேக்காடு வெந்தால் போதும். தொட்டு பார்த்தால் காய் அமுங்க வேண்டும்.


​மாசிக்காய் -குழந்தைக்கான உரை மருந்து.


வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். ஈறுகளுக்கு வலிமை தரும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். சிறுநீர் பெருக்க உதவும். வயிற்றுபோக்கு கட்டுப்படுத்தும். சீதபேதி பிரச்சனை இருக்கும் போது வெறும் மாசிக்காயை மட்டுமே உரசி தேனில் குழைத்து நாக்கில் தடவினால் அவை கட்டுப்படும்.


நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மாசிக்காயை வாங்கி முன்பு சொன்னது சோறு வேகவைக்கும் போது வேக வைத்து எடுக்க வேண்டும். அரை வேக்காடு வெந்தால் போதும். தொட்டு பார்த்தால் காய் அமுங்க வேண்டும்.


​ஜாதிக்காய் -குழந்தைக்கான உரை மருந்து.


குழந்தைக்கு சுவை உணர்ச்சி கொடுக்கும். செரிமானத்தை வேகமாக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும். சில குழந்தைகள் தூங்காமல் சிடுசிடுவென்று அழுதபடி இருப்பார்கள். இதை கொடுக்கும் போது குழந்தைக்கு நிம்மதியான தூக்கம் தரும். குழந்தைகள் சூடாக மலம் கழிப்பதை தடுக்கும். வாயுத்தொல்லை இல்லாமல் காக்கும்.


ஜாதிக்காய் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்ககூடியதே. இதையும் சோறு வேகவைக்கும் போது வேகவைக்க வேண்டும். அரை வேக்காடு வெந்தால் போதும். தொட்டு பார்த்தால் காய் அமுங்க வேண்டும்.


​சித்தரத்தை, சுக்கு - குழந்தைக்கான உரை மருந்து.


உடலில் கபம் சேராமல் பாதுகாக்கும். குழந்தைக்கு சளி இருக்கும் போது இதை ஒரு உரைப்பு சேர்த்து கொடுக்கலாம். நெஞ்சிலிருக்கும் சளி, கோழையை வெளியேற்றும். மூச்சுக்குழாயில் சளி இருந்தால் அதை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டவை. ஆனால் குழந்தைக்கு தொண்டைப்புண், வறட்டு இருமல் இருந்தால் தவிர்ப்பது நல்லது.


சுக்குவும் உரை மருந்தில் சேர்க்கலாம். ஆனால் ஒரு சிட்டிகையில் ஆறில் ஒரு பங்கு அளவு மட்டுமே சேர்க்கவேண்டும் அளவு தெரியவில்லையெனில் சேர்க்க வேண்டாம்.


​பூண்டு, மிளகு, கட்டிபெருங்காயம்-குழந்தைக்கான உரை மருந்து.


இந்த மூன்றையும் அப்படியே சேர்க்க போகிறோம். நாட்டு மருந்துகடையில் உரைகல் கிடைக்கும். 


அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை குளிப்பாட்டியதும் உரைகல்லில் வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், சித்தரத்தை, பூண்டு, மிளகு, பெருங்காயம் அனைத்தையும் ஒரு முறை உரைக்க வேண்டும். பிறகு அதை வழித்து தாய்ப்பாலில் கலக்க வெண்டும். இதை குழந்தைக்கு அப்படியே கொடுக்க வேண்டும்.


(மிளகு, பூண்டு ஒரு உரை மட்டுமே கவனம்) 


பிறகு பத்து நிமிடங்கள் கழித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்தாலே போதும். ஒரு வேளை மட்டுமே கொடுப்பது நல்லது.


பொதுவான செய்தி.

---------------------------------

குழந்தைக்கு இரண்டு மாதமாகும் போது இந்த உரை பொருள்களை இரண்டு முறை உரையுங்கள். மூன்று மாதமாகும் போது மூன்று முறை உரையுங்கள். அவ்வளவு தான். பிறகு குழந்தை வளர்ந்தாலும் இதே அளவு உரைத்து கொடுங்கள்.

================

Dr.M.Chandran.Ph.D.

நாட்டு மருந்துக்குழு.

================

குடியிருப்போர்_சங்கத்தை_பற்றிய_விதிமுறைகளும்_வழிமுறைகளும்

 *குடியிருப்போர்_சங்கத்தை_பற்றிய_விதிமுறைகளும்_வழிமுறைகளும்..*

நூறுக்கும் குறைவான வீடுகளைக்கொண்ட கிராமங்கள் பல இருக்கும் நமது மாநிலத்தில், 500-க்கும் அதிகமான வீடுகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல பெருநகரங்களில் உள்ளன.

இதிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது ஒரு சிற்றூருக்கு இணையானது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

நான்கு பேர் கொண்ட வீட்டிலேயே பிரச்சினைகள் பல ஏற்படும்போது, ஒரு சிறிய இடத்தில் 500 வீடுகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரச்சினை ஏற்படாதா என்ன?

எனது வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டார், அவர் வீட்டில் நாய் வளர்க்கிறார், தூங்கும்போது சுவரில் துளை (டிரில்) போடுகிறார், குப்பைகளை காரிடாரில் கொட்டுகிறார், எனது வீட்டுக்கு முன்பாக சூடம் கொளுத்துகிறார், சர்வீஸ் ஏரியாவில் ஏசி தண்ணீர் வடிகிறது என்பது போன்ற புகார்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் எழாத நாளே இல்லையென்று சொல்லலாம். 

இது போதாது என்று, எதற்கும் தன்னை முன்னிறுத்தும் தனிப்பட்ட சிலரின் இயல்பாலும் புதுவிதப் பிரச்சினைகள் ஏற்படும்.

தனி வீட்டில் வசிப்பவர்கள், எப்படி அந்த ஊரின் சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ, அதேபோல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப் பவர்களும் அந்தக் குடியிருப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வது மட்டுமே இதைத் தவிர்க்கும் வழி. குடியிருப்போர் நலச் சங்கத்தின் தேவை ஏற்படும் புள்ளியும் இதுவே.

*குடியிருப்போர்_நலச்_சங்கம்_என்றால்_என்ன?*

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களின் உரிமையைக் காக்கவும், நலனைப் பேணவும் உருவாக்கிக்கொள்ளும் அமைப்பே குடியிருப்போர் நலச் சங்கம்.

 குறைந்தபட்சம் ஐந்து வீட்டுக்காரர்கள் சேர்ந்தால்கூட இந்தச் சங்கத்தைத் தொடங்கிவிட முடியும். 

புதிதாகத் தொடங்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அனைத்து வீடுகளும் விற்ற பிறகே சங்கம் தொடங்க முடியும்.

 தேவையென்றால், அதுவரை தற்காலிக சங்கம் தொடங்கிக்கொள்ளலாம்.

நிரந்தர சங்கம் உருவான பிறகே அனைத்து வீட்டுக்காரர்களும் இணைந்து சங்கப் பொறுப்பாளர் களைத் தேர்வுசெய்ய முடியும். 

அதன் பிறகு குடியிருப்புச் சங்கத்தின் விதிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

 தனிநபர் விருப்பத்திற்கேற்பவோ சங்க பொறுப்பாளர்கள் விருப்பத்திற்கு ஏற்பவோ விதி முறைகளைக் கண்டிப்பாக உருவாக்கக் கூடாது. 

அனைத்து வீட்டுக்காரர்களின் கருத்துகளையும் அறிந்து, அதன்படி விதிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

 எக்காரணத்தைக்கொண்டும் வாடகைக்குக் குடியிருப்பவர்களைச் சங்க பொறுப்புகளில் நியமிக்க முடியாது.

*சங்கத்தின்_தேவை_என்ன?*

நேர்மையும் வாக்குறுதிகளும் காலாவதியாகிவிட்ட காலகட்டம் இது. இது கட்டுமான நிறுவனங்களுக்கும் பொருந்தும். வீட்டை விற்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுக்காக, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைவிட அதிகமான வாக்குறுதிகளை அவர்கள் அளிப்பது வாடிக்கையாக உள்ளது.

சில வாக்குறுதிகள் அத்தியாவசிய மானவையாக இருக்கும்.

 உதாரணத்துக்கு, குழந்தைகள் விளையாடும் பூங்கா, கிளப் ஹவுஸ், கழிவு நீர் சுத்திகரிப்பு போன்றவை. பல கட்டுமான நிறுவனங்கள், இவற்றை வழங்குவதற்கு இயன்ற வரை காலதாமதம் செய்யும்.

 இவற்றைக் கேட்கும் தனிநபர்களை இம்மாதிரியான நிறுவனங்கள் ஒருபோதும் சட்டை செய்வதில்லை. ஆனால், இவற்றைக் கேட்பது ஒரு சங்கமாக இருந்தால், அதற்கு அந்த நிறுவனங்கள் பதிலளித்தே ஆக வேண்டும்.

*கார்பஸ்_நிதி_என்றால்_என்ன?*

இதைவிட முக்கியமாக, அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, கார்பஸ் நிதிக்காக ஒரு தொகையைக் கட்டுமான நிறுவனங்களிடம் நாம் செலுத்தியிருப்போம். 

கார்பஸ் நிதி என்பது, அடுக்குமாடிக் குடியிருப்பின் பொதுச் சொத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வதற்காகச் சேகரிக்கப்படும் ஒருவித வைப்பு நிதி.

 இந்த கார்பஸ் நிதியைக் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறுவதற்குக் குடியிருப்போர் நலச் சங்கம் அவசியம் தேவை.

மேலும், குடியிருப்பு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகள், சாலை வசதி, சொத்து வரி போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிய அலுவலகங்கள் மூலம் கேட்டுப் பெறுவதற்குச் சங்கங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

 தனியொரு ஆளாக விண்ணப்பம் செய்வதைவிடவும் நிறையப் பேர் சேர்ந்து கோரிக்கை விடுக்கும்போது அது உரியக் கவனத்தைப் பெறும்தானே!

*பதிவுசெய்வது_அவசியமா?*

ஆம். பதிவாளர் அலுவலகத்தில் உரியக் கட்டணத்தைச் செலுத்தி சங்கத்தைப் பதிவுசெய்ய வேண்டும்.

 எந்தவொரு சங்கமும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே அதற்குரிய முழுமையான உரிமைகளைப் பெற முடியும்.

இது ஒரு சட்டரீதியான பதிவுபெற்ற அமைப்பாகக் கருதப்படுவதால் சங்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து பதிவுசெய்வது அவசியம்.

 உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர் நியமனம், அவர்களது பதவிக் காலம் உள்ளிட்ட சங்க விதிமுறைகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.

*வங்கிக்_கணக்கு*

பதிவுசெய்வது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது சங்கத்துக்கு எனத் தனியாக வங்கிக் கணக்கு தொடங்குவது. 

வரவு செலவுகளை வங்கிக் கணக்கு மூலமாகக் கையாளுவது பாதுகாப்பானது. சங்கக் கணக்குவழக்குகளை முறையாகப் பராமரிப்பதுடன் மட்டுமல்லாமல்; ஆண்டுத் தணிக்கையும் முறையாகச் செய்ய வேண்டும்.

குறைந்த உறுப்பினர்கள் கொண்ட சங்கமாக இருந்தால் பொறுப்பாளர்களே கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்ளலாம். 

அதிக வீடுகள் கொண்ட குடியிருப்பாக இருந்தால், இதற்கு என்று தனி நிர்வாகிகளை அமர்த்திக்கொள்வது அவசியம்.

 பொது நிதியின் அனைத்துச் செலவுகளையும் சங்க உறுப்பினர்கள் எப்போதும் கேட்டறியும்படி சங்கத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

*உறுப்பினர்களின்_சேர்க்கை*

அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் ஒருவரைக் குடியிருப்போர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று எந்த வகையிலும் கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமாகும்.

 ஒவ்வொருவரும் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே சங்கத்தில் சேர வேண்டும்.

 அதைப்போல உறுப்பினர்களுக்கான பதிவுக்கட்டணத் தொகையையும் கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது. பதிவுக்கட்டணம் செலுத்தாத உறுப்பினர்களின் குடிநீர், மின்சார இணைப்புகளைத் துண்டித்து அவர்களை அச்சுறுத்துவது குற்றமாகக் கருதப்படுகிறது.

*உறுப்பினர்கள்_என்ன_செய்ய_வேண்டும்?*

குடியிருப்போர் சங்கம் என்பது தங்களது நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதை உறுப்பினர்கள் (வீடு வாங்கியிருப்பவர்) தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

 சங்கத்தின் பொறுப்பாளர்கள் தங்களுக்கு இலவசமாகச் சேவையாற்ற முன்வந்தவர்கள் என்பதைப் புரிந்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை உறுப்பினர்கள் வழங்கவேண்டும். மாத பராமரிப்புக் கட்டணத்தை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் செலுத்த வேண்டும்.

ஏனென்றால், நீங்கள் செலுத்தும் பணத்திலிருந்துதான் பாதுகாவலர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்ட பராமரிப்புத் தொழிலாளிகள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்படும். 

மேலும், இதைச் செலுத்தத் தவறும் உறுப்பினர்களின் வீடுகளுக்கான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து இணைப்புகளையும் நீதிமன்ற அனுமதியோடு சங்கத்தால் துண்டிக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்வதும் நல்லது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

இந்திய தொழிலாளர் சட்டம் முழு விளக்கம்...!

 இந்திய தொழிலாளர் சட்டம் முழு விளக்கம்...!


தொழிற்சாலைகள் சட்டம் 1948..


இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டம் (தொழிற்சாலைகள் சட்டம் 1948) , 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டுவந்த மிக முக்கியமான சட்டங்களுள் இதுவும் ஒன்று. தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் சூழ்நிலை , அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம், அவர்களுக்கு அளிக்கபபடவேண்டிய விடுமுறைகள் ,மிகைநேரப்பணி , குழந்தைகள்., பெண்கள் மற்றூம் ஆண்களைப் பணியில் அமர்த்துவது, அவர்களின் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் போன்ற விஷயங்கள் பற்றி இந்த சட்டம் விரிவாக எடுத்து உரைக்கிறது

அரசியல் அமைப்பு சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் என்ட்ரி 36 இன் கீழ் , மத்திய அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது

இந்த சட்டத்தில் 120 பிரிவுகளும் 3 அட்டவணைகளும் உள்ள


பிரிவு 


பிரிவு -2 கீழ்காணும் சொற்களை வரையறை செய்கிறது


(a) adult : பதினெட்டு வயது நிறைவடைந்த ஒருவர் adult என அழைக்கப்படுகிறா


(b) adolescent : பதினைந்து வயது நிறைவடைந்த ஆனால் பதினெட்டு வயது நிறைவடையாத ஒருவர் adolescent என அழைக்கப்படுகிறா

(bb) "calendar year" : ஜனவரி முதல் தேதியில் தொடங்கி அடுத்துவரும் பன்னிரு மாதங்கள் calendar year" எனப்படும்


(c) "child" : பதினைந்து வயது நிறைவடையாத ஒருவர் "child" என அழைக்கப்படுவார்

(cc) "competent person" :ஒருதொழிலகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய சோதனைகள். ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காக தலைமை ஆய்வாளர் அவர்களால் நியமிக்கப்படுகின்ற ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்துக்கு competent person என்று பெயர்


(cb) "hazardous process"ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் அல்லது சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் செயல்முறைக்கு" hazardous process" என்று பெயர். இந்த செயல் முறை முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டு


(d) "young person" : "young person" என்ற சொல் , child மற்றும் adolescent ஆகிய இருவரையும் குறிக்கும்


(e) "day": நள்ளிரவில் தொடங்கி தொடர்கின்ற 24 மணி நேரத்துக்கு "day"என்று பெய


(f) "week": சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்குகிற அடுத்த ஏழு நாள்கள் அடங்கிய கால அளவுக்கு ‘’week"என்று பெயர்


ஒரு தலைமை தொழிற்சாலைகள் ஆய்வாளர் , வேறு ஒரு நாளின் நள்ளிரவில் தொடங்கும் ஏழு நாள்களைக் கொண்ட கால அளவையும் ஒரு வாரமாக அறிவிக்கலாம். எழுத்துமூலம் தர்ப்படும் இந்த அறிவிப்பு , அவர் குறிப்பிடும் பகுதிக்கு மட்டுமே பொருந்து

(g) "power" இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்ற , மனிதன் அல்லது விலங்குகளால் உற்பத்தி செய்யப்படாத , மின் அல்லது வேறு வடிவமான ஆற்றல் 


தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதைத் தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது


இந்தியத் தொழில் பழகுனர் சட்டம் - 1961 (apprentices act-19


இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 (employees provident funds act-195


இந்தியத் தொழிலாளர் காப்புறுதிச் சட்டம் (employees state insurance act-esi ac


இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் -1948 (factories act-194


இந்திய போனஸ் பட்டுவாடா சட்டம் -1965 (payment of bonus act-196


இந்திய பணிக்கொடை சட்டம் – 1972(payment of gratuity act 197


இந்தியத் தொழில் தகராறுகள் சட்டம் -1947(industrial disputes act 194


இந்தியத் தொழிற்சாலைகள் (நிலை ஆணைகள்) சட்டம் -(industrial employment ( standing orders) a


இந்திய குறைந்த பட்ச ஊதிய சட்டம் (minimum wages ac


இந்தியத் தொழிற்சங்கங்கள் சட்டம் (trade unions ac


இந்தியத் தொழிலார்கள் ஈட்டுறுதிச் சட்டம் (workmen's compensation act -192


தொழிற்சாலைகள் சட்டம் 1948..


தொழிலாளர்கள் , தொழிற்சாலைகளில் பணிபுரியும் சூழ்நிலையை முறைப்படுத்துவதற்காக இந்திய அரசால் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களுள் தொழிற்சாலைகள் சட்டம் 1948 (factories act 1948) மிகவும் முக்கியமான ஒன்றாகும்


நோக்கங்கள்


பணிபுரியும் சூழ்நிலை, வேலை நேரம், விடுமுறை நாட்கள், மிகைநேரப்பணி, குழந்தைகளை பணிக்கு அமர்த்துதல், பெண்கள் மற்றும் இளையோர், பாதுகாப்பு,ஆரோக்கியம் மற்றும் தொழிலாளர்களின் நலன் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த சட்டம் விவரிக்கிறது. தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முறை ஆபத்துகள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களைக் காப்பது இச்சட்டத்தின் முக்கிய நோக்க

இந்த சட்டம் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்


வரையறை


தொழிற்சாலை


நாள்


தொழிலா


ஆபத்தான செயல்மு


உற்பத்திச் செயல்மு


மின்சக்


ஆய்வாளர்கள் (பிரிவு 


ஆய்வாளர்களின் அதிகாரங்கள் (பிரிவு 


சான்றளிக்கும் மருத்துவர்கள் (பிரிவு 1


ஆரோக்கியம்


இச் சட்டத்தின் பிரிவுகள் 11 முதல் 20 வரை தொழிலாளர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன் பற்றி குறிப்பிடுகின்


பிரிவு 11 : தூய்மை


பிரிவு 12 : வீணான பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல்


பிரிவு 13 :காற்றோட்டம் மற்றும் வெப்ப நி


பிரிவு 14 :தூசு மற்றும் புகை


பிரிவு 15 :செயற்கையான ஈரப்பதன்


தொழிற் சங்கங்கள் சட்டம் 1926தொ

இந்திய அரசாங்கம், 1926 ஆம் ஆண்டு தொழிற் சங்கங்கள் சட்டத்தை இயற்றி அமல் படுத்தியது.ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் தொழில் சங்கத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.தங்கள் பகுதியில் உள்ள தொழில் சங்கங்களுக்கான பதிவாளரிடம் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் கடன்கள், தங்களிடம் உள்ள பொது நிதி, தங்களுடைய வருமானம் மற்றும் செலவு போன்ற அனைத்து விவரங்களையும் தங்களது பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும்


தொழில் தராறுகள் சட்டம் 1947தொ


வெளி இணைப்பு தொழில் தராறுகள் சட்டம் 1


தொழிலாளர் இழப்பீட்டு சட்ட


ஊதியம் வழங்கல் சட்டம் 1936தொ

ஊதியம் வழங்கல் சட்டம் 1936 அமலுக்கு வருவதற்கு முன் தொழிலாளர்கள் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.செய்த வேலைக்கு சம்பளம் வழங்காதிருத்தல்,போதுமான அல்லது நியாயமான ஊதியம் வழங்காதிருத்தல்,குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காதிருத்தல், எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்காதிருத்தல், தொழிலாளர்கள் மீது தேவையில்லாத தண்டனைகளை விதித்தல் போன்ற பலவழிகளில் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு வந்தனர்


குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948..


நோக்கம்


தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதே குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் முக்கிய நோக்கம்


அட்டவணைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்ச ஊதியத்தின் அளவை நிர்ணயித்து தொழிலாளர்கள் பாதுகாக்கப் படுகின்றன

இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்


இ.எஸ்.ஐ.சட்டம் 1948..


சமூக நலனைக் காப்பதை நோக்கமாகக்கொண்டு இ.எஸ்.ஐ.சட்டம் 1948 இயற்றப்பட்டது

தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தை உருவாக்குதல் (esi corporation )(பிரிவு 

தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் அதிகாரங்கள் : (powers of esi corporation 

தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் பணிகள் 

பங்களிப்புகள் (contributions

தொழிலாளர் மநிலக் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் தொழிலாளர்கள் பெறும் பயன்கள் 


மருத்துவ நன்மைகள் (medical benefit


நோயுறும்போது கிட்டும் பயன்கள் (sickness benefi


பேறுகாலத்தில் பெறும் பயன்கள் (maternity benefi


ஊனமடைந்தால் பெறும் பயன்கள் (disability benefit


தொழிலாளியை சார்ந்திருப்போருக்கு கிட்டும் பயன்கள்(dependent's benefits)


கூலி வழங்கல் சட்டம் - 19


இந்தியாவில் முதலாளிகள் தொழிலாளர்களுக்கு, கூலியினை வழங்காமல் அல்லது தாமதப்படுத்தி வழங்கி தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது கூலி வழங்கல் சட்டம் - 1936 (en: the payment of wages act - 1936) ஆகும். இச்சட்டம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நியாயமான கூலி, குறித்த வடிவத்தில், குறிப்பிட்ட காலத்தில் சட்ட விரோதமான பிடித்தங்களின்றி வழங்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளட்து


கூலி.

*******


கூலி என்பது முதலாளியால் கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்தத் தொழிலாளிக்கு மறு பயனாக வழங்கப்படும் தொகையாகும். இது பணமாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ வழங்கப்படலாம். இவை தவிர கூலி என்பது


முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழங்கப்படும் தொகை கூலியாகு


மிகுதி நேரம் சம்பளம் (over time wage) விடுமுறை நாள் சம்பளம் போன்றவையும் கூலி எனப்படும்


மீதூதியம் போன்ற எந்தவொரு கூடுதல் சன்மானமும் கூலி எனப்படு


வேலையின் முடிவில் அந்த வேலைக்காக வழங்கப்படும் தொகை கூலி எனப்படும்


கூலி இல்லாதவை.

*********************


பயணப்படி அல்லது பயணச் சலுகைத் தொ


பணியின் தன்மையினால் வரும் கூடுதல் செலவுகளைச் சரிக்கட்டப்பட வழங்கும் தொ


நன்றித்தொகை அல்லது பணிக்கொ


லாபமாகக் கிடைக்கும் மீதூதிய


வீட்டு வசதி, தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி போன்ற சேவைக


ஓய்வூதியம், வைப்புநிதி மற்றும் இவைகளின் மேலான வட்டித் தொகை, இவற்றிற்காக முதலாளி செலுத்தும் சந்தாத் தொகை


-போன்றவைகள் கூலியாகக் கருதப்படா


கூலியின் வடிவம்..

********************


கூலியை பணமாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ மட்டும் வழங்க வேண்டும். வேறு வழிகளில் இவை வழங்கக் கூடாது


கூலி வழங்கும் நாட்கள்.


தொழிலாளர்களுக்கு கூலி அவ்வப்போது வழங்கப்பட்டு விட வேண்டும். மாதாந்திர சம்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு மாதத்தின் முதல் ஏழு நாட்களிலிருந்து பத்து நாட்களுக்குள் மாதக் கூலி வழங்கப்பட வேண்டும்


கூலி வழங்கப்படும் காலம்.


கூலி குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக வழங்கப்பட வேண்டும். கால இடைவெளி என்பது வாரம், மாதமிருமுறை, மாதம் என்பதைக் குறிக்கும். இந்தக் கால இடைவெளியில் வாரம் என்றால் குறிப்பிட்ட கிழமையிலும், மாதமிருமுறை எனில் குறிப்பிட்ட தேதிகளிலும் மாதமாக இருந்தால் குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளும் வழங்கப்பட வேண்டும்


சட்ட விரோதமான பிடித்தங்கள்.


தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய கூலியிலிருந்து நியாயமான பிடித்தங்கள் தவிர சட்டவிரோதமான பிடித்தங்கள் எதுவும் செய்யக் கூடாது


கூலி வழங்குவது குறித்த விதிகள்..


கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 3ன் படி ஒவ்வொரு முதலாளியும், தன்னால் பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளிக்குச் சேர வேண்டிய அனைத்துக் கூலியையும் வழங்க வேண்டும் என்பதைச் சட்டக் கடமையாக்குகிறது


கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 4ன் படி ஒவ்வொரு முதலாளியும் கூலி வழங்கும் கால இடவெளியை உருவாக்கிக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு மாத கால இடைவெளிக்கு அதிகமாகக் கூடா


தொழிலாளர்கள் எண்ணிக்கை 1000 க்கு அதிகமாகாத நிலையில் ஊதியக் காலத்தின் கடைசி நாளிலிருந்து ஏழு நாட்கள் முடிவடைவதற்கு முன்பும், 1000 க்கு அதிகமாக உள்ள போது பத்து நாட்கள் முடிவடைவதற்கு முன்பும் கூலி வழங்கப்பட வேண்டும். இதை விடுமுறை நாளில் அளிக்கக் கூடாது என்பதை கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 5 மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது


கூலியை நடப்பிலுள்ள இந்தியப் பணமாகவும் சில்லரைக்காசுகளாகவும் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்புதல் பெற்று வங்கிக் காசோலையாகவோ அல்லது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதன் வாயிலாகாவோ வழங்கலாம் என்று கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 6 தெரிவிக்கிற


சட்டம் அனுமதிக்கும் பிடித்தங்களைத் தவிர வேறு எவ்வித பிடித்தங்களும் இல்லாமல் தொழிலாளர்களுக்குக் கூலி வழங்கப்பட வேண்டும். முதலாளிக்கு அல்லது அவரது முகவர்க்கு தொழிலாளர்கள் செலுத்தும் தொகை அனைத்தும் பிடித்தங்கள் எனப்படும். ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுதல், கீழ் பதவிக்கு மாற்றம் செய்தல் மற்றும் தற்காலிகப் பணி நீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட கூலி இழப்புகள் பிடித்தங்களாகக் கருதப்படமாட்டாது என கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 7ல் தெரிவிக்கப்பட்டுள்ளது


சட்டம் அனுமதிக்கும் பிடித்தங்கள்தொ

கூலி வழங்கல் சட்டம் 1936-ன் படி சில பிடித்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அ


அபராதத் தொ


தொழிலாளி் கடமையைச் செய்ய தவறியதற்காகவோ, செய்யக்கூடாத செயலைச் செய்ததற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கூலியில் பிடித்தம் செய்யலாம். இப்பிடித்தம் அவரது ஒரு மாதக் கூலியின் மொத்தத் தொகையில் மூன்று சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது


வேலை செய்யாத நாட்


கூலி வழங்கும் காலத்திற்குரிய வேலை நாட்களில் வேலைக்கு வராத நாட்களுக்குரிய கூலியைப் பிடித்தம் செய்து கொள்ள அனுமதிக்கிறது


சேதத்திற்கான இழப்


தொழிலாளியிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் கவனக்குறைவாய் இருந்து அதனால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒரு தொகையை கூலியிலிருந்து பிடித்தம் செய்யலாம். இப்படி பிடித்தம் செய்யப்படும் முன்பு, தொழிலாளிக்கு இது குறித்த நியாயமான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டு


சேவைகளுக்கான தொ


வீட்டு வசதி, தண்ணீர், மின்சார வசதி மற்றும் வாகன வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டால் அதற்குச் சமமான தொகையைக் கூலியில் பிடித்தம் செய்யலாம். ஆனால் அச்சேவைகளுக்கு தொழிலாளி ஏற்பளித்திருக்க வேண்டும்


முன்தொ


தொழிலாளி வேலையில் சேரும் முன்பு அல்லது சேர்ந்த பின்பு அல்லது விழாக் காலங்களில் வழங்கப்பட்ட முன்தொகையினைக் கூலியில் பிடித்தம் செய்ய அனுமதிக்கிறது. இது போல் அதிகமாகக் கொடுக்கப்பட்டு விட்ட கூலியைத் திரும்பப் பெறவும் பிடித்தம் செய்யலாம். ஆனால் போக்குவரத்து செலவுகளோ அல்லது முன்பணம் மற்றும் அதிகமாக வழங்கப்பட்ட கூலிக்கு வட்டியோ பிடித்தம் செய்யக் கூடா


கடன் தொகைக


மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் மற்றும் தொழிலாளரால் பெறப்பட்ட கடன்கள் போன்றவற்றின் மாதாந்திர தவணையிலான பிடித்தங்கள் கூலியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்


உறுப்பினர் தொ


மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கத்திற்கு தொழிலாளர் செலுத்தும் உறுப்பினர் தொகை மற்றும் பிற தொகைகளைப் பிடித்தம் செய்யலா


காப்பீட்டுத் தவணைத் தொ


ஆயுள் காப்பீடு, தபால் அலுவலக வழிக் காப்பீடு போன்றவைகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகையினை தொழிலாளர் சம்மதத்தின் பேரில் அவரிடம் உரிய கடிதம் பெற்று அதன் பின்பு பிடித்தம் செய்யலாம்


பிற பிடித்தங்


வருமான வரிக்கான பிடித்த


நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலான பிடிக்கப்பட வேண்டிய தொ


வருங்கால வைப்புநிதி மற்றும் ஒய்வூதியத் திட்டம் ஆகியவைகளுக்குச் செலுத்த வேண்டிய தொழிலாளர்களின் சந்தாத் தொ


தொழிலாளர்களின் தொழில் வரிப் பிடித்த


பிரதமர் தேசிய உஅதவி நிதி மற்றும் பிற நிவாரண நிதிகளுக்கான நன்கொடைத் தொகை போன்றவை தொழிலாளர்களின் சம்மதக் கடிதத்தின்படி பிடித்தம் செய்யலாம்


தொழிற்சங்கத்திற்கான உறுப்பினர் தொகை தொழிலாளர்களின் சம்மதக் கடிதத்தின்படி பிடித்தம் செய்யலா


பிடித்தத்தின் பொது வரம்புதொ

தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பொழுது அனைத்துத் தலைப்புகளின் கீழும் செய்யப்படும் மொத்தப் பிடித்தம் தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கடன் தொகைகளுக்காகப் பிடித்தம் செய்யப்படும் பொழுது 75 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யலாம்


முறையீடுகள்

சட்டத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டு சட்டவிரோதமான பிடித்தங்கள் செய்யப்படும் போது அல்லது தகுந்த காலத்தில் கூலி வழங்கப்படாத போது அது குறித்த முறியீடுகளை மாநில அரசு நியமித்துள்ள அதிகாரியிடம் முறையீடு செய்யலாம்


இந்த அதிகாரி முறையீடுகள் வரும் போது கூலியில் செய்யப்பட்ட பிடித்தம் சட்டப்படி சரியானதுதானா? கூலி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா" என்பதையும் இவற்றுடன் தொடர்புடைய பிற செயல்கள் குறித்தும் விசாரித்து முடிவு செய்வார்

அதிகாரியின் முடிவு சரியானதல்ல என்று கருதினால் மாவட்ட நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டு நீதிமன்றம், வழக்கில் ஏதேனும் சட்ட வினாக்கள் இருப்பதாகக் கருதினால் அவ்வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மேற்கோள் செய்து அனௌப்பி வைக்கலாம். அதன் பின்னர் உயர்நீதி மன்றத்தின் முடிவிற்குத் தகுந்தபடி மாவட்ட நீதிமன்றம் மேல் முறையீட்டை முடிவு செய்யலாம்


 சம்பள பட்டுவாடா சட்டம் 1936.


இந்தச் சட்டத்தின் அறிமுக உரை இப்படிச் சொல்கிறது. “இந்தியாவில் தொழில்துறையின் வளர்ச்சியை தொடர்ந்து வேலைக்கு அமர்த்தபட்ட தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகள் மோசமாகிக் கொண்டே வந்தன. தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒழுங்கான கூலி வழங்காத நிலை இருந்தது. இந்தச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது

“1926-ம் ஆண்டு அப்போதைய காலனிய அரசு, சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் பற்றியும் அபராதங்கள் விதிக்கப்படுவது பற்றியும் தகவல் திரட்டும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் எழுதியது. விசாரணையின் போது இரண்டு வகைகளிலும் முறைகேடுகள் நடப்பதை தெரிய வந்தது

இதைத் தொடர்ந்து “சம்பள பட்டுவாடா மசோதா, 1935” சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் 23, 1936-ல் ஒப்புதலை பெற்றது. அது சம்பளம் பட்டுவாடா சட்டம் 1936 என்று அழைக்கப்படுகிறது


பி.எஃப் விதிகளில் மோடி அரசு கொண்டு வந்த திருத்தங்களை திரும்பப்பெற வைத்த பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நடத்திய போராட்ட


இந்த சட்டத்தில் யார் தொழிலாளி, சம்பளம் வழங்கும் முறை, எந்தமாதிரியான தவறுகளுக்கெல்லாம் முதலாளி, தொழிலாளியின் சம்பளத்தை பிடித்தம் செய்யலாம், எதற்கெல்லாம் பிடித்தம் செய்யக்கூடாது போன்ற விவரங்கள் உள்ள


தொழிற்சங்க சட்டம் 1926, தொழிற்தகராறு சட்டம் 1947 முதலான 44 மத்திய சட்டங்களும் கூடுதலான மாநில சட்டங்களும் உள்ளடக்கிய தொழிலாளர்களின் போராட்டத்தால் வென்றெடுக்கப்பட்ட இதுபோன்ற சட்டங்கள்தான் தொழிலாளி வர்க்கத்துக்கு குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பை தந்துள்ளன என்பது வரலாறு. தொழில்துறையின் ஆரம்ப காலங்களில் இருந்த சுரண்டல் முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களின் வியர்வையும், இரத்தமும் ஈட்டிய வெற்றிகள்தான் இந்த தொழிலாளர் சட்டங்கள்


இன்று கடந்த 25 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளால் இந்தச் சட்டங்கள் நடைமுறையில் நீர்த்துப் போக வைத்து விட்ட நிலையில், சட்டப் புத்தகத்திலும் இவற்றை மாற்றி எழுதி, ரத்து செய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு. இதன் விளைவுதான் இன்று தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும், வேலை நேர அதிகரிப்பு, திடீர் பணிநீக்கம், ஒப்பந்தத் தொழிலாளர் முறை முதலான சுரண்டல் முறைக


காலனிய ஆட்சியாளர்களே தொழிலாளர் போராட்டங்களுக்கு பணிந்து இயற்றிய சட்டங்களை, தொழிலாளி வர்க்கத்தின் செயலின்மையால் இன்றைய காலனிய ஆட்சி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மாற்றுவதை நாம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா..


தனி நபராக சிந்திக்கும் போது கார்ப்பரேட்டுகளின் தொழிலாளர் விரோத போக்குகளை எதிர்த்து முறியடிக்க முடியுமா என்று நமக்கு தோன்றுவது இயல்புதான். வர்க்கமாக இணைந்து சட்டப் போராட்டங்களின் மூலமாகவும், அரசியல் உணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் நமது உரிமைகளுக்காக போராடும் போதுதான் வென்ற உரிமைகளை தக்க வைத்துக் கொண்டு, மேலும் உரிமைகளை பெறுவது சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்தை சுரண்டல் தளையிலிருந்து விடுவிப்பதற்கான பாதையை சமைக்க முடியும்


தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்


தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபமாக முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, தொழிலாளிகளுக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்கிற சமூக நீதிக் கோரிக்கையில் பிறந்ததுதான் தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் - 1965 (payment of bonus act - 1965). இச்சட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு மீதூதியம் (bonus) வழங்கப்பட்டு வருகிறது


நோக்கம்


இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் 1965-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்து மீதூதியம் குறித்த தொழிற்தகராறுகளைத் தவிர்ப்பது என்று விளக்கப்பட்டுள்ள


மீதூதிய வகைக


மீதூதியம் வழங்கல் சட்டம் லாபத்தில் இருந்து கணக்கிடப்படும் மீதூதியத்தைப் பற்றி மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால் மீதூதியம் நடைமுறையில் அது வழங்கப்படும் முறைகளைப் பொறுத்தும் வேறுபடுகிறது. இதனால் மற்றவகை மீதூதியங்களைப் பெற உரிமை இல்லை என்பதல்


உற்பத்தி மீதூதியம்


ஒரு குறிப்பிட்ட ஆண்டில் செய்யப்பட்ட மொத்த உற்பத்தியின் அடிப்படையில் வழங்கப்படும் மீதூதியம் இது


லாபத்தில் மீதூதியம்


ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஈட்டப்பட்ட லாபத்திலிருந்து அந்த ஆண்டிற்குரிய மீதூதியத்தின் அளவைக் கணக்கிட்டு லாபத்தில் மீதூதியம் எனப்படுகிற


வழக்காறு மீதூதியம்


தீபாவளி, தைப்பொங்கல் போன்று சிறப்பு விழாக்களின் போது அந்த விழாக்காலச் செலவுகளைச் சரிக்கட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் மீதூதியம் இது


ஒப்பந்த மீதூதியம்


தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மீதூதியம் இ


மீதூதியச் சட்டத்தின் சிறப்புக


இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு மீதூதியம் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது


இச்சட்டம் மீதூதியம் வழங்குவதற்கான கோட்பாடுகளை வரையறை செய்கிற


இச்சட்டம் வழங்கப்பட வேண்டிய மீதூதியத்திற்கு குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்புகள் நிர்ணயம் செய்யப்படுகிறது


லாபத்தில் இருந்து வழங்கப்படும் மீதூதியத்திற்கு மட்டுமே இச்சட்டம் பொருந்து


இச்சட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்


வரையறை


ரூ.6500 வரை மாதச்சம்பளம் பெறும் தொழிலாளர்களும், மேற்பார்வையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் எழுத்தர்கள் அனைவரும் இச்சட்டப்படி தொழிலாளர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் பயிற்சித் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது


பணமாகத் தரப்படும் ஊதியம் அனைத்தும் சம்பளம் எனப்படும். அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி ஆகியவைகள் அதில் அடங்கும்.(மிகுநேரக் கூலி,பயணப்படி, ஊக்குவிக்கும் மீதூதியம், ஆட்குறைப்பிற்காகக் கொடுக்கப்படும் நஷ்டத் தொகை, நன்றித் தொகை மற்றும் ஓய்வு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் தொகை, ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் சந்தாத் தொகை போன்றவை சம்பளக் கணக்கில் வராது


ஒரு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாடும் பராமரிப்பும் அரசால் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தால் செய்யப்பட்டு வந்தால் அந்நிறுவனம் பொது நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் எனப்படுகிறது. அத்தகைய நிறுவனம் அரசு அல்லது ரிசர்வு வங்கி அல்லது அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகக் கட்டுப்படுத்தப்படலா


4. ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக மீதமிருக்கும் உபரித்தொகை மீதூதிய உச்சவரம்பின்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய மீதூதியத்தை விட அதிகமாக இருந்தால் அந்த மிகுதித் தொகையை அடுத்து வரும் நான்காண்டுகளுக்கு ஒதுக்கி வைக்கலாம். அத்தொகையினை அந்த நான்கு கணக்காண்டுகளில் மீதூதியம் வழங்கப் பயன்படுத்தலாம். இதை ஒதுக்கி வைத்தல் என்கிறார்கள்


ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக தொழிலாளர்களுக்குத் மீதூதியம் தருவதற்கு இறுதியாகக் கிடைக்கும் உபரித்தொகை இல்லாது போனால் அல்லது குறைவாகத் தோன்றக்கூடிய பணத்தை அடுத்து வரும் நான்கு கணக்காண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் சரி செய்து கொள்ளலாம். இதை சரி செய்தல் என்கிறார்க


மீதூதியம் கணக்கிடும் வி


மீதூதியம் என்பது நிர்வாகம் கருணையின் அடிப்படையில் வழங்கும் கருணைத்தொகை அல்ல. மீதூதியம் வழங்குவது தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தின் சட்டக் கடமை. இத்தொகையைக் கணக்கிடுவதற்காக விதி ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் மொத்த லாபத்தில் இருந்து கீழ்க்காணும் கழிவுகளைக் கழித்துக் கொண்ட பின்னர் இறுதியாகக் கிடைக்கக் கூடிய உபரி மதிப்பிலிருந்து மீதூதியம் கணக்கிடப்படுகிறது


கழிவு


ஒரு ஆண்டில் ஒரு நிறுவனம் ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து போடப்பட்ட முதலீடுகளுக்காக 6 சதவிகிதம் தொகையைக் கழித்துக் கொள்ளலாம்


செயல் மூலதனத்திற்காக 2 முதல் 4 சதவிகிதம் தொகை வரை ஒதுக்கி வைத்துக் கொள்ளலா


தேய்மானச் செலவுகளைக் கணக்கிட்டு அதனை லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்


நிறுவனத்தின் புனரமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்கான நிதியைக் கழித்துக் கொள்ளலா


அந்த ஆண்டின் அந்நிறுவனம் கட்டுகின்ற வருமானவரி மற்றும் இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம்


மேற்கண்டவைகள் கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது மீதூதியம் என்பதே கிடையா


ஆதாரம் : தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய

நீலகிரி மாவட்டம்

ம்னைது..ம்..ம்..கள்.திள்..ம்..).கள்.ம்..து..ள்து.:-.:-து.:-.:-ல.ள்து.:-.டம்..?ள்..ன.ம்..””..!...:-.கும்..ம்கைகைம்கள்.கைம்.கை.ள்து.கை.கைம்.பு.கள்.கைவைகு.து..து....!...!...!...!.*.!து..ள்ம்டைகைகை*..!.ம்..ம்.,*..!.36 :s)t)t)s):):)4)..!.ர்..:-.!.கும்947கு.கு ::லை: : :றன.0)9)😎திறைறைளி:: ::-.ம்.:-..!3)t)t)ct7)2)5)8)t)2)61)..ம்..ர்..ம்....ர்ர்..-2ன....!இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம்.


மேற்கண்டவைகள் கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது மீதூதியம் என்பதே கிடையாது.


ஆதாரம் : தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்


நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...