குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரத்தில் அதிகளவில் காய்கள் காணப்படுவதால், அவற்றை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை மூலிகைகள், மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, தாவரவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த பூங்கா பயனுள்ளதாக விளங்குகிறது. இந்நிலையில், இமயமலை உள்ள, பல்வேறு வகையிலான ருத்ராட்சை மரங்கள் இந்த பூங்காவிலும் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இம்மரத்தை பக்தியுடன் பார்த்து செல்கின்றனர். "எலியோகார்பஸ் கனிட்ரஸ்' என்ற தாவரவியல் பெயரை கொண்ட இந்த மரத்தின் விதை தான் ருத்ராட்சை. இமாலய மலையின் அடிவாரத்தில் உள்ள கங்கை சமவெளிப்பகுதிகளிலிருந்து தென் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஹவாய் தீவுகள் வரை வளர்கின்றன. இந்த மரத்தின் பழம் பச்சை நிறமாக இருந்து கனியும் போது நிள நிறமாக மாறும். இந்த மரம் நான்கு ஆண்டுகளில் காய்க்க துவங்கும். நம் இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் நோய் நிவாரணியாக ருத்ராட்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ருத்ராட்சையில் ஒன்று முதல் 21 முகங்கள் வரை உள்ளன. இதில் 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சை கொட்டைகளை இந்துக்கள் தங்கள் கழுத்தில் அணிகின்றனர். சிம்ஸ் பூங்காவில் தற்போது ருத்ராட்சை சீசன் துவங்கியுள்ளதால் பூங்காவில் உள்ள மரத்தில் ருத்ராட்சை காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகின்றன. மரத்திலிருந்து விழும் காய்களை உள்ளூர்வாசிகள் சேகரித்து மாலையாக கோர்த்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...