குடிமக்கள் நுகர்வோர் மன்றம் குறித்து - பள்ளி கல்வி துறை கையேட்டில் - தகவல் இடம் பெறாமை.

பெறுனர்
உயர்திரு ஆணையர் அவர்கள்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,
சென்னை.

பொருள்:     குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் குறித்து -  பள்ளி கல்வி துறை
கையேட்டில் - தகவல் இடம் பெறாமை.  இடம் பெற
செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு வணக்கம்,
  
உணவு பொருள் வழங்கல்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழிகாட்டுதலோடு பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்பட்டு வருகின்றது.  பள்ளிகளில் தேசிய பசுமை படை, நாட்டு நலப்பணி திட்டம், சாரனார் இயக்கம். இளம் செஞ்சிலுவை சங்கம் என்பன உள்ளிட்ட பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  
  
இவை பற்றிய தகவல்கள்  பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் செயல்பாட்டு  கையேட்டில் இடம் பெற்றுள்ளன. ஆனால் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அதன் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளுக்கு வழங்கபட்டுள்ள கையேட்டில் இடம்பெற வில்லை.  இதனால் பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திற்கான முன்னுரிமை அளிக்கபடுவதில்லை.
  
பல பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்க இதனை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்து வருகின்றன.  இதனால் பள்ளிகளில் நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடிவதில்லை.  
  
எனவே பள்ளி கல்வி துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்  பள்ளி செயல்பாடுகள் குறித்த கையேட்டில் குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் செயல்பாடுகள் குறித்த தகவலும் இடம் பெற செய்ய வேண்டும் என கேட்டு கொள்கின்றோம்.
  
மேலும் இதுவரை நுகர்வோர் மன்றம் துவங்க படாத பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,ஏற்கனவே  துவங்கப்பட்ட நுகர்வோர் மன்றத்தின் செயல்பாடுகள் முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
  
இப்படிக்கு

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...