உதகை
உதகை வட்டத்தில் உள்ள கடைகளில் அயோடின் உப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
முன்னதாக அயோடின் அளவு குறித்து ஆய்வு மேற்க்கொள்ள உதகை நகரில் மற்றும் அருகிலுள்ள கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் உப்பு மாதிரி சேகரிக்கப்பட்டது .
அதுபோல கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் மற்றும் நியாய விலைகடைகளிலும் உப்பு மாதிரி சேகரிக்கப்பட்டது.
திருவாரூர் தமிழ்நாடு உப்புமாதிரி ஆய்வகத்திற்கு உதகையில் சேகரிக்கப்பட்ட 50 உப்பு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய அரசு உணவுபாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை, யுனிசெப், மற்றும் தமிழ்நாடுநுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல்ஆராய்ச்சி மையம் ஆகியனசார்பில் தமிழ்நாடு முழுக்க அயோடின் உப்பு விற்பனைகுறித்து ஆய்வு மேற்க்கொண்டுவருகின்றது .
நீலகிரியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் இப்பணியை மேற்கொண்டு வருகின்றது.
இதுவரை சேகரிக்கப்பட்ட உப்புகள் மாதிரிகள் உணவு பகுப்பாய்வகம் மூலம் ஆய்வு மேற்க்கொண்டு அயோடின் கலக்காத உப்பினையும், தரமற்ற உப்பினை கண்டறிந்து அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது .
நீலகிரி மின் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினரும்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவருமான சு. சிவசுப்பிரமணியம் கூறும்போது
உப்பு பாதுகாப்பாக வைக்கப்பட்ட பாக்கொட்டுகளில் தான் அயோடின் அதிகமாக இருக்கும். வெயில் மற்றும் மழை நீர் பட்டால் அயோடின் சத்து குறைந்து விடும். இதனால் அயோடின் சத்து குறைபாடு ஏற்படும்.
அரசு சார்பில் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் உப்பு குறைந்த விலையில் தரமான உப்பாக விற்பனை செய்யப்படுவதை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார் .
நிகழ்ச்சியில் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் மற்றும் மைய நிர்வாகிகள் மாரிமுத்து இருதய தாஸ் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் அயோடின் மாதிரி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment