ஆளுமைதிறன் பயிற்சி


கூடலூர் பாரதியார் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு ஆளுமைதிறன் பயிற்சி வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் டி பழனிசாமி தலைமை தாங்கி பேசும்போது மாணவப்பருவத்தில் தனிதிறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறுகளை செய்வதற்க்கு இடம் கொடுக்காமல் பிறர் மதிக்கும் வகையில் நடந்து கொள்ளவேண்டும் என்றார்.

தேவாலா காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசும்போது

இளைஞர்கள் சமூக மாற்றத்தில் பங்கு முக்கிமானதாக உள்ளது.  தனிதிறமைகள்தான் சமூகத்தில் அடையாளபடுத்துகின்றன.  

அபதுல்கலாம், அன்னை தெரேசா, மகாத்மா காந்தி போன்றவர்களின் அழகு அவர்களின் செயல்பாட்டில்தான் இருந்தது.  அதனால்தான் அவர்களை  வழிகாட்டியாக எடுத்துக்கொள்கின்றோம்.

லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க 
மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

லஞ்சம் கொடுப்பதை தவிர்க்கவேண்டும் தான் நேர்மையாக செயல்பட்டால் லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை உணர வேண்டும்.

குறிக்கோள்களை  முடிவு செய்து அதனை அடையும் முயற்சிகள் மேற்க்கொண்டால்  சாதிக்கமுடியும்.  உழைப்பில்லாமல் எதையும் அடையமுடியாது என்றார்.

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் 
தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திபாண்டியன், 
ரெப்கோ வங்கி கிளை மேலாளர் ஜெயசந்திரன், 
கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், கல்லூரி சமூகபணியியல் துறை தலைவர் பென்ஞமின் ஆகியோர் பேசினார்கள்.
ஆளுமைதிறன் மற்றும் திறன் மேம்பாடு குறித்து அகமது கபீர் மற்றும் ரஞ்சன்விக்னேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கல்லூரி பேராசிரியர் நாட்டு நலப்பணி திட்ட மகேஸ்வரன் வரவேற்றார் 
முடிவில் 
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மேரிசுஜி நன்றி கூறினார்.
நாட்டுநலப்பணிதிட்ட மாணவர்கள் 150 பேர் பங்குபெற்றனர்.

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...