நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு

பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், ஆல் தி சில்ட்ரான் அமைப்பு ஆகிய சார்பில் கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளை வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணி வாசகம் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொ) முத்துக்குமார் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசும்போது நுகர்வோர் கல்வி என்பது பொதுமக்கள் மத்தியில் அதிக பரவ வேண்டியது அவசியமாகிறது. தரமான சேவை, தரமான நுகர்வுக்கு அடித்தளமாக அமையும் தரமான நுகர்வு பெறுவதற்கான வாய்ப்புகளையும், அவற்றில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டும் பொறுப்பும் நுகர்வோருக்கு
 உள்ளது. மின்சார உபயோகப் பொருட்களில் தர முத்திரைகள் உள்ள பொருட்கள் விபத்தை ஏற்படுவது தடுப்பதோடு மின் உபகரணங்களுக்கு பாதுகாப்பையும் தரும் இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதுபோல மின்சாரத்தை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளவும், பாதுகாப்பான முறையில் மின்சாரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வுக்கான முன்னெடுப்புகள் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் தொடர்ந்து செயலாற்றி வருவதால் தற்போதைய சூழலில் நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நுகர்வோர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்ன பயன்? நமக்கு தேவையா என்பதை அறிந்து பொருட்களை வாங்கி பயன்படுத்துதல் அவசியம். தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு மூலம் பலவேறு பொருட்களின் பயன்கள், பக்கவிளைவுகள், பொருட்களின் வாழ்நாள் உள்ளிட்ட தன்மைகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்பதால் நுகர்வோர் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார்.

நிகழ்ச்சியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...