பாறை ஓவியங்களில் ஜல்லிக்கட்டு தோன்றிய தகவல்
ஊட்டி,: ஆதிகாலத்தில் மனிதன் மாடுகளை அடக்கி, வளர்ப்பு பிராணியாக மாற்றிய போராட்டங்கள்தான், பிற்காலத்தில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளாக மாறின என்ற தகவல்கள், பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன.
பண்டைகால மக்களின் வாழ்வியல் முறைகள், உலகில் உள்ள பல இடங்களிலும் பாறை ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுஉள்ளன.
பிரான்சில் உள்ள லஷ்காஸ், ஸ்பெயினில் உள்ள அல்டமிரா, இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள பிம்பேத்கா ஆகிய இடங்களில் காணப்படும் பாறை ஓவியங்கள், மனிதனின் அன்றாட வாழ்வில், மாடுகளுக்குள்ள முக்கியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன.
சில ஓவியங்களில், வன உயிரினமாக இருந்த மாடுகளை, மனிதன் போராடி அடக்கி, தன் வயப்படுத்தி, வளர்ப்பு பிராணியாக மாற்றுவதை சித்தரிக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த போராட்டம் பிற்காலத்தில், காளைகளுடனான வீரவிளையாட்டாக மாறியிருக்கலாம் என்றும், பின்பு அவை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டாக மாற்றம் பெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விழுப்புரத்தில் ஆலம்பாடி, மதுரையில் கிடாரிபட்டி, வேலுாரில் குடியாத்தம், தர்மபுரியில் பல பகுதிகளில் உள்ள பாறை ஓவியங்களில், மனிதன், மாடுகளுடனான வாழ்வியல் முறைகள் இன்றளவும் காணப்படுகின்றன.
இதேபோன்று, நீலகிரியில் கோத்தகிரி கரிக்கையூர், பொரிவரை, தெங்குமரஹாடா; ஊட்டி அருகே, இடுஹட்டி, கோணவக்கரை, வெள்ளரிக்கம்பை; மசினகுடி அருகே சீகூர் பகுதிகளில் மனிதன், மாடு வாழ்வியல் முறைகள், பாறை ஓவியங்களாக காணப்
கோத்தகிரி கரிக்கையூர் பகுதியில் உள்ள பாறை ஓவியங்களில், 3,500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள், கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங் கள் காணப்படுகின்றன
No comments:
Post a Comment