பெறுனர்
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியரகம் உதகை.
பொருள் : நீலகிரி
மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சி,
கடலக்கொல்லி கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு
வீடு,
குடிநீர், நடைபாதை, மின்வசதி செய்து தர கேட்டல்
சார்பாக.
மதிப்பிற்குரிய அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் நெலாக்கோட்டை
ஊராட்சிக்குட்பட்ட கடலக்கொல்லி என்னும் கிராமத்தில் பல்வேறு மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஆதிவாசி மக்களும் அடங்குவர். இங்கு குடியிருக்கும் ஆதிவாசி மக்கள் சுமார் 20
குடும்பங்களில் 10 குடும்பங்களுக்கு மேல் இருக்க வீடு இல்லாமல் உள்ளனர்.
தற்காலிகமாக பிளாஷ்டிக் குடிசைகள் அமைத்து அவர்கள்
குடியிருந்து வருகின்றனர். மழை மற்றும் காற்றில்
குடிசைகள் தாங்குமா என்ற அச்சத்துடனே வாழும் நிலை உள்ளது. தற்காலிக வீட்டினை சீரமைக்க கூட வழியில்லாத நிலையே
அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் இவர்களால்
தங்களது குடியிருப்பை சீரமைக்க பேதிய நிதியின்றி சிரம்மத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்களது வீடுகள் குறி்த்து ஆய்வு செய்து வீடுகள் கட்டிகொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அதுபோல
கடலக்கொல்லி கிராமத்தில் பொது கிணறும் இல்லாமல் குடிக்க தண்ணீரை வயல்வெளியில்
உள்ள கிணற்றில் எடுத்து பயன்படுத்துகின்றனர்.
மழைகாலத்தில் கிணற்றில் சேரும் சகதியும் சேர்ந்து களங்கிய நிலையில் உள்ள தண்ணீரை
குடிநீராக பயன்படுத்தும் நிலையே உள்ளது.
மேலும் சாலை வசதி இல்லாத நிலையில் மண் சாலையில்
ஒற்றையடி பாதையில் நடந்து செல்லும் நிலையும் உள்ளது.
மின் வசதி இன்றி வீடுகளில் இன்னும் மண்ணென்னை விளக்குகளை
பயன்படுத்தும் நிலையே உள்ளது. இதனால் இருளில்
வசிக்கும் இவர்களின் பிள்ளைகளும் படிக்கவும் சிரம்மப்படுகின்றனர்.
எனவே அம்மையீர் அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து
இப்பகுதியில் வசிக்கும் இந்த ஆதிவாசி மக்களுக்கு குடியிருக்க வீடு, நடந்து செல்ல சிமென்ட் சாலைகள், குடிக்க சுகாதாரமான
நீர், வெளிச்சத்துக்கு மின்சார வசதி ஆகியன செய்து தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்
பொது செயலாளர்.
CCHEP. Nilgiris
No comments:
Post a Comment