ஒரு தகவல்
தமிழகத்தில் தேர்தலில்.......... கட்சியை சேர்ந்தவர்கள் ஓட்டு கேட்க எங்க வீட்டுக்கு இன்று வந்தாங்க.
"சார், மறக்காம ....... சின்னத்துக்கு வாக்கு போடுங்க..."
"அடேங்கப்பா...நீங்க கொடுத்திருக்கிற வாக்குறுதிகளை நிறைவேற்றி முடிக்கிறதுக்குள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலே வந்துடும் போலயே.."
"அப்படிலாம் இல்ல சார்....5 மாசத்துக்குள்ள கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். உங்களுக்கு ஏதாச்சும் வசதி வேனும்னா சொல்லுங்க...அதையும் நிறைவேத்துவோம்..."
"ஓ அப்படியா....எங்க கிராமத்துல புது லைப்ரரி கட்டி கொடுங்கன்னு சொன்னாக் கூட நீங்க அதை செய்வீங்களா..."?
"நிச்சயமா செய்வோம் சார்...."
"எப்படி..."
"என்ன சார் தெரியாத மாதிரி கேட்கறீங்க...எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒவ்வொரு வருஷமும் 2, 3 கோடி வரும்ல...அதுல கட்டி கொடுப்போம்.."
"ஓ...இந்த பணத்தை எடுத்து உங்க எம்.எல்.ஏ எங்களுக்கு லைப்ரரி கட்டிக் கொடுப்பார்..."?
"ஆமாங்க சார்..."
"அதாவது....உங்க முதல்வர் அனுப்புற அந்த தொகுதி மேம்பாட்டு நிதி உங்க எம்.எல்.ஏக்களுக்கு கிடைக்கும்....அதானே.."?
"ஆமாங்க சார்...."
"சார்....உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..."?
"என்னங்க சார்..."
"முதல்வர் அனுப்பும் அந்த தொகுதி மேம்பாட்டு நிதியான 2, 3 கோடியில 1 ரூபாய் கூட உங்க எம்.எல்.ஏ கைக்கு வராது..."
"என்ன சொல்றீங்க சார்..."?
"ஆமாங்க....முதல்வர் அனுப்பும் அந்த பணம் நேராக எங்க மாவட்ட ஆட்சியர் அரசு வங்கி கணக்குக்கு தான் போகும். அங்கேயே தான் அந்த நிதி இருக்கும்..."
"சரிங்க..."
"இப்ப எனக்கு லைப்ரரி வேணும்னா, உங்க எம்.எல்.ஏவுக்கு மனு ஒன்னு கொடுப்பேன். என்னோட மனுவை வாங்கும் உங்க எம்.எல்.ஏ அதை ஆட்சியருக்கு அனுப்பி வைப்பார்...."
"ஹும்ம்ம்ம்..."
"ஆட்சியர் மனுவை படிச்சிட்டு, 'எங்க கிராமத்துக்கு உண்மையிலேயே லைப்ரரி தேவையா...?' என அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்துவார்..."
"ஓகே...."
"இந்த விசாரணையில் லைப்ரரி அவசியம் என்றால் மட்டுமே ஆட்சியர் அந்த நிதியை தொடுவார். இல்லையென்றால், மனுவை ரிஜக்ட் பண்ணிடுவார்..."
"என்ன சார் சொல்றீங்க.....மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ கொடுத்த மனுவை ஆட்சியர் ரிஜக்ட் செய்வாரா..."?
"ஆமா....ஆட்சியர் அனுமதி கொடுத்தால் மட்டுமே லைப்ரரி கட்டும் வேலைகள் தொடங்கப்படும். ஆக, என்னோட மனுவை அனுப்பி வைக்கும் வேலையை மட்டும் தான் எம்.எல்.ஏ செய்வார். அதாவது, ஒரு போஸ்ட்மேன் மாதிரி தான் செயல்படுவார்...லைப்ரரியை கட்டியே ஆக வேண்டும்னு ஆட்சியர்கிட்ட வலியுறுத்தி கேட்க முடியாது..."
"சரி..."
"அதுவும், அந்த லைப்ரரி கட்டும் நிதி உங்க எம்.எல்.ஏ வங்கி கணக்குக்கு வராது. இந்த பணியை மேற்கொள்ளும் PWD, அல்லது முனிசிபல், அல்லது பஞ்சாயித்து ஆபிஸ் அரசு வங்கி கணக்குக்கு தான் நிதி போகும்..."
"ஹூம்ம்ம்..."
"அப்புறம், அங்கிருந்து இந்த வேலையை எடுக்கும் ஒப்பந்ததாரரின் வங்கி கணக்குக்கு பணம் போகும்...அவர்கிட்ட இருந்து கடைசியாக கட்டுமான பொருட்களை விற்கும் கடைக்கு பணம் போகும்...ஆக, உங்க எம்.எல்.ஏ தவிர எல்லார்கிட்டயும் பணம் போகும்.."
"உண்மையாவா சார்..."
"சத்தியமா உண்மை தான்...ஆக, நான் என்ன வசதி கேட்டாலும், அதை உங்க எம்.எல்.ஏ மட்டுமே நிறைவேற்ற முடியாது. ஆட்சியர் மனசு வெச்சா மட்டுமே நாங்க கேட்கிற வசதிகள் எங்களுக்கு கிடைக்கும்...
உங்க எம்.எல்.ஏக்களுக்கு முழு அதிகாரம் சட்டங்களை இயற்றும் சட்டமன்றத்தில் தான் இருக்கு. இங்க தொகுதியில் எங்களுக்கு ஏதாச்சும் வசதிகள் செய்து தரனும்னா, அதுக்கு ஆட்சியர் மனசு வெச்சா தான் முடியும்..."
"ஓகே சார்....அப்புறம் ஓட்டு..."?
"என்னுடைய தனிப்பட்ட முடிவு கண்டிப்பா ஓட்டு போடுவோம் யாருக்கு என்பது தனிப்பட்ட ரகசியம்.
இப்படி சொல்லவும்...அவர் அமைதியா கிளம்பிட்டார் 🧑🦯🧑🦯🧑🦯🧑🦯
No comments:
Post a Comment