விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு 1


விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 1
ஓம் காளி... ஜெய் காளி... என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 2
விஸ்வநாதரை தரிசித்து விட்டு ஊர் திரும்பி விட்டாள். மனைவியை யாரோ ஒருத்தியாக நினைத்து, கண்டுகொள்ளாமல் போன துர்காசரணரும் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 3
புவனேஸ்வரி அம்மையார் மகனுக்கு சூட்டிய பெயர் விரேஸ்வரன். அந்தப் பெயரிலேயே அவரை அழைத்தார். ஆனால், ஊரார் முன் அவர் குடும்பத்தினர் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 4
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரேயொரு அறை மட்டும் பூட்டிக்கிடந்தது. அந்த அறையை தள்ளிப்பார்த்தனர். உள் பக்கமாக [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 5
பள்ளியில் மட்டுமல்ல... வெளியில் பழகும் தன் நண்பர்களுக்காகவும்உயிரையே கூட கொடுப்பார் விவேகானந்தர்.அவருக்கு அப்போது வயது 11. [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 6
இளவயதைத் தாண்டி வாலிப பருவம் வந்ததும் வேறென்ன...விஸ்வநாத தத்தருக்கு மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மகன் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 7
பேராசிரியர் ஹேஸ்டியை அவர் சந்தித்து, கடவுளை நேரில் பார்க்க என்ன செய்ய வேண்டுமென கேட்டார்.பேராசிரியர் தனக்குத் தெரிந்த வரையில் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 8
நரேந்திரனுடன், பேசிக்கொண்டிருந்த அந்த வேளையிலேயே திடீரென பரவசநிலைக்கு போய் விட்டார் ராமகிருஷ்ணர். அவர் எந்தநேரத்தில் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 9
கோர்ட்டில் இருந்து என்ன தீர்ப்பு வருமோ என்ற நிலை... தீர்ப்பு வரும் வரை படிப்புக்கு பணம் வேண்டும். சாப்பாட்டுக்கு பணம் வேண்டும். [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 10
இந்த முறையும் விவேகானந்தர், அம்பிகையிடம் தான் கேட்க வந்ததை மறந்துவிட்டார். அம்பிகையின் முன்னால் நின்றபோது ஏதோ ஒரு பரவசநிலை [...]

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- 2


விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 11
இப்படியாக, ராமகிருஷ்ண சங்கம் சிறிய அளவில் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த மர்ம வீட்டில் தாரக், மூத்தகோபால் என்ற சீடர்கள் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 12
காசி நகரம் தான் அவரை முதலில் ஈர்த்தது. அங்கு, துவாரகாதாஸ் என்பவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். அங்கே வங்காளமொழி எழுத்தாளர் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 13
அப்போது எதிரே ஒருவன் வந்தான். சுவாமிஜி! உங்கள் ஆடை என்னாயிற்று. ஒரு கோவணமாவது அணிந்து கொள்ளக்கூடாதா? சரி.. சரி... இதோ! இதை அணிந்து [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 14
சுவாமிஜி அங்கிருந்து ஹரித்துவாருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் ஹத்ராஸ் என்ற ஊர் வந்தது. அங்கே இறங்கிய சுவாமிஜி, ரயில் [...]
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 15
சுவாமிஜியின் எண்ணத்தை நிறைவேற்ற சீடர்கள் தயங்கினர். அவர்களில் சிலர் விவேகானந்தரிடம், சுவாமி! இந்த நாட்டிலுள்ள உயர்வகுப்பினர் [...]

.மின் சிக்கனம் காலத்தின் கட்டாயம்


அப்பப்பா... கரன்ட் இல்லாம இருக்கறப்போ...! என்று, மானாவரியாக "கரன்ட்-கட்' ஆகும் சமயங்களில், பற்களை தாண்டி வந்து விழும் சொற்கள் ஏராளம். ஏன் இப்படி பெருமூச்சு விடுகிறீர்கள். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; மின்சக்தியை சேமியுங்கள் என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கோவை வட்டம் தெரிவிக்கிறது. சொன்னதோடு மட்டுமல்லாமல், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதில், தமிழகத்துக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது, கோவை மாவட்டம்.

சிறு, குறு தொழில்கள் நிறைந்தது, கோவை மாவட்டம். இங்கு, மின் சக்தியின் பயன்பாடு மற்ற நகரங்களைக் காட்டிலும் அதிகம். 24 மணி நேரத்தில், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்றிருந்த மின் தடை, இப்போது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ மின்சாரம் இருந்தாலே பெரிய ஆச்சரியம். இந்த குறுகிய கால மின்சார வினியோகத்தால், பலர், தொழில்களைத் தொடர முடியாமல் தவிப்பது வேதனை.ஏனிந்த மின் தடை என்று காரணம் கேட்டால், மின் உற்பத்தி இல்லை; இயற்கை பொய்த்துவிட்டது; அனல் மின் நிலையங்கள் சீராக இயங்கவில்லை; காற்றாலை மின் உற்பத்தி இல்லை; மத்திய தொகுப்பில் இருந்து மின் உதவி இல்லை என, பலப்பல காரணங்கள். தமிழ்நாடு மின்சார வாரியமும் இப்படித்தான்; இது தான் முடியும் என தெரிவித்து விட்டது. இதனால், மாற்று எரிசக்தியை பயன்படுத்துங்கள் என, யோசனையும் கூறி உள்ளது. சூரிய மின் சக்தியை பயன்படுத்தினால், மின்சாரத் தேவை குறையும்; சூரிய மின்சக்தி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுங்கள் என, அரசும் உத்தரவிட்டு விட்டது.

தமிழகமெங்கும், டிச., 14 முதல் 20ம் தேதி வரை, மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில், மின்சேமிப்பை வலியுறுத்தி வரும் மின் வாரியமே, முன்னோடியாக இருந்து, மக்களுக்கு வழிகாட்டினால் என்ன? என்ற யோசனை தோன்றி, அதை நடைமுறைப்படுத்தி உள்ளது, கோவை வட்ட, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்.
இக்கழகத்தின், கோவை முதன்மைப் பொறியாளர் தங்கவேலு, தங்கள் அலுவலகத் தேவைக்கு, சூரிய மின் ஆற்றலைப் பயன்படுத்தி வருகிறார். 

அவர் கூறியதாவது: மின் சேமிப்பு குறித்து, முதலில் மாணவர்களிடம் புகுத்தினால் தான், நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் அவர்கள் இருக்கும் நேரத்தில், மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும்போது, சேமிக்கப்படும் மின்சாரம், பிற தேவைகளுக்கு பயன்படும். ஆகையால், கோவையில் மட்டும், இன்று வரை ஐம்பது பள்ளிகளில், மின் சக்தி சேமிப்பு பற்றி பேசி விட்டோம். குண்டு பல்புகளை பயன்படுத்துவதால், மின்சாரம் அதிகம் வீணாகிறது. சாதாரண டியூப் லைட் 40 வாட்ஸ் என்றாலும், அதில் உள்ள சோக் 20 வாட்ஸ் மின்சாரத்தை இழுக்கும். மொத்தம் 60 வாட்ஸ் மின்சாரம் செலவாகும். ஆதலால், எலக்ட்ரானிக் சோக் கொண்ட டியூப்லைட் பயன்படுத்த வேண்டும்.மாற்று எரிசக்தியான, சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க, கோவையில் எனது அறைக்கு தேவைப்படும் மின்சாரத்தை, சூரிய சக்தியைக் கொண்டே உற்பத்தி செய்து பயன்படுத்துகிறேன். தமிழகத்திலேயே, இங்கு தான், முதன் முறையாக, மின்வாரிய அலுவலகத்தில், சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது. அலுவலகத்தின் மேல் மாடியில், தனியார் நிறுவனம் சூரிய கலன் (பேனல்) அமைத்து கொடுத்துள்ளது. இதிலிருந்து 400 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதற்கு, சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. இந்த மின்சாரம் தான், அலுவலக செயல்பாடுக்கு பயன்படுகிறது.
ஆண்டில் 365 நாளில், குறைந்தது 300 நாள் வரை கிடைக்கும் சூரிய சக்தியில், மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதைக் கொண்டு, வீட்டில் ஹீட்டர் முதலியவற்றுக்கு பயன்படுத்தலாம். கோவைக்கு இப்போது, 2000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், 1500 முதல் 1600 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது. பற்றாக்குறை தேவையான 400 மெகா வாட்டில், சூரிய சக்தியை பயன்படுத்தினால், 100 மெகா வாட் வரை பற்றாக்குறை குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மின்வாரியத்தை மட்டுமே நம்பி இருக்காமல், இயற்கையில் கொட்டிக்கிடக்கும் சக்தியை, மனித ஆற்றலின் மூலம் தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம்.



மின்சேமிப்பு யோசனைகளில் சில...


:* சாதாரண குமிழ் பல்புகளுக்கு பதிலாக, கையடக்க குழல் பல்புகளை (சிஎப்எல்/எல்இடி) விளக்குகளை உபயோகிக்கலாம்.
* பகல் நேரத்தில் முடிந்தளவு, மின்விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* மின் விசிறிகளின் இறக்கைகளை அவ்வப்போது சுத்தம் செய்யவும்.
* மின் சக்தி சேமிப்பான்களை குளிர்சாதன கருவிகளில் உபயோகிக்கவும்.

சூரியனுக்கு நெருக்கமான குஜராத் :


குஜராத்தில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, முதல்வர் பதவியை அலங்கரித்திருப்பவர் நரேந்திர மோடி. காரணம், குஜராத் மாநிலம் எல்லா வகையிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பிரமிப்பை தருகிறது. இம்மாநிலம், மின்சார உற்பத்தியில் தன்னிறைவை தாண்டி, மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. எதிர்கால தேவைகளை, கருத்தில் கொண்டு நீண்டகால திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, மேலும், மேலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் குஜராத் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. வீட்டு கூரைகளில், சூரிய ஒளி மின்சார உற்பத்தி அமைப்புகளை அமைக்க, மக்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத சூரிய ஒளியில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை பிரபலப்படுத்தி வருகிறது. இதற்காக, காந்தி நகரில் மாதிரி சோலார் சிட்டியை உருவாக்கியுள்ளது. இதன் ஒரு அம்சமாக, மெக்ஸானா மாவட்டம் சந்த்ராசன் கிராமத்தில், சோலார் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், வாய்க்காலுக்கு மேலே அமைக் கப்பட்டு இருப்பது தான். சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றும் கூரை, தண்ணீர் வாய்க்காலை வெயில் தாக்காத வகையில் போடப்பட்டுள்ளது. சர்தார் சரோவார் அனைத்து திட்டத்தின் சனாந்த் கிளை வாய்க்காலில், 750 மீட்டர் நீளத்துக்கு சூரிய ஒளி மின்சார கூரை அமைக்கப்ட்டிருக்கிறது. 
இதன்மூலம், ஆண்டுக்கு 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதுடன், வாய்க்காலில் ஓடும் தண்ணீர் ஆவியாவதில் இருந்து, 90 லட்சம் லிட்டர் நீர் தடுக்கப்படும் என்பது சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தை, குஜராத் மாநில மின் உற்பத்தி கழக நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. சோலார் மின் உற்பத்தி குறித்து, மத்திய அரசின் எரிச்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் முதன்மை செயலாளர் கூறுகையில், ""நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு, சூரிய ஒளி மின்சார திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வீட்டு கூரைகளில், சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கு, வீட்டு உரிமையாளருக்கு யூனிட்டுக்கு 3 ருபாய் தரப்படும். அரசு கட்டடங்களில் 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சோலார் பேனல்கள் அமைக்கப்பட இருக்கிறது. சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் குஜராத் மாநிலம் தான் முன்னிலையில் இருக்கிறது. மெஹ்சானா, ராஜ்கோட், சூரத், வதோரா போன்ற நகரங்களில், குஜராத் மாநிலத்துடன் இணைந்து, சோலார் சிட்டியை அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம்,'' என்றார்.

மருதமலையில் யாமிருக்க பயமேன்:


மன அமைதியை தேடி கோவிலுக்கு செல்வது தான், பெரும்பாலானோரின் விருப்பம். கோவிலுக்கு சென்று வந்த பின், மனதில் குப்பையாக கிடந்த சுமை, ஏதோ குறைந்தது போன்ற உணர்வு தென்படுவது இயல்பு. இப்படி, கோவையில், முக்கிய ஆன்மிக ஸ்தலமாக இருப்பது மருதமலை முருகன் கோவில். இங்கு, மின்சார விநியோகத்துக்கு "யாமிருக்க பயமேன்' என்று, முருகப் பெருமானின் மொழியிலேயே சொல்ல வைத்திருக்கிறது சோலார் சக்தி. சூரிய மின்சக்தியை பயன்படுத்தி, மின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்துகொண்டு, பிற கோவில்களுக்கு, சிறந்த உதாரணமாக திகழ்கிறது, இக்கோவில்.கோவையில் இருந்து சுமார் 12 கி.மீ., தொலைவில் இருந்தாலும், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார் சுப்ரமணிய சுவாமி. சுற்றிலும் வனம் சூழ்ந்துள்ளதால், அதிகாலை மற்றும் அந்தி மயங்கும் மாலையில், வெளிச்சம் குறைவாகத் தான் இருக்கும். "அடிக்கடி வரும்' மின்சாரத்தை மட்டுமே நம்பினால், பெரும்பாலான நேரங்களில், இருட்டில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் உதவியுடன் நிலைமையைச் சமாளித்தாலும், அதற்கானச் செலவு கட்டுக்கடங்காமல் போனது. வன விலங்குகளின் அச்சுறுத்தலும் இருப்பதால், ஒரு வித பீதி நிலவி வந்தது. இதிலிருந்து விடை கொடுத்தது, மாற்று எரிசக்தியான சூரிய சக்தி.

மருதமலை கோவிலின் மொத்த பரப்பு 13 ஏக்கர். கோவில் பிரகாரத்தில் ஏழு விளக்குகளும், கோவிலின் அன்னதானம் மற்றும் பயணிகள் காத்திருப்பு மண்டபத்தில், சோலார் மின் ஆற்றலில் எரியும், சி.எப்.எல்., விளக்குகளும் அமைக்கப்பட்டன. சோலார் மின்விளக்கு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், மண்டபத்துக்கு 90 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
திருக்கோவிலில், மொத்தம் 647 படிகள் உள்ளன. இனி வரும் காலங்களில், மலைப்பாதையைப் போலவே படிகளிலும், சோலார் விளக்குகள் அமைக்கும் திட்டமும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருக்கோவில் நிர்வாகம் தற்போது, மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய், மின் கட்டணம் செலுத்துகிறது.சோலார் விளக்குகள் மூலம், மின் கட்டணம் வெகுவாகக் குறைவதோடு, மின் சேமிப்பும் கூடும். இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகள், மாலை சூரிய ஒளி குறையும் போது, தாமாகவே எரியத் துவங்கும்; அதிகாலை சுமார் 6.00 மணியளவில், அதுவே அணைந்து விடும். இந்த தானியங்கி அமைப்பின் காரணமாக, இவற்றைப் பராமரிக்க தனியாக ஆட்கள் தேவையில்லை. மருதமலை கோவில் பிரகாரம் மற்றும் மலைப்பாதையில், 30 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தி மூலம் மின்சாரச் செலவை கணிசமாக மிச்சப்படுத்தமுடியும். தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு முன்வரலாமே?

மானியம் இருக்க... கவலை எதற்கு...?


ஒரு நாளைக்கு, மூன்று மணி நேரம் என ஆரம்பித்து, இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது, மின் தடை. "இனி, ஒரு பிரயோஜனமும் இல்லை' என உணர்ந்த மக்கள், "இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால் , அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார வினியோகம் கூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது. மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. மக்கள் மத்தியில், சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில், சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. ஆனால், இதற்கு தேவைப்படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடு சற்று அதிகம். அதனால் தான், மத்திய அரசாங்கம், அதற்கு அதிகபட்சம் 40 சதவீதம் வரை, மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி., ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, ஒரு கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெற, சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி அமைப்பதற்கு, சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக, 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும். பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைக்க, 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். ஒரு பேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை குறைத்துக் கொண்டால், குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உட்பட இடங்களுக்கு, அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்சம் கிடைக்கும். 

பணத்தை மட்டுமல்ல... இதையும் சேமிக்கலாம்..!


எரிசக்தி, இன்று அபரிமிதமாக, பொதுமக்களுக்கு உதவி வருகிறது. இந்த சக்தியை சேமிக்க வேண்டுமென்றால், வீடுகளில் தேவையில்லாத சமயங்களில் விளக்குகளை அணைத்து விட வேண்டும். குழாய் மின் விளக்குகள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும், அவை பொருத்தும் பொருள்களிலும் சேரும் தூசுக்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின்சார சாதனங்களையும், கருவிகளையுமே பயன் படுத்துங்கள். குழாய் விளக்குகளையும், பல்புகளையும் அதன் வெளிச்சம் தடைபடாத இடத்தில் பொருத்த வேண்டும். இன் கான்டசென்ட் (ஒளி இழைகள் சூடாவதால் வெளிச்சம் தருகிற) விளக்குகளான பல்புகளை விட, காம்பாக்ட் புளூரசண்ட் பல்பு, மூன்றில் ஒரு பங்கு குறைவாக மின் சக்தியை, எடுத்துக் கொள்கின்றன. வெளியிடும் வெளிச்சமும் குறைவதில்லை. காம்பாக்ட் புளூரசண்ட் பல்புகள், இன்கான்டசென்ட் பல்புகள் அளிக்கும் வெளிச்சத்தைப் போலவே, இதமாக இருக்கும். அதே சமயத்தில் 75 சதவீதம் குறைவான மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்.சி.எப்.எல்., சற்றே விலை கூடுதலானவையாக இருந்தாலும், அவற்றுக்கான முதலீடு பயனுள்ளது. அவை அளவில் சிறியவை. சிக்கனமானவை, அதிக வெளிச்சமும் கூடுதல் வண்ணத்தையும் தருபவை. ஒரு நாளைக்கு 4 மணி நேரங்களுக்கு மேலாக எரியும் விளக்குகள் உள்ள இடங்களில், காம்பாக்ட் புளோரசண்ட் பல்புகளை உபயோகியுங்கள். 75 வாட் சக்தியுள்ள இரண்டு பல்புகளுக்கு பதிலாக, இரண்டு 15 வாட் புளோரசண்ட் பல்புகளைப் பயன்படுத்தினால், ஒரு வருடத்துக்கு 18 கிலோ வாட் மணிநேர சக்தி மிச்சமாக்கலாம். சமையலில், எரிசக்தியைக் குறைவாக பயன்படுத்தும் அடுப்புகளைப் பயன்படுத்துங்கள். சமைக்கும்போது, பாத்திரங்களை மூடிவைப்பதனால் சமைக்கும் நேரமும் எரிசக்தி உபயோகமும் குறைகிறது. மறுசுழற்சி மூலம் உருவாகும் தாள்களை பயன்படுத்துங்கள். மறுசுழற்சித் தாள்களை, குறைவான இயற்கை வள ஆதாரங்களையும் குறைவான விஷத்தன்மையுள்ள வேதிப் பொருட்களையும் பயன்படுத்தித் தயாரிக்க முடிகிறது. விவசாயத்தில் எரிசக்தியை சேமிக்கும் முறைகள்: ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள பம்புகள் பயன்படுத்துவதன் மூலம், சிறியதும் பெரியதுமான பழுதுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பம்பின் திறனை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் வரை மேம்படுத்தலாம். பெரிய வால்வு அமைப்பதால், கிணற்றிலிருந்து நீர் எடுக்க குறைவான எரிபொருளும், மின்சக்தியுமே தேவைப்படும் என்பதால், மின்சார, டீசல் உபயோகம் குறையும். குழாய்களில் வளைவுகளும் இணைப்பான்களும் எந்த அளவுக்கு குறைவாக உள்ளனவோ, அந்தளவுக்கு மின்சக்தியை அதிகமாகச் சேமிக்க முடியும். குழாய்களில், சாதாரணமான வளைவுகளை காட்டிலும், கூர்மையான வளைவுகளால் தேய்மானம் 70 சதவீதம் அதிகமாகும். குழாயின் நீளத்தை 2 மீட்டர் குறைத்தால், ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் 15 லிட்டர் டீசலை சேமிக்க முடியும். கிணற்றின் நீர்மட்டத்துக்கு மேல் 10 அடியைத் தாண்டாதவாறு பம்ப் பொருத்தப்பட்டால் அதன் திறன் அதிகரிக்கும். தரமான பிவிசி உறிஞ்சு குழாயை பயன்படுத்துவதன் மூலம், 20 சதவீத எரிபொருளையும், மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

இடுப்பை ஒடிக்காத சோலார் அடுப்பு:


இப்போது, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் தான் என்று சொல்லி விட்டார்கள் வேறு. "இது, நடக்குமுன்னு எனக்கு அப்போதே தெரியும்; அதனால தா நாங்க விறகு அடுப்பு பயன்படுத்துறோம்' என்று ஏளனமாக பேசுவோர் பலர். சமையல் செய்வதா, வேண்டாமா? என்றும் சிலர் யோசித்து, ஓட்டல் சாப்பாடு மேல் என்று எண்ணியிருப்பவர்கள் பலர். இதற்கு மாற்றாக வந்து விட்டது. சமையல் பணிகளை எளிதாக்கவும், காஸ் தட்டுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடாகவும், மின்சாரத்தில் இயக்கும் வகையில் இன்டக்ஷன் அடுப்பு மக்களிடையே பிரபலமானது. ஆனால், தற்போது நிலவும் மின்தடையால், இன்டக்ஷன் அடுப்பும், மக்களின் அவசர தேவைக்கு "கை' கொடுக்காததால், தற்போது மாற்று தேவையை எதிர்நோக்கி காத்துள்ளனர். மக்களின் இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சோலார் அடுப்பை தமிழ்நாடு எரிசக்தி மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்டி வடிவிலும், "டிஷ்' வடிவிலும் இந்த அடுப்பு கிடைக்கிறது.வீடு, ஓட்டல்கள், விடுதி, மருத்துவமனை ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில், இந்த அடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. புகையில்லாத, சத்தான சமையலை இதன் மூலம் தயாரிக்கலாம். நான்கு முதல் ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு, பெட்டி வடிவிலான அடுப்பு பரிந்துரைக்கப்படுகிறது. ஆயிரத்து 500 முதல் மூவாயிரம் ரூபாய் வரை இந்த அடுப்பு கிடைக்கிறது. முறையாக பயன்படுத்தினால், 10 முதல் 12 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒன்பது முதல் 15 பேருக்கு சமைக்க, "டிஷ்' வடிவ அடுப்பு பரிந்துரைக்கப்படுகிறது. 5,000 முதல் 9,000 வரை அளவுக்கேற்ப இந்த அடுப்பு கிடைக்கிறது. 20 ஆண்டுகள் வரை உழைக்கக் கூடியது.சோலார் அடுப்பு வாங்க, அரசு சார்பில், 2,100 ரூபாய் மானியமாகவும் வழங்கப்படுகிறது. அடுப்பின் அளவை பொறுத்து மானியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அடுப்பை பயன்படுத்துவதன் மூலம் ஓர் ஆண்டுக்கு 10 சமையல் காஸ் சிலிண்டர் மிஞ்சப்படுத்தப்படுகிறது. இந்த அடுப்பு குறித்து, அரசின் எரிசக்தி நிறுவனம் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு, 044-28222973 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முன்னணியில் நாடுகள்:


சூரியன் ஓர் அதிபயங்கர நெருப்பு பந்து. சோலாரின் செலவு, நாட்டுக்கு நாடு வேறுபடும். ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள், சூரிய சக்தியை உறிஞ்சுவதில் முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்க எரி சக்தி துறை, வரும் 10 ஆண்டுகளில், வீடுகளிலும், நிறுவனங்களிலும் ஒரு கோடி சூரிய சக்தி சிஸ்டம்களை நிறுவப் போகிறது. இதற்காக, "க்ரீன் ஜாப்ஸ்' என்று கமிட்டி போட்டு விவாதிக்கிறார்கள்.கடந்த 100 வருடங்களுக்கு மேலாக, நாம் அளவுக்கு மீறி ஹைட்ரோ கார்பனை எரித்து, மரங்களை வெட்டி, பூமியில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறோம். இது, நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியாது என்று எண்ணிய சிலர், பூஜ்ஜிய சக்தி கட்டடங்கள் கட்டிக்கொண்டு வசிக்கிறார்கள். தான் உபயோகிக்கும் மின்சாரத்தை தானே தயாரித்துக் கொள்ளும் கட்டடங்கள் இவை. விஞ்ஞான வாஸ்துப்படி கட்டப்பட்ட இந்த வீடுகளில், சுவர், கூரை முழுவதும் சன்ன சூரியப் படலத்தைப் போர்த்தியும், மொட்டை மாடியில் காற்றாலை அமைத்தும் வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வீட்டைக் கட்டும்போதே, இயற்கையான வெளிச்சத்தையும் காற்றையும் உபயோகிக்குமாறு டிசைன் செய்வதும் அவசியம்.சோலார் சிம்னி என்ற அமைப்பு, சூரிய சக்தியால், காற்றை சூடாக்கி, ஒரு எக்ஸாஸ்ட் பேன் மாதிரி மேலே இழுக்கக் கூடியது; வீடு குளிர்ச்சியாகி விடும். நவீன மேற்கத்திய ஆர்க்கிடெக்டுகள், சொலேரியம், சன் ரூம், க்ரீன் ஹவுஸ் என்றெல்லாம் அமைத்து, சூரிய வெளிச்சத்தை உள் வாங்கும் வீடு கட்ட சொல்லித் தருகின்றனர்

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

20130119e_01810500301.jpg


தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில்
நடந்தது. இதில் நேரு யுவகேந்திரா மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்
ஜெயபிரகாஷ் பேசினார்.

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டி, ஜன. 18:
தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில்
நடந்தது.



தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா, கூடலூர் நுகர்வோர்
மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் விழிப்புணர்வு சங்கம்
ஆகியவை சார்பில் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டியில் உள்ள ரமணா கல்வி பயிற்சி மையத்தில் நடந்தது.

பயிற்சி மைய முதல்வர் சுரேஷ் வரவேற்றார். 

விழாவிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில், உடல் உறுப்புகளை தானம் செய்வதால் மரணத்தின் பிடியில் உள்ள ஒருவரை காப்பாற்ற முடியும். நம் உடலில் இருந்து சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம், கணையம், தோல், எலும்பு போன்ற உறுப்புகளை தானம் செய்யலாம். ஒருவர் தனது வாழ்நாளில் குறைந்தபட்சம் 100 முறையாவது ரத்த தானம் செய்து உயிர் காக்க முடியும்
என்றார்.



நேரு யுவகேந்திரா மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில்,
�இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் நல்ல சமுதாயம் அமைய இணைந்து பாடுபட
வேண்டும். தற்போது இளைஞர்களிடையே போதை பழக்கம் பெருகி வருகிறது. இதில்
இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும். இளைஞர் மன்றங்கள் சிறப்புடன் செயல்பட
நேரு யுவகேந்திரா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது� என்றார்.



இந்நிகழ்ச்சியில், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன்,

மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் மற்றும்
பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள்


உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

19_01_2013_263_018.jpg


ஊட்டி:"உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும்' என,
வலியுறுத்தப்பட்டது.



மத்திய அரசின் நேரு யுவகேந்திரா நீலகிரி கிளை,
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,


ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து, ஊட்டி ரமணா பயிற்சி மையத்தில்,
தேசிய இளையோர் தின விழாவை நடத்தின.


பயிற்சி மைய முதல்வர் சுரேஷ் வரவேற்றார். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், ""உடல் உறுப்பு தானம் செய்வது, மிகப் பெரிய தியாகம். ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறையாவது ரத்த தானம் செய்திருக்க வேண்டும்,'' என்றார்.



நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ்
பேசுகையில்,""இளைஞர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட, நேரு யுவகேந்திரா பல
உதவிகளை செய்து வருகிறது. போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளிவர
வேண்டும்,'' என்றார்.



ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர்
ஜனார்த்தனன் பேசுகையில், ""இளைஞர்கள், அரசியல், ஜாதி, மதம், இனம், ரசிகர்
மன்றங்களை கடந்து, சேவை செய்ய வேண்டும்,'' என்றார். 


ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நஞ்சன், "மலைச்சாரல்' கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசினர். 19_01_2013_263_019_001.jpg

மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 


ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

ஊட்டியில் தேசிய இளைஞர் தினம்

 ஊட்டி, ஜன. 13:நேரு
யுவகேந்திரா மற்றும் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஊட்டியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்து பேசுகையில்: இளைஞர்கள், அரசியல், சாதி, மதம், இனம் என்ற அடிமை கோட்பாட்டிலிருந்து விடுபட்டு சமூக அவலங்களை போக்க வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நேரு யுவக்கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் பேசுகையில், இளைஞர்கள் சமூக சேவை பணிகளில் ஈடுபட வேண்டும். இளைஞர் மன்றங்கள் செயல்பட அரசு பல்வேறு உதவிகள் செய்ய வேண்டும் என்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கேத்தி நஞ்சன், நேரு யுவக்கேந்திரா உதவி ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், கவிஞர் நீலமலை ஜேபி., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊட்டி ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

ஊட்டி:ஊட்டி ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஊட்டி ஜெல் மெமோரியல் பள்ளி இணைந்து செயல்படுத்தும், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா பள்ளியில் நடந்தது.
பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை ஷீலாபாப்பையா தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், மன்றத்தை துவக்கி வைத்து பேசுகையில், ""பள்ளி, மாணவ, மாணவியரை குறி வைத்தே, விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மாணவர்கள் ஏமாறாமல் இருக்க, பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை துவக்கி, அதில் மாணவ, மாணவியர் இணைய வேண்டும்,'' என்றார்.
நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் மேரி கிலாடி நன்றி கூறினார்.



ஊட்டி, ஜன. 12:ஊட்டியில் உள்ள ஜெல் மெமோரியல் பெண்கள் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா ஊட்டி ஜெல் நினைவு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜொஸ்வின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் ஷீலா பாப்பையா தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், மாவட்ட அரசு நுகர்வோர் பாதுகாப்பு குழு பிரதிநிதியுமான சிவசுப்பிரமணியம் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் குடி மக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய சூழலில் காலை முதல் இரவு வரை நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் அனைத்தும் விளம்பரங் களை பார்த்தே தேர்வு செய்கிறோம். இதனால் நமது தேவையை விட அதிக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்.
தற்போது பள்ளி மாணவ, மாணவியர்கள், சிறுவர்கள், குழந்தைகளை குறி வைத்தே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மாணவர்கள் ஏமாறாமல் இருக்க நுகர்வோர் சார்ந்த விழிப்புணர்வை அடைய நுகர்வோர் மன்றத்தில் இணைந்து தகவல்களை அறிந்து குடும்பத்தார், உறவினர்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். தரமான பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி மாணவியர்கள் சார்பில் உணவு கலப்படம், தரமற்ற பொருட்கள், போலி விளம்பரங்கள், நுகர்வோர் ஏமாற்றங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மேரி கிலாடி நன்றி கூறினார்.




















குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கம்

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?


அது சரி.. உடல் உறுப்பு தானம் என்றால் என்ன? அதை செய்வது எப்படி?என்று கேட்கிறீர்களா?
“உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ,அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவ தாகும்.

நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன? ???
“உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.உருடன் இருக்கும் போது ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவைகளை தானமாக க் கொடுக்கலாம்.இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா). போன்றவையாகும்
“யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?”
“நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”
“உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”
“18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரிசமமாக முன் வந்து தானம் செய்யலாம்.”
“உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளனவா?”

“ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்புதானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன.”
1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள் இதுதான்:
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும் ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறு நீரகங்களை பரி மாறிக் கொள்ளலாம்.
“தானம்செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?”
“பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப் பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.”
“உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?”
“பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,
ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதி கம் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக் கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழு த்தமாக வோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக் கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்த தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும்.”

“வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?”
“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போ ன்ற அ னைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.
ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரெயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”
“ஒருவரின் மூச்சு – சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?”
“ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் பிறகு நோயாளியை பிழைக்க வைக்க முடியாது.அதாவது சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.”
“உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?”
“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.
கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந் த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது.
இதற்கென்று சில ரசாயன கலவைகளும் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ï ரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயிய ல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்பு க்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.”

“முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?”
“நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெக்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.”1905ஆம் வருடம் டிசம்பர் மாத ம், டாக்டர் எட்வர்ட்ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.1954 ஆம் ஆண்டுதான்,
அமெரிக்காவின் “பாஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனா ல்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
1963 ஆம் ஆண்டு “கொலரா டோ” விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப் டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன்முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ்டார் வெல்’ என்பவரின் இதயத்தை `லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தினார்.
1968ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டி ன் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறுநீரகம்-72 மணி நேரம் வரை
கல்லீரல் – 18 மணி நேரம் வரை
இதயம் – 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை
கணையம் – 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும்
தோல் – 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள்-5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.



 உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?


``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''



``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். "பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?'' "உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.



"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?'' "ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.'' "இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' "இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''



"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''



"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''



"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?'' "18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''



"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?'' "ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி



முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-





1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.



2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.



3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.





"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''



"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''



"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''



"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.





நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''



"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''



"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.



எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''



"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''



"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''



"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''



"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''



"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''



"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.'' 1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.



1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.



1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.





உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?



சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை கல்லீரல் - 18 மணி நேரம் வரை இதயம் - 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை கணையம் - 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும் தோல் - 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் முக்கிய பயன்களை    “திடீர் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப...