மின் வாரிய நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் 13.09.2012


மின் வாரிய அலுவலகத்திலேயே மீட்டர் வழங்க நடவடிக்கை

ஊட்டி, : மின் வாரிய அலுவலகங்களிலேயே மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார். 
ஊட்டி மின் வாரிய அலவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செயற் பொறியாளர்கள் சிவராஜ், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு - மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மின் கட்டணம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வசூலிக்க வேண்டும். மின் மீட்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரியமே மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும். மின் கம்பங்கள் மீது வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும். நுகர்வோர்களிடம் மின் வாரிய உழியர்கள் முறைப்படி நடந்துக் கொள்ள வேண்டும். 
கூடலூர் பகுதியில் விரைவில் 110 கேவி மின் பகிர்மான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பந்தலூர் காபி காடு பகுதிகளில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்றார். 

 மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை தலைமை வகித்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மின்நுகர்வோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. மக்கள் தங்களது குறை களை தெரிவித்தவுடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. மின் கட்டணம் இளையதளம் மூலம் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் மூலம் மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 
 மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தனியாரிடம் சென்று வாங்காமல் மின் வாரிய அலுவலகங்களில் அதற்குண்டான தொகையை செலுத்தி மீட்டர்களை பெற்று கொள்ளலாம். நுகர்வோர்களுக்கு உடனடியாக தேவைப்படுமாயின் மின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடையில் இருந்து வாங்கி தரும் மின் மீட்டர்களையும் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 மின் கம்பங்களில் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்கள் பழுதடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால், உடனடியாக மாற்றி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
படும். 
தற்போது வசூல் மையங்களை தவிர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக வசூல் மையங்கள் அமைப்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இணைய தளம் மூலம் கட்டணங்களை அறிந்துக் கொள்ளவும், செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கூடலூருக்கு உதவி கோட்ட பொறியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பந்தலூர் பகுதிக்கும் கோட்ட பொறியாளர் நியமிககப்படவுள்ளது. நுகர்வோர்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தாழ்நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடலூர் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க தனி நபர் நீதிமன்றம் மூலம் தடை பெறப்பட்டுள்ளதால் அதனை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமரச பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டு விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்
படும். 
தற்போது ராஜீவ்காந்தி கிராமின் வித்யோதி கரன் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் இணைப்புக்கள் வழங்க உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோர் சான்று பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்பிப்போருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தின் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் ராஜன், சுப்பிரமணி, நாகேந்திரன், மின் வாரிய பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...