நியாயம் கிடைக்காமல் தவிக்கும் நுகர்வோர்
வழக்குகள் தேக்கம்... நீதிபதிகள் இல்லை...
நுகர்வோர்
கோர்ட் தலைவராக மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் அரசால்
நியமிக்கப்படுகின்றனர். நுகர்வோரது பிரச்னையாக இருப்பதால் உணவு மற்றும்
பொது விநியோகத்துறையின் கீழ் இதுவரையில் செயல்படுகிறது. மாநில அளவிலான
நுகர்வோர் ஆணையம் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன. இதேபோல் மாவட்டத்திற்கு
ஒன்று என நுகர்வோர் குறைதீர் மன்றமும் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட
திருப்பூர், அரியலு�ர் மாவட்டங்களுக்கு என தனியாக நுகர்வோர் கோர்ட்
உருவாக்கப்படவில்லை. தற்போது 15 மாவட்டங்களுக்கு மேல் மாவட்ட நுகர்வோர்
கோர்ட் தலைவர் பணியிடம் காலியாகவுள்ளது. இன்னும் சிலர் வரும் மாதங்களில்
ஓய்வுபெற உள்ளனர். நுகர்வோர் குறைதீர் மன்றத்தலைவர் பணியிடங்கள்
நாளுக்குநாள் காலியாகிக்கொண்டே போவதால் வழக்குகளில் தீர்வு ஏற்படுவது
தாமதம் ஏற்பட்டு நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே
நபர் கிட்டத்தட்ட 3 மாவட்ட நீதிபதி பணியை மேற்கொண்டு வருகிறார். இதனால்
நுகர்வோரது வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியவில்லை. திருச்சி
மாவட்டத் தலைவர் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களோடு கூடுதலாக நாகர்கோவில்
மாவட்ட வழக்குகளை சேர்த்து விசாரிக்கிறார். இவர் திருச்சியில் இருந்து
நாகர்கோவிலுக்கு போய் வருவதற்கே ஒருநாள் ஆகிவிடும். பிறகு அவர் வழக்கை
எப்படி முழுமையாக, விசாரிக்க முடியும். வழக்கை விரைந்து முடிப்பது என்பதே
மனதளவில் இயலாத காரியமாகவே இருக்கும். மதுரை மாவட்டத்தில் நுகர்வோர் கோர்ட்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடம் கடந்த 2011 ஏப்ரல் மாதம் முதல்
இன்று வரை காலியாகவே உள்ளது. ஸ்ரீவில்லிபுத்து�ர் கோர்ட் தலைவரே
மதுரையையும் சேர்த்து கவனிக்கிறார். இவரே கூடுதலாக தேனி மாவட்ட
வழக்குகளையும் விசாரிக்க வேண்டும்.
சிவகங்கை
மாவட்ட நீதிபதி ராமநாதபுரம், து�த்துக்குடி, நெல்லை மாவட்ட வழக்குகளை
விசாரிக்கிறார். கரூர் மாவட்ட நீதிபதி திண்டுக்கல், சேலம் மாவட்ட வழக்குகளை
விசாரிக்கிறார். இதே நிலை தான் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும்.
இவர்களோடு மாவட்டத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமிக்கவேண்டும். இதில் ஒரு
பெண் கட்டாயம் இடம் பெறவேண்டும். நீதிபதிகளின் நிலையே பரிதாபத்திற்கு
உரியதாக இருக்கும்போது உறுப்பினர்களின் நிலையை சொல்லவா வேண்டும். பல
மாவட்டங்களில் உறுப்பினர்களே இல்லாமல் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உறுப்பினர்களும் பலமாவட்டங்களுக்கு டெபுடேசனில் சென்று பணியாற்றுகின்றனர்.
தமிழகம்
சிவகங்கை
மாவட்ட நீதிபதி ராமநாதபுரம், து�த்துக்குடி, நெல்லை மாவட்ட வழக்குகளை
விசாரிக்கிறார். கரூர் மாவட்ட நீதிபதி திண்டுக்கல், சேலம் மாவட்ட வழக்குகளை
விசாரிக்கிறார். இதே நிலை தான் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும்.
இவர்களோடு மாவட்டத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமிக்கவேண்டும். இதில் ஒரு
பெண் கட்டாயம் இடம் பெறவேண்டும். நீதிபதிகளின் நிலையே பரிதாபத்திற்கு
உரியதாக இருக்கும்போது உறுப்பினர்களின் நிலையை சொல்லவா வேண்டும். பல
மாவட்டங்களில் உறுப்பினர்களே இல்லாமல் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உறுப்பினர்களும் பலமாவட்டங்களுக்கு டெபுடேசனில் சென்று பணியாற்றுகின்றனர்.
சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர்
ஆணையத்திலோ பதிவாளர் பணியிடமே காலி. பதிவாளர் இல்லாமல் எப்படி அலுவலகப்
பணிகள் நடக்கும். யார் எந்த வேலையை செய்வது என்பதிலேயே பாதிநாள் போய்
விடுகிறது. மாநிலம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட உறுப்பினர் பணியிடம் காலி
என்றால் மாநில ஆணையத்திலோ பெண் உறுப்பினர் பணியிடமும் காலி.
தேசிய
நுகர்வோர் தினமான மார்ச் 15 அன்று ஆண்டுதோறும் மாநில நுகர்வோர் ஆணைய
தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்கும் தேசிய மாநாடு நடக்கும். இதில்
மத்திய மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்பர். 2011ல் நடந்த மாநாட்டில்
நுகர்வோர் கோர்ட் தலைவர், உறுப்பினர் மற்றும் பணியாளர்களின் பணிநியமனம்
குறித்த தேர்வுக்குழுவின் பரிந்துரையை மாநில அரசுகள் 30 நாட்களுக்குள்
முடிவு செய்யவேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதன்படி தேர்வுக்குழுவின்
பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மறு தேர்வுக்கு உத்தரவிடலாம்.
தமிழகத்தில்
மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி பணியிடம் காலியானது குறித்து 2 வழக்குகள்
கோர்ட்டில் உள்ளன. இதை சுட்டிக்காட்டியும், தேவையை கருத்தில் கொண்டும்
ஓய்வு பெற்ற நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தகுதியானவர்களின் பட்டியலை 2
முறை தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரையில்
எந்தவிதமான பதிலும் இல்லை. ஏதோ காரணங்களால் நீதிபதி பணியிடங்களை நிரப்ப
அரசும், அதிகாரிகளும் கவனம் செலுத்தவில்லை. இதோடு மாவட்ட நுகர்வோர்
குறைதீர்மன்றங்களில் காலியாக உள்ள பணியாளர்கள் மற்றும் தேவைப்படும்
பணியாளர்களின் விபரங்கள் டிஎன்பிஎஸ்சிக்கும் பலமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பல தேர்வுகளை தொடர்ந்து நடத்தி பல்வேறு துறைகளுக்கு பணியாளர்களை
நியமனம் செய்துவரும் டிஎன்பிஎஸ்சி கூட இங்கு தேவையான பணியாளர்களை நியமிக்க
முன்வரவில்லை. இதனால் ஒட்டு மொத்த நுகர்வோர் கோர்ட்டும் உயிர் இருந்தும்
உறுப்புகள் இல்லாததைப்போல செயல்படமுடியாமல் முடங்கியே உள்ளன.
நுகர்வோரது விழிப்புணர்வை அதிகரிக்கவே மாவட்டங்கள் தோறும் குறைதீர்
மன்றங்கள் துவக்கப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த உணவு மற்றும் பொது
விநியோகத் துறையின் கீழ் நுகர்வோர் கோர்ட்டுகள் செயல்படுகின்றன. அதனால்
நுகர்வோர் கோர்ட்டுகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. பணியிடங்கள்
நிரப்பாததால் மாவட்டம்தோறும் ஆயிரக்கணக்கில் வழக்குகள் தேங்கி உள்ளன. பல
மாவட்டங்களில் பல வழக்குகள் விசாரணைக்கு எடுக்காமலேயே துவக்கநிலையிலேயே
உள்ளன. இப்படியே போனால் நுகர்வோரின் பணி கேள்விக்குரியதாகிவிடும். உலக
பொருளாதார மயம், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்துள்ள
இந்த காலகட்டத்தில் நுகர்வோரின் பங்கு பெரியஅளவில் இருக்கும். இதனால்
நுகர்வோர் சார்ந்த பணிகள் வலுவானதாக இருக்கவேண்டும். எனவே மத்திய, மாநில
அரசுகள் �நுகர்வோர் பாதுகாப்புத்துறை� தனியாக உருவாக்கி அதன்கீழ் நுகர்வோர்
கோர்ட் பணிகளை கொண்டுவரவேண்டும். இதற்கென தனியாக அதிகாரிகளையும்,
அமைச்சர்களையும் நியமிக்கும் பட்சத்தில் நுகர்வோரிடம் மிகுந்த
விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வழக்குகளிலும் விரைவான தீர்வை
காணமுடியும்
காலி பணியிடம்
மதுரை,
நாகபட்டினம், நாகர்கோவில், சேலம், தேனி, திருவள்ளூர், தஞ்சாவூர்,
திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் நீதிபதி பணியிடம்
காலியாகவே உள்ளது. ராமநாதபுரம், சென்னை(வடக்கு), சென்னை (தெற்கு), கோவை,
கடலு�ர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஸ்ரீவில்லிபுத்து�ர், சிவகங்கை,
திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கரூர், விழுப்புரம், நீலகிரி ஆகிய 15
மாவட்டங்களில் ஒரு உறுப்பினர் பதவி காலியாகவே உள்ளது. மதுரை, ஈரோடு,
நாகபட்டினம், பெரம்பலு�ர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை,
வேலு�ர் ஆகிய 9 மாவட்டங்களில் இரு உறுப்பினர் பதவியும் காலியாகவே உள்ளது.
இதுதவிர பணியாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டு போகும் அளவுக்கு உள்ளது.
pls visit our webs
http://cchepnlg.blogspot.in/
http://cchepeye.blogspot.in/
http://consumernlg.blogspot.in/
No comments:
Post a Comment